- Home
- முடி உதிர்தல் சிகிச்சை(Hair Loss)
முடி உதிர்வதைத் தடுக்க, அறுவை சிகிச்சையற்ற சிறந்த சிகிச்சைகள்
முடி மீண்டும் வளர்வதற்கான சிகிச்சையுடன் வழுக்கை விழுவதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துதல்
தொடர்ந்து முடி கொட்டுவது அதிகமாகிக்கொண்டே போகும் போது நமக்கு தலையில் வழுக்கை விழுகிறது. இது தற்போது அனைத்து வயதினரையுமே பாதிக்கிறது. சொல்லப் போனால் 20 வயதுக்காரர்களைக் கூட பாதிக்கிறது. மேலும் முடி அதிகம் கொட்டுவது தற்போது அழகு சார்ந்த ஒரு பிரச்சனையாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் வழுக்கை விழுவதைத் தடுக்க மிகப் பலர் நல்ல சிகிச்சையை எதிர்பார்க்கின்றனர்.
முடி மிகவும் மெலிந்துபோவதையும், முடி கொட்டுவதையும் தவிர்க்க தற்போது மிக மேம்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. முடி கொட்டிய இடத்தில் மீண்டும் இயற்கையாக முடி வளர்வதற்கு ஒலிவாவில் மிகச் சிறந்த அறுவை சிகிச்சையற்ற சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஒலிவாவில் உள்ள மிகப் பெரிய அனுபவம் மிக்க, மருத்துவர்கள் இன்றுவரை 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட (தலைமுடி கொட்டுவதற்கான) சிகிச்சைகளை அளித்து வெற்றி நடைபோடுகின்றனர்.
முடி கொட்டுதல் மற்றும் வழுக்கை விழுதல் என்றால் என்ன?
முடி கொட்டுதல் மற்றும் வழுக்கை விழுதல் என்றால் என்ன?
முடி கொட்டுவதை மருத்துவத்துறையில் அலோபேசியா என்று குறிப்பிடுவார்கள். பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு முடி கொட்டலாம் – மரபணு சார்ந்த காரணங்கள், வாழ்க்கை முறை, மன அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடு, நீண்ட நாட்களாக உள்ள நோய்/பிரச்சனைகள், ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்கள் போன்ற பல காரணங்களால் முடி கொட்டலாம். இது பல்வேறு விதமாக (கீழ்க்கண்டவை உட்பட) வெளிப்படலாம்:
- மிக அபாயகரமான / அதிக அளவில் முடி கொட்டுதல்
- நெற்றியின் இரு புறங்கள், தலையின் முன்பகுதி, வகிடு எடுக்கும் இடம் போன்ற இடங்களில் அதிக முடி கொட்டுதல்
- முடி கொட்டி, தலையில் வட்டவட்டமாக வழுக்கை விழுதல்
- தொடர்ந்து முடி வேகமாகக் கொட்டுவதாலும், வளரும் முடியின் ஆயுட்காலம் குறைவதாலும் வழுக்கை விழுதல்
இந்தப் பிரச்சனையின் ஆரம்ப காலத்திலேயே ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக் கொண்டால் முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் ஆகியவற்றைத் தடுக்கலாம். மீண்டும் முடி வளரவும் இச் சிகிச்சைகள் உதவும்.
முடி கொட்டுவதைத் தவிர்க்க ஒரு முழுமையான தீர்வு எது?
முடி கொட்டுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்பதை நாம் அறிவோம். எனவே அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக, அடிப்படைக் காரணத்தைத் துல்லியமாக அறிந்து ஆராய்வது மிகவும் அவசியம். தகுதியும் அனுபவமும் பெற்ற ஒரு மருத்துவர் உங்களைப் பரிசோதித்து, உங்கள் மருத்துவப் பின்னணியையும் நன்கு ஆராய்ந்து அதற்கு பிறகுதான் முழுமையான தீர்வளிக்கக் கூடிய சிகிச்சை முறையைத் திட்டமிடுவார். ஆரம்ப நிலையிலேயே மருத்துவரின் உதவியைப் பெற்றால், முடி கொட்டுவதை நிறுத்துவதற்கும், மீண்டும் முடி வளரச் செய்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவும்.
முடி கொட்டுவதை எப்படி அறியலாம்?
