இல் ஆன்லைன் ஆலோசனை கிடைக்கிறது
பதிவு

இல் ஆன்லைன் ஆலோசனை கிடைக்கிறது
பதிவு

சிவப்பழகைப் பெறுவது எப்படி – சிவப்பான சருமத்தைப் பற்றிய சில கட்டுக்கதைகளும் உண்மைகளும்.


Speak To Our Expert

Please enter your contact information.

பலப்பல ஆண்டுகளாகவே மாநிறமாக இருப்பதைவிட நம் சருமம் சிவப்பாக இருப்பதே அழகு, அதுவே உயர்ந்தது என்பது போன்ற நம்பிக்கைகளில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். மேலும் ஊடகங்களில் பல்வேறு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் விஷயங்களும் நமது சருமத்தின் நிறத்தை கருப்பிலிருந்து சிவப்பாக மாற்றுவது சாத்தியம்தான் என்றும் நம்மை நம்பவைத்துள்ளன. இந்த விவரங்கள் நமக்குத் தவறான வழியைக் காட்டுகின்றன என்பதை அறிவீர்களா? அதுமட்டுமன்றி மருத்துவ அடிப்படையிலும் இது முற்றிலும் தவறானது!

அடிப்படையாக உள்ள உங்கள் சருமத்தின் நிறத்தை மாற்றுவது என்பது இயலாத காரியம். ஆனாலும் வெயில் பட்டு தோல் நிறம் மங்குதல் (tan), கரும் புள்ளிகள், பருவிற்குப் பிறகு ஏற்படும் திட்டுக்கள் போன்றவற்றிற்கு மருத்துவ ரீதியாக மிகவும் பாதுகாப்பாக, நன்கு செயல்புரியும் லைட்டனிங் சொல்யூஷன்கள் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். மிகவும் மேம்படுத்தப்பட்ட இந்த அழகியல் சிகிச்சை முறைகள் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இயற்கையாகவே சருமத்தை ஒளிரச் செய்யும். சிவப்பழகு பெறுவது தொடர்பான நமது அர்த்தமற்ற நம்பிக்கைகளைத் தகர்த்து எறிய, இந்தக் கட்டுரையை முழுவதும் படியுங்கள்.

நமது சருமத்தின் நிறத்தைத் தீர்மானிப்பது எது?

பொதுவாக மனிதர்களின் தோலின் நிறம் கருமையிலிருந்து வெளிர் பிரவுன் வரை மாறுபடும். நமது மரபணுக்கைளச் சார்ந்தும், சூரிய ஒளி நம் உடலில் படுவதைச் சார்ந்தும் இது இருக்கும்.

கருமை நிறம் உடைய ஒரு சருமம் எப்போதாவது சிவப்பாக மாற முடியுமா?

சருமத்தின் நிறத்தை முற்றிலும் மாற்றி விட முடியும் என்பது போன்ற போலியான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என உலகெங்கிலும் உள்ள தோல் மருத்துவ நிபுணர்களும், பிளாஸ்டிக் சர்ஜன்களும் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகின்றனர். மருத்துவரீதியாக அவ்வாறு செய்யவே முடியாது. நமது சருமத்தின் நிறத்தையும் இயல்பையும் பல விஷயங்கள் பாதிக்கலாம். ஒரு அனுபவம் மிக்க தோல் மருத்துவர் இவற்றுக்கான சரியான சிகிச்சைகளை அளிக்கும் போது நமது சருமம் நன்கு புத்துணர்வு பெறுகிறது. ஒட்டுமொத்தமாக நன்கு மேம்பட்ட தோற்றத்தைப் பெறுகிறது. அதன் தன்மையும் சீராக மாறுகிறது.

நம் சருமத்தை சிவப்பாக மாற்ற முயற்சி எடுப்பது குறித்து ஏன் எப்போதும் பல கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன?

சிவப்பழகு கிரீம்கள் ஆண்கள் மற்றும் பெண்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளன. மிக அதிக அளவில் இவற்றிற்கான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றைப் பார்த்துப் பார்த்து பலர் தமது கருமை நிற சருமத்தை முற்றிலும் சிவப்பானதாக மாற்றி விடலாம் என்று நம்புகின்றனர். இத்தகைய கிரீம்கள் மார்கெட்டில் மிக அதிகம் கிடைப்பதால் இவற்றை முற்றிலும் தவிர்ப்பது கடினம் தான்.

எச்சரிக்கைக் குறிப்புகள்:

 • மார்க்கெட்டில் தற்போது விற்கப்படும் பல கிரீம்களில் ஸ்டீராய்டுகள், ஹைட்ரோக்வினான், பாதரசம் மற்றும் ட்ரெடிநாயின் போன்ற உட்பொருட்கள் இருக்கும். சருமத்துக்கான கிரீம்களை கட்டாயமாக ஒரு தோல் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுவும் அவர் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும், அவரது வழிகாட்டுதல் கீழே மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு எந்தவிதக் கண்காணிப்பும் இன்றி நீண்ட நாட்களுக்கு இந்த கிரீம்களைப் பயன்படுத்தினால், நிரந்தரமான திட்டுக்கள், சருமம் மெலிதாகி சுருக்கங்கள் விழுதல். இயல்புக்கு மாறான கூச்ச உணர்வு, வெடிப்புகள், அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படலாம். மேலும் இத்தகைய கிரீம்களை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் மெதுவாக நமது இரத்தத்தில் கலந்து விடலாம். அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்புகள் வரலாம்.
 • இந்த சிவப்பழகு கிரீம்கள், நமது சருமத்தின் தன்மையை மனதில் கொண்டு தயாரிக்கப்படுவதில்லை. மேலும் நமது தோலின் அடிப்புறத்தில் சேரும் மெலனின் மீதும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.
 • வெகுவிரைவில்/ஒரே நாளில் சிவப்பழகை அடைந்து விடலாம் என்னும் தவறான வாக்குறுதிகள், எளிதாக எல்லாரையும் சென்று அடைவதால் இத்தகைய பொய்யான கருத்துக்கள் நிலவுகின்றன. பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் வீடியோக்களும் உங்களது சருமத்தை உடனடியாகவும் நிரந்தரமாகவும் சிவப்பாக மாற்றுவதற்கான தயாரிப்புகளைப் பற்றி கூறிக் கொண்டே இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக எந்தவிதமான அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளும் ஆதாரங்களும் இல்லை. இந்தக் கூற்றுகளுக்கான நிரூபணங்களும் இல்லை.

வித்தியாசங்களை உணருங்கள்:

சொற்றொடர்கள் விளக்கம் கிடைக்கும் தீர்வு
சிவப்பான சருமம் சருமம் சிகப்பாக விளங்குதல் சருமத்தின் இயற்கையான அடர்ந்த நிறத்திண்மையை (tone) மருத்துவ முறைப்படி சிவப்பாக மாற்ற முடியாது
பளபளக்கும் தீர்வுகள் சருமம் சீரற்ற தன்மையை கொண்டிருத்தல் இரசாயன முறைகள் மூலம் பீல் முறைகள், லேசர் டோனிங் முறைகள்
ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைகள் சருமத்தின் இயற்கையான நிறத்தை மீண்டும் கொண்டு வருதல் லேசர் மூலம் டோனிங் சிகிச்சை
சருமத்தின் நிறமிழத்தல் சருமத்தின் நிறம் இழக்கும் படியாக செய்யும் திட்டுக்கள் இரசாயன முறையில் பீலிங்
திட்டுக்கள் ஏற்படுதல் சருமத்தின் சீரற்ற நிறத்திண்மை (Uneven tone) லேசர் டோனிங் சிகிச்சை
சருமம் ஒளியிழந்து காணப்படுதல் & வயதாவதனால் புள்ளிகள் தோன்றுதல் வயதாவதனால் பிரெளன் அல்லது கருப்பு புள்ளிகள் தோன்றுதல் லேசர் டோனிங் சிகிச்சைகள் மற்றும் தோல் மருத்துவர் பரிந்துரைத்த ஸ்கின் லைட்டனிங் கிரீம்கள்
அடர்ந்த கருப்புப் புள்ளிகள் அதிக அளவு சூரிய ஒளி படுவதால் பிரெளன் அல்லது கருப்பு வடுக்கள் இரசாயனப் பொருட்கள் மூலம் பீலிங்

 

உடனடி சிவப்பழகு சிகிச்சைகளினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்:

சிவப்பழகு பெறுவதற்கு இத்தகைய உடனடி தீர்வுகளைத் தவிர்ப்பது நல்லது. கீழ்க்கண்ட பக்க விளைவுகள் ஏற்படலாம்:

 • சருமத்தின் கனம் குறைதல்
 • முகத்தின் நிறம் மாறுதல்
 • மிகச் சிறிய இரத்தக் குழாய்களான துந்துகிகள் (capillaries) அதிகமாகத் தெரிவது
 • கடுமையான பருக்கள்
 • சூரிய ஒளி பட்டாலே கூசுதல்
 • மீண்டும் திட்டுக்கள் தோன்றுதல்
 • முகத்தில் தேவையற்று முடி வளருதல்
 • சருமத்தில் ஒவ்வாமை

உடனடியாக சிவப்பழகு பெறுவதற்கு இவை போன்ற சிகிச்சை முறைகளால் ஏற்படும் பக்க விளைவுகளை நன்கு அறிந்து கொண்டதால் பாதுகாப்பான, தேர்ந்த தோல் மருத்துவர்கள் தரும் முறைகளைப் பார்க்கலாம். இத்தகைய பாதுகாப்பான முறைகள் மூலம், எவ்விதக் குறையும் இல்லாத சீரான சிவப்பழகு பெறலாம்.

பாதுகாப்பான ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைகள்

உங்கள் சருமத்தின் இழந்த பொலிவையும் இயற்கையான நிறத்தையும் மீட்டு மீண்டும் உங்கள் சருமத்தை ஜொலிக்கச் செய்திட, கீழ்க்கண்ட சிகிச்சை முறைகளில் ஏதேனும் ஒன்றையோ அல்லது சிலவற்றை இணைத்தோ பரிந்துரைக்கலாம்.

 • லேசர் டோனிங்: இந்த ஸ்கின் லைட்டனிங் சிகிச்சை முறை அதிநவீன லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆழமாக உள்ள திட்டுக்களை அகற்றுகின்றன. சருமத்திற்கு இளமையான தோற்றத்தையும் கொடுக்கிறது. இந்த சிகிச்சை அளிக்க உங்கள் தோல் மருத்துவர், Q-Switched Nd:YAG லேசர் கதிர்களைப் பயன்படுத்தி, சருமத்தில் உள்ள கூடுதல் மெலனின்னை தகர்த்து விடுவார். மிகச் சிறிய துகள்களாகிய பின்பு இவை நமது உடலின் நோய் எதிர்க்கும் செல்களால் வெளியே தள்ளப்பட்டுவிடும்.
 • மைக்ரோடெர்மாஅபரேஷன்: இந்த சிகிச்சையில் தோல் மருத்துவர், அலுமினியம் ஆக்ஸைடு கிரிஸ்டல்கள் அல்லது முனைகளில் வைரத்தைக் கொண்ட மிகக் கூர்மையான சிறு உபகரணங்களைக் கொண்டு, சருமத்தின் மேல் உள்ள இறந்து போன செல்களை நீக்கி விடுவார். அப்போது உங்களுக்கு மாசில்லாத பளிச்சென்ற சருமம் கிடைக்கும்.
 • இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தி செய்யப்படும் பீல்கள்: இந்த சிகிச்சை, ஆல்ஃபா அல்லது பீடா ஹைட்ராக்ஸி அமிலங்கள் கொண்ட, தோலை மிக கவனமாக உரிக்கக்கூடிய ஒரு கரைசலைக் கொண்டு செய்யப்படுகிறது. இந்தக் கரைசல் மிகக் கவனமாக சருமத்தின் மேல் பகுதியை, அதில் உள்ள இறந்து போன செல்களை சுரண்டுகிறது. எனவே சருமம் பளிச்சிட்டு புத்துணர்வு பெறுகிறது. இந்த சிகிச்சை மூலம் கரும் திட்டுக்கள், புள்ளிகள், சிறு சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்க முடியும்.
 • ஆர்புடின்: பியர்பெர்ரி செடிகளில் இருந்து எடுக்கப்படும் சாறுதான் ஆர்புடின். இந்த இயற்கையான சாறு உங்கள் சருமத்தின் கருந்திட்டுக்களை நீக்கி, சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.
 • ரெடினால்: ரெட்டினால் என்பது வைட்டமின் A யின் இயற்கையான வடிவம் என்று கூறலாம். சருமத்தின் இறந்த செல்களை நீக்கவும், கொலாஜன் சுரப்பதை அதிகரிக்கவும் இந்த ரெடினாலை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.
 • வைட்டமின் C: பல்வேறு காய்கறிகளிலும், பழங்களிலும் வைட்டமின் C மிக அதிக அளவில் கிடைக்கும் என்பதை நாம் அறிவோம். தோல் மருத்துவர்கள், சருமத்தின் நிறத்தை மேம்படுத்த, இந்த வைட்டமின் C நிரம்பிய கிரீம்களை/லோஷன்களைப் பரிந்துரைப்பார்கள்.

லேசர் முறையில் ஸ்கின் வைட்டனிங் செய்வதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

சருமத்தின் சிகப்பழகை வெகு நாட்களுக்குத் தக்கவைத்துக் கொள்வது எப்படி?

இத்தகைய பல சிகிச்சை முறைகள் மூலம் உங்களுக்கு இயற்கையான, புத்துணர்ச்சியுள்ள ஆரோக்கியமான சருமம் கிடைக்கும். ஆனால் அதை நீண்ட காலம் தக்கவைத்துக்கொள்ள கீழ்க்கண்ட குறிப்புகளை பின்பற்றவேண்டும்.

(1) தினசரி தவறாமல் சருமத்தைப் பராமரிக்கும் சில வழக்கங்களை மேற்கொள்ளுதல் அவசியம்: உங்கள் சருமத்தை பராமரிக்க முறையான வழக்கங்களைப் பட்டியலிட்டு அதைத் தவறாது பின்பற்ற வேண்டும். உங்கள் சருமத்தைப் பராமரிக்க, முதலில் உங்கள் சருமத்தின் வகையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்; பின்பு அதற்கு ஏற்ற தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மிகச் சிறந்த சருமத்தைப் பெற கட்டாயமாக இந்த 4 வழிமுறைகளைப் பின்பற்றவும்.

 • கிளென்ஸிங்/சுத்தம் செய்தல் – முதலில் முகத்துக்கு ஒரு ஃபேஷியல் கிளென்ஸர் பயன்படுத்தி முகத்தில் உள்ள தூசி, அழுக்கு, மேக்அப் போன்றவற்றை மிக மிக சுத்தமாக நீக்க வேண்டும். இதை ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் தவறாது செய்யவும்.
 • மாய்ச்சரைசிங் / ஈரப்பதமாக்குதல் – எப்போதும் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க ஒரு நல்ல மாய்ச்சரைசரைப் பயன்படுத்துவது மிக மிக அவசியம். எண்ணெய்ப் பிசுபிசுப்பு கொண்ட சருமமாக இருந்தால் தண்ணீர் கொண்ட மாய்ச்சரைசரைப் பயன்படுத்துவது நல்லது.
 • எக்ஸ்ஃபோலியேடிங் (உரிதல்): ஒரு மிதமான ஸ்கிரப்பை, வாரம் ஒரு முறையோ இரு முறையோ பயன்படுத்தி ஆழமாக சுத்தம் செய்யவும்.
 • சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல் – வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் SPF 30க்கு மேலுள்ள சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும். வெளியே செல்வதற்கு 15 – 20 நிமிடங்களுக்கு முன்பு இதைப் பயன்படுத்த வேண்டும்.

(2) ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளவும்: நமது சருமம் இயற்கையாக பளபளக்க, நல்ல ஆரோக்கியமான உணவு மிகவும் அவசியம். தினசரி உணவில் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், மீன், முழு தானியங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். மது அருந்துவதைத் தவிர்ப்பதும், எண்ணெயில் பொறித்த உணவுகள், மிக அதிக இனிப்பு உள்ள உணவுகளைச் தவிர்ப்பதும் மிக நல்லது இவற்றின் மூலம் பளிச்சென்ற ஒளி மிகுந்த சருமத்தைப் பெற முடியும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பல விஷயங்களைப் புரியவைத்திருக்கும் என்றும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்றும் நம்புகிறோம். தயவு செய்து உடனடியாக சிவப்பழகு தருகிறோம் என்று சொல்லி ஏமாற்றுபவர்களை நம்பாமல் மிகக் கவனமாக இருக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். நல்ல அனுபவமுள்ள, சரியாகப் படித்து, சான்றிதழ் பெற்ற மருத்துவர்களிடம் மட்டுமே சென்று உங்கள் சருமத்தைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு பின்பு செயல்படுவது அவசியம். உங்கள் சருமம் ஒளியிழந்து காணப்படுவதற்கு உண்மையான சரியான காரணங்களை அறிந்து கொள்வது மிக மிக அவசியம். இவை அனைத்தையும் மனதில் கொண்டு சரியான ஸ்கின் பிரைட்டனிங் மற்றும் ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள முடிவெடுக்கவும். அந்த சிகிச்சைகளையும் நல்ல புகழ்பெற்ற கிளினிக்குகளில் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமான பளிச்சென்ற, இளமை ததும்பும் புத்துணர்வு மிக சருமத்தைப் பெறவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

லேசர் மூலம் சருமத்தை சிவப்பாக்கும் சிகிச்சைக்கு பிறகு என்னென்ன மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும்?

உங்கள் சருமத்தின் இயல்பை, நயத்தை மேம்படுத்தக் கூடிய சிகிச்சைகளில் ஸ்கின் லைட்டனிங் மற்றும் ஸ்கின் பிரைட்டனிங் ஆகியவை மிக மேம்பட்ட சிகிச்சை முறைகள். இவை அமெரிக்காவின் FDA ஒப்புதல் பெற்றவை. எனவே பாதுகாப்பானவை. லேசர் டோனிங் முறை மூலம் உங்கள் சருமத்தின் இயற்கையான பொலிவை மீட்க முடியும். ஆனாலும் இயற்கையிலேயே உங்களுக்கு அடர்ந்த நிறமுடைய சருமம் இருந்தால் அதை முற்றிலும் சிவப்பாக மாற்ற முடியாது.

ஸ்கின் வைட்டனிங் சிகிச்சைகள் யாருக்குப் பொருந்தாது?

ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைகள், ஸ்கின் வைட்டனிங் தீர்வுகளிலிருந்து வேறுபட்டவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஸ்கின் வைட்டனிங், மருத்துவ அடிப்படையில் மிகவும் பாதுகாப்பானது இல்லை. நல்ல சீரான சருமத்தைப் பெற, 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் லேசர் டோனிங் சிகிச்சை அல்லது இரசாயன பீல் போன்ற சிகிச்சை முறைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆயினும் கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் மகளிர் ஆகியோர் இதைத் தவிர்க்க வேண்டும்.

லேசர் ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைக்குப் பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா?

நீங்கள் எந்தவிதமான ஸ்கின் லைட்டனிங் சிகிச்சை எடுத்துக் கொள்வதாக இருந்தாலும் முதலில் ஒரு அனுபவம் மிக்க தோல் மருத்துவரை சந்திப்பது மிக மிக அவசியம். நல்ல புகழ்பெற்ற ஸ்கின் கிளினிக்குகளில், US-FDA சான்றிதழ் பெற்ற சாதனங்களைப் பயன்படுத்தி இந்த சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால் ஆபத்துக்கள் இன்றி, விரைவில் பலன்களை பெறலாம்.

UPTO 50% Off on Laser Hair Removal
UPTO 50% Off on Laser Hair Removal

Was this article helpful?

About The Author


Subscribe to Newsletter

Expert guide to flawless skin and nourished hair from our dermatologists!