ஆண்கள் பெண்களுக்காண 10 சிறந்த தினசரி அழகுக்குறிப்புகள்

அழகுக்குறிப்புகள்உள்ளடக்கம்அழகுக்குறிப்புகள்சருமத்தை அழகுபடுத்தும் சிறப்பு தினசரி குறிப்புகள்:

pintrest-iconfacebook-icon

அழகு என்பது குறைபாடற்றது ஒன்றல்ல, அழகு என்பது குறைபாடுகளுக்கு அப்பால் பிரகாசிப்பது”தூய்மை இன்மை மன அழுத்தம்¸ தூக்கம் இன்மை ஒழுங்கீனமான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உணவுப்பழக்கம் என்பன சருமத்தின் நிறம் மற்றும் இயற்கையான ஒளிர்வான தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.மாசுத்தன்மை குறைவாக இருந்த நாட்களை எண்ணிப்பார்த்தால் உணவிலும் காற்றிலும் குறைந்தளவு மாசுப்பொருட்களே இருந்தன.எனவே வெளியே வேலை செய்கின்ற மக்களின் வாழ்க்கை சமனநிலையாகவும் ஆரோக்கியமானதாகவும் காணப்பட்டது.இன்று கையடக்கத் தொலைபேசி அதிகம் பயன்படுத்துவதால் அதில் சோர்வடைந்து விடும் வரை நாங்கள் தூங்குவதில்லை.நாங்கள் அழகு ஆரோக்கியம் என்று வரும் போது அதனை புறக்கணிப்பவர்களாக இருக்கின்றோம்.அதன் பிறகு அதற்காக விரைவான தீர்வுகளை தேடுபவர்களாக இருக்கின்றோம். என்றபோதும் அழகு மற்றும் சருமம் என்று வரும் போது  விரைவான தீர்வுகள் நிலையானவை அல்ல.தோற்றத்தினை அழகுபடுத்தல் என்பது ஒரு கலை மற்றும் பழக்கமும் ஆகும்.சருமத்தை தூய்மைப்படுத்தல் நிறத் திண்மைப்படுத்தல் மற்றும் மிருதுவாக்கல் போன்ற சில அழகுக்குறிப்புகளை வீட்டில் கடைபிடிப்பதன் மூலம் மிக அதிக அளவிலான பணத்தை சிக்கனப்படுத்த முடியும்.நீங்கள் கல்லூரி மாணவியாக வேலைபார்க்கும் பெண்ணாக அல்லது வீட்டைப் பராமரிக்கும் பெண்ணாக இருந்தாலும் கீழ் வருகின்ற அழகுக்குறிப்புக்கள் உங்கள் சருமத்தை சிறந்த முறையில் பராமரிக்க உதவும்.  தினசரி அழகுக் குறிப்புக்கள்

  1. சருமத்தைப் பாதுகாக்கும் சரியான அழகு சாதனப் பொருட்களைத் தெரிவு செய்தல்உங்கள் சருமத்தின் தன்மைக்குப் பொருத்தமான சருமத்தை பாதுகாக்கும் அழகு சாதனப் பொருட்களை தெரிவு செய்யவும்.உங்களது சருமத்தின் தன்மை வரண்டதாகவோ எண்ணைத் தன்மை கொண்டதாகவோ நுண் உணர்தன்மை கொண்டதாகவோ இருந்தால் நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு அது எதிர் விளைவைக் காட்டும் .இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில் சருமத்தை பாதுகாக்கக் கூடிய அழகு சாதனப் பொருட்களை தெரிவு செய்யும் போது அதில் உள்ளடங்கியுள்ள மூலக்கூற்று சேர்க்கைகள் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்.மூலக்கூற்றுப் பொருட்களில் உள்ள சேர்க்கைகளே குறித்த சருமத்தைப் பாதுகாக்கக் கூடிய அழகு சாதனப் பொருட்களின் தன்மையை உயர்த்தக் கூடியது.உற்பத்தியாளரின் குறித்த அழகு சாதனப் பொருள் பயன்படுத்துவதற்கு உகந்தது என்று உறுதிப்படுத்தியதாக இருக்க வேண்டும்.
  2. முதிர்வடைதலை அடையாளப்படுத்தலும் அதனை ஒழுங்கான முறையில் கவனித்தலும்:   வயதடைதலை சரியான தருணத்தில் அடையாளப்படுத்துவதன் மூலம் அதற்கு சரியான சிகிச்சை அளிக்கவும் அதனை தாமதப்படுத்துவும் முடியும்.அதிக சத்துள்ள உணவுகளையும் ஆரோக்கியமான உணவுக்கட்டுப்பாட்டு முறைகளையும் பயன்படுத்துவதன் மூலம் விரைவில் முதிர்வடைதலை தவிர்க்க முடியும்.
  3. சருமத்திற்குப் பொருத்தமான முகப் பெக் இனை தெரிவு செய்தல்:முகப் பெக் என்பது சருமப் பாதுகாப்பிற்கு மிக அத்தியவசியமான ஒன்றாகும்.உங்களுடைய முகப்பெக் உங்கள் சருமத்திற்குப் பொருத்தமானதாக இருந்தால் அது உங்களுடைய சருமத்தை சிறந்த முறையில் பாதுகாப்பதோடு சருமத்திற்கு ஊட்டமும் அளிக்கும் .அத்தோடு பூரணத்துவமற்ற முகப் பெக்கள்(உதாரணம் எண்ணைத் தன்மையுள்ள சருமத்திற்கு எண்ணைத் தன்மை வாய்ந்த முகப் பெக் வரண்ட சருமத்திற்கு வரண்ட முகப் பெக்) சருமம் சார்ந்த பிரச்சினைகளை உருவாக்கும்.அத்தோடு உங்களுடைய சருமத்திற்கு குறித்த சில இரசாயனப் பொருட்களோ வாசனையோ பொருந்தவில்லை என்றால் கட்டாயம் அவ் வகையான பொருட்கள் உங்கள் முகப் பெக் இல் உள்ளடங்கவில்லை என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.மருத்துவர் பரிந்துரைக்கப்படாமல் மருத்துவ ரீதியான முகப் பெக் பயன்படுத்த வேண்டாம்.
  4. உரித்தல்உரித்தல் என்பது வழமையான சருமப் பாதுகாப்பு முறையில் பலராலும் நிராகரிக்கப்படுகின்ற ஒன்று.ஆனால் அது சருமத்தை துப்பரவு செய்தல் நிறத்திண்மைப் படுத்தல் ஈரப்பதமூட்டல் போன்றே இதுவும் முக்கியமானதாகும்.இவை சருமத்தில் உள்ள இறந்த கலங்களை நீக்க உதவுவதோடு சருமத் துளைகளில் உள்ள கழிவுகளையும் நீக்க உதவும்.இதன் மூலம் சருமம் மென்னையாகவும் பொழிவாகவும் காட்சியளிக்கும்.சருமத்தில் மேற்கொள்ளப்படும் மென்மையான உணர்வை முகத்தில் ஏற்படுத்தும் .ஆகவே நீங்கள் உரித்தளினை சருமப்பாதுகாப்பு முறையில் உள்ளடக்க மறக்கக் கூடாது.
  5. இரவு நேரக் கிரீம்சருமம் என்பது சிக்கலான உறுப்பு.அத்தோடு வெப்பநிலை வாயுப்பரிமாற்றம் நோய்க் கிருமிகளுக்கு எதிரான தடுப்பு மற்றும் நீர;த்தன்மையாக்கல் என்பவற்றிற்கு உதவுகின்றது.சருமப் பாதுகாப்பு முறையில் இரவு நேரக் கிரீமை உள்ளடக்குவதன் மூலம் சருமத்தில் வித்தியாசத்தை உண்டாக்க முடியும்.ஒளிரும் சருமம் ஒன்றை மீட்டெடுக்க மிகவும் சிறந்த சிகிச்சையாக அது உள்ளது.ஆகவே நீங்கள் தூங்கும் போது சருமம் ஓய்வாகவும் புத்துணர்வாகவும்இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.
  6. உங்கள் சருமத்தை மிருதுவாக்கல்மிருதுவற்ற சருமம் வெளிர் நிறமாகவும்,மந்தமாகவும் காணப்படும்.அனேகமான தோல் மருத்துவர்கள் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும் என்பதனை முக்கியமாக வலியுருத்துகின்றனர்.(ஓரு நாளைக்கு 2-3 லிட்டர் நீர்)அது நேரடியாக மட்டும் தாக்கத்தை செலுத்துவது மட்டுமல்லாது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களையும்,அசுத்தங்களையும் நீக்கக் கூடியது.போதுமான அளவு சருமத்தை மிருதுவாக்கும் போது அது சருமத்தின் தடிப்பையும் அடர்த்தியையும் அதிகரிக்கும்.முக்கியமாக சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.எப்படி இருந்த போதும் வயதடைதலுக்கான சுருக்கம் மற்றும் ஏனைய அறிகுறிகள் மரபணுவுடனும் சூரிய ஒளி சுற்றாடலுடனும் தொடர்பானவை ஆகும்.
  7. சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்புநேரடியாக சருமத்திற்கு சூரிய ஒளி படும் போது அது சருமத்தின் தன்மையையும் அமைப்பையும் பாதிக்கும்.நேரடியாக சருமத்திற்கு சூரிய ஒளி படுதல் கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.ஆனால் தவிர்க்க முடியாத ஒன்று எனில் SPR 30+ கொண்ட பரந்த நிறமாலை உபயோகிக்க வேண்டும்.முக்கிய குறிப்புநிறமாலை பகுப்பானது நீச்சல் வியர்வை ஏற்படல் மற்றும்  சருமத்தை துடைத்தல் என்பவற்றை மேற்கொண்டால் ஒவ்வொரு 2-3 மணித்தியாளத்திற்கு ஒரு முறையும் உபயோகிக்க வேண்டும்.
  8. சருமத்தை தூய்மைப்படுத்தல்சருமத்தை தூய்மைப் படுத்தலின் மூலம் சருமத்தை மாசு,அசுத்தம் மற்றும் ஒப்பனையில் கலந்துள்ள இரசாயனப் பொருள் என்பவற்றில் இருந்து தெளிவாக்கும்.சருமத்தை தூய்மைப் படுத்தல் என்பது சருமப் பாதுகாப்பு செயற்பாட்டில் மிக முக்கியமாக பயன்படுத்த வேண்டிய ஒன்று.அதிலும் முக்கியமாக ஒப்பனை செய்யப்படும் போது சருமத்தை தூய்மையாக்க வேண்டும்.சருமத்தை தூய்மையாக்கும் பொருட்களை தெரிவு செய்யும் போது நீங்கள் தெரிவு செய்த தூய்மையாக்கும் பொருள் உங்கள் சருமத்திற்கு பொருத்தமானதா?என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.உதாரணமாக உங்கள் சருமம் எண்ணைத் தன்மை அல்லது நுண் உணர் சருமமாக இருந்தால் ,ஒவ்வாமை ஏற்படாத எண்ணைத் தன்மையைக் கட்டுப்படுத்தக் கூடிய மற்றும் பருக்களை தவிர்க்கக் கூடிய தூய்மைப்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
  9. நிறத்தின்மைப் படுத்தல்அது மிக முக்கியமான ஒரு செயற்பாடு சருமத்தை தூய்மைப்படுத்தியதன் பின் மேற் கொள்ளப்படுகின்றது.சருமத்தை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளின் போது சருமத்தில் உள்ள தூசு அகற்றப்படுகின்றது.இதன் போது சருமத்தில் துளைகள் திறக்கப்படுகின்றன.ஆகவே நிறத்தின்மைப்படுத்தல் அத்துளைகளை மூட உதவுவதோடு சருமத்தை அதன் இயற்கை நிலைக்கு மீட்டுத் தருகின்றது.உங்கள் சருமத்திற்குப் பொருத்தமான மென்மையான நிறத்தின்மைப்படுத்திதை  தெரிவு செய்யவும் .எண்ணை தன்மையான சருமத்திற்கு அதனைக் கட்டுப்படுத்துகின்ற 20-60% மதுசாரம் கலக்கப்பட்ட நிறத்தின்மையூட்டிலை பயன்படுத்தவும்.வரண்ட சருமத்திற்கு மதுசாரம் அற்ற மிருதுவாக்கக் கூடிய நிறத்தின்மையூட்டிலைப் பயன்படுத்தவும்.
  10. ஒப்பனை என்பது பகல் நேரத்தில் உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய ஒன்று,நீங்கள் தரம் வாய்ந்த ஒப்பனையையே மேற்கொள்கிறீர்கள் என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.தரமற்ற ஒப்பனை உங்கள் சருமத்தை பாதிக்கும்.இதற்கு மேலாக இன்னொருவருடன் உங்கள் ஒப்பனை பொருட்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.ஏனென்றால் கிருமிகள் மற்றும் நோய்கள் ஒருவரிடத்தில் இருந்து இன்னொருவருக்கு ஒப்பனை பொருட்களை இன்னொருவர் பாவிப்பதன் முலம் பரவலாம்.உங்கள் சருமத்தை அழகாக்கும் ஏனைய அழகுக் குறிப்புக்கள்பெண்களுக்கு அவர்களுடைய சருமத்தை பாதுகாக்கவும் அவர்களுடைய அழகை அதிகரிக்கவும் இன்னும் சில அழகுக் குறிப்புக்கள் உள்ளன.அவற்றைப் பார்க்கலாம்.

சருமப் பாதுகாப்பு சேர்ப்பனவுகள்தற்போது முகப்பருவிற்கு எதிராகவும் வயதடைதலை தவிர்க்கவும் அழகை அதிகரிக்கவும் அதிகளவான சருமப்பாதுகாப்பு சேர்ப்பனவுகள் சந்தையில் கிடைக்கின்றன.அவற்றில் கூடுதலானவை விற்றமீனாகவோ .கனியுப்புக்களாகவோ அல்லது ஏனைய இயற்கைப் பொருட்களாகவோ உள்ளன.முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் விற்றமீன் மற்றும் கனியுப்புகள் உணவுக் கட்டுப்பாட்டுக்கும் சருமப் பாதுகாப்புக்கும் மாற்று வழியல்ல.விற்றமீன் மற்றும் கனியுப்புக்களை வாங்கும் போது பரிந்துரைகக்கப்பட்டவைகளையே வாங்க வேண்டும் உணவுப் பழக்கங்கள்ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் சருமத்திற்குமான தீர்வாகும்.சீரான உணவுப்பழக்கம், பொரித்த காரமான உணவுகளை உண்ணாமல் தவிர்த்தல் போன்ற ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தினால் நோய்கள் வராமல் கட்டுப்படுத்தலாம்.உணவில் சீனியின் அளவை குறைத்தல் மூலமும் பதனிடப்பட்ட உணவுகளை உண்ணாமல் இருப்பதன் மூலமும் சுருக்கம் ஏற்படுவதையும் விரைவில் வயதடைவதையும் தடுக்கலாம்.நீர் அருந்துதல்சருமத்தில் நீர் தன்மை குறைந்தால் சருமம் வெளிர்ந்ததாகவும் வரண்டதாகவும் காணப்படுவதோடு சருமத்தில் வெடிப்பையும் ஏற்படுத்தும்.அதிகமாக நீர் அருந்துதல் மற்றும் உணவில் அதிகளவு நீர் தன்மையுள்ள பொருட்களை சேர்த்துக் கொள்ளுதல் உங்கள் சோர்வடைந்த சருமத்திற்கு புத்துணர்வை ஏற்படுத்தும் .சோடா மற்றும் காவி போன்ற பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும்.ஏனென்றால் அவை உங்கள் உறுப்புகளில் இருந்தும் சருமத்தில் இருந்தும் நீரை அகற்றக் கூடியது.உடற்பயிற்சி மற்றும் யோகாசிலவகை உடற்பயிற்சி மற்றும் யோகா என்பன சருமத்தில் உள்ள,சில தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனப் பதார்த்தங்களை நீக்குகின்றது.காலையில் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி  அல்லது யோகா செய்தால் அது மிகச் சிறப்பானது.அவை மனதிற்கு மட்டும் அமைதியைத் தரக்கூடியது அல்ல. மாறாக உங்களுடைய முழுத் தோற்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது.ஆனால் சரியான கொன்னிலை மற்றும் நுட்பங்களை உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் போது பயன்படுத்தல் முக்கியமானது.சில பெண்களுக்கு சிறந்த மிருதுவான சருமம் இருந்தாலும் சில பெண்களுக்கு அவ்வாறில்லை. உங்களுக்கும் சிறந்த மிறுதுவான சருமம் வேண்டும் என்றால் மேலுள்ள இலகுவான வழிமுறைகளை கையாள முடியும்.மேலுள்ள கட்டுரையில் தினசரி அழகுக் குறிப்புக்கள் விளக்கமாக உள்ளது.நீங்கள் பின்பற்றுவதற்கு இலகுவானவையும் வீட்டிலே பயன்படுத்தக்கூடிவையும் ஆகும்.உங்களுக்கு வீட்டிலே உங்கள் உடல் தோற்றத்தை அழகுபடுத்த முடியும் .இவை உங்கள் முகத்தோற்றத்தை மட்டும் அழகுபடுத்தக்கூடியவை அல்ல ஆளுமையையும் காட்டக் கூடியது.