முடி கொட்டுவதை நிறுத்துவதற்கு, ஒலிவா கிளினிக்கில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை பெற பதிவு செய்த கொண்ட பிறகு, கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெறும்:
- எங்களது கிளினிக்கில் உள்ள சிறப்பு மருத்துவ வல்லுநர்கள், உங்களுடன் நன்கு கலந்து ஆலோசித்து, உங்களைப் பரிசோதித்து கீழ்க்கண்டவற்றை நன்கு அறிந்து கொள்வார்கள்: உங்கள் மருத்துவப் பின்னணி, எத்தனை காலமாக முடி கொட்டுகிறது, அந்தப் பிரச்சனையின் தீவிரம், உங்கள் பொதுவான உடல் ஆரோக்கியம், உங்கள் உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, சமீபத்தில் உங்களுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்பு இருந்ததா, சமீபத்தில் மிகுந்த மன அழுத்தத்தைத் தரக் கூடிய நிகழ்வுகள் ஏதேனும் இருந்ததா என்பது பற்றியெல்லாம் அறிந்து கொண்டு நன்கு ஆராய்வார்கள்.
- தகுதியும் அனுபவமும் பெற்ற எமது டிரைகாலஜிஸ்ட்கள் இதற்கான ஒரு சிறப்பான சாதனத்தின் உதவிகொண்டு டிரைகோஸ்கோபி என்னும் பரிசோதனையை மேற்கொள்வார்கள். இதன் மூலம் உங்கள் தலைமண்டைப் பகுதியின் தற்போதைய நிலை, தலைமுடியின் நிலை, முடி கொட்டும் பிரச்சனையின் தீவிரம் ஆகியவற்றை அறிந்து கொள்வார்கள்.
- ஒலிவாவில் உள்ள மருத்துவர்கள் சில சமயங்களில் இரத்தப் பரிசோதனை போன்ற மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யச் சொல்லி பரிந்துரைக்கலாம். அவற்றின் மூலம் ஊட்டச்சத்துக் குறைபாடுகள், ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றை இன்னும் தெளிவாக அறிந்து கொள்வார்கள்.
- விரிவாக உங்களைப் பரிசோதித்து, காரணங்களை நன்கு அறிந்த பிறகு ஒலிவாவில் உள்ள மருத்துவ நிபுணர்கள் உங்களுக்கான தனிப்பட்ட சிகிச்சைத் திட்டத்தைத் தயாரிப்பார்கள்.
இங்கே வழங்கப்படும் சிகிச்சைகள் என்னென்ன?
ஒலிவாவில் உள்ள, தலைமுடிக்கான சிறப்பு சிகிச்சை நிபுணர்கள், கீழ்க்கண்ட சிகிச்சைகளைத் தனியாகவோ அல்லது சிலவற்றை இணைத்தோ பரிந்துரைப்பார்கள்:
- உங்கள் தலைமுடியின் வகை மற்றும் தலைமண்டைப் பகுதி ஆகியவற்றினைப் பொருத்து, தலைமுடியைப் பராமரிக்கும் விதத்தை, உங்களுக்கு ஏற்ற தனிப்பட்ட முறைகளைப் பரிந்துரைக்கலாம்.
- உங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், உங்கள் உணவுகளில் சில மாற்றங்களைப் பரிந்துரைக்கலாம். இது உங்கள் சிகிச்சையின் ஒரு பகுதியாகவே இருக்கும்.
- பாதிக்கப்பட்ட இடத்தில் தடவிக்கொள்ளும் கிரீம் அல்லது ஸ்பிரே அல்லது சொல்யூஷன்களைப் பரிந்துரைக்கலாம். இவையும் தலைமுடி கொட்டுவதைத் தடுக்கும் சிகிச்சையில் பெரும் உதவியாக இருக்கும்.
- சில சமயங்களில், எமது மருத்துவர்கள் சிகிச்சைகளுடன் வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை, வைட்டமின் மாத்திரைகள், ஆன்டி-ஆன்ட்ரோஜென்ஸ் உட்பட, பரிந்துரைக்கலாம்.
- வழுக்கை விழுவதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து, மீண்டும் முடி வளரச் செய்ய மிகவும் குறைந்த அளவே ஊடுருவும் சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. இவை வலியே இல்லாத சிகிச்சைகள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
- அலோபேசியா ஏரியாடா போன்ற சில குறிப்பிட்ட குறைபாடுகளுக்கு மிகச் சிறப்பான ஊசிகளை எமது சிறப்பு மருத்துவர்கள் செலுத்துவார்கள்.
முடி கொட்டுவதற்கான சிகிச்சையைப் பெற ஒலிவாவை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
இத்தகைய சிகிச்சையைப் பெற ஒலிவாவைத் தேர்ந்தெடுக்க மிக முக்கிய காரணங்கள் இவை:
- மிகச் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 100% பாதுகாப்பானவை. திறம்படச் செயல்படக் கூடியவை. அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகள்; பலன்களைப் பெற நீண்டநாட்கள் காத்திருக்கத் தேவையில்லை.
- இங்கு USFDA ஒப்புதல் பெற்ற சாதனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையான முறையில் முடி வளரச் செய்ய அதிநவீன தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
- உங்களுக்கு முடி கொட்டுவதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கேற்ப எமது சிறப்பு தோல்-முடி சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் (dermato-trichologists) உங்களுக்கான தனிப்பட்ட சிகிச்சைத் திட்டத்தைத் தயாரிப்பார்கள்.
- உங்களுக்குத் தரப்படும் தனிப்பட்ட அக்கறையுடன் கூடிய சேவைகள் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல், நீண்ட நாட்கள் பலன்களைத் தரக்கூடியவையாக இருக்கும். சிகிச்சைக்கு முன்னும் பின்னும் அவர்கள் வழங்கும் அறிவுரைகளும் சேவைகளும் இவற்றை உறுதி செய்யும்.
- இன்று எமது பிராண்ட், மக்களின் நம்பிக்கையை மிகப் பெரிய அளவில் பெற்று வெற்றி நடைபோடுகிறது. ஏறக்குறைய 2.5 லட்சம் திருப்திகரமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது என்பதும் தனிச் சிறப்பாகும்.
இந்த சிகிச்சையைப் பெறப் பொருத்தமானவர்கள் யார்?
18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து, தொடர்ந்து முடி கொட்டுவது அதிகரித்துக் கொண்டே போனால், மற்றும் தலைமண்டைப் பகுதியில் இயல்புக்கு மாறாக அரிப்பு, சிவந்துபோகுதல், செதில் செதிலாக உருவாகுதல், இள வயதிலேயே வழுக்கை விழுதல் போன்றவை இருந்தால், அல்லது ஹார்மோன் மாற்றங்களினால் தலைமுடி அதிகமாகக் கொட்டினால், கட்டாயமாக ஒலிவா கிளினிக்கிற்கு வந்து எமது மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெறலாம்.
ஒலிவாவில் கூடுதலாக உங்களுக்கு எத்தகைய உதவிகளும் சேவைகளும் கிடைக்கும்?
தொடர்ந்து முடி மீண்டும் வளர்வதற்கு உதவும் வகையில் ஒலிவாவில் மருத்துவர்கள் கீழ்க்கண்ட ஆலோசனைகளைத் தரலாம்:
- நல்ல, சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளுதல்.
- ஆரோக்கியமான, வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்தல்.
- தலைமுடிப் பராமரிப்பிற்கான தினசரி கடைப்பிடிக்க வேண்டிய மிகச் சரியான வழிகளைப் பின்பற்றுதல்.
எப்படி சிகிச்சையைப் பெறலாம்
ஆன்லைன் மூலமாகவோ 1800-103-3893 என்ற எண்ணை அழைத்தோ நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். எங்களது வாடிக்கையாளர் சேவைக் குழுவினர், உங்களுக்கு வசதியான நாளில், வசதியான நேரத்தில் எங்களது மருத்துவ நிபுணர்களை சந்திக்க உதவுவார்கள்.
இங்கே எமது தோல் மருத்துவர்கள், தலைமுடி கொட்டுவதற்கான சிகிச்சைகளைப் பற்றி விளக்குவார்.
முடி கொட்டுவது, முடி உதிர்வது, சில குறிப்பிட்ட வடிவங்களில் வழுக்கை விழுதல் போன்றவற்றுக்கு ஒலிவாவில் உள்ள மருத்துவர்கள் மேம்பட்ட தீர்வுகளையும் சிகிச்சைகளையும் அளிக்கின்றனர். முடி மீண்டும் வளர்வதற்கான எமது சிகிச்சைகளைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு, அவை உங்களுக்கு எந்த அளவு உதவியாக இருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள்.
*Images are from real clients, and results can be subjective
முடி கொட்டுவதற்கான சிகிச்சைக்கு முன்னும் பின்னும்
முடி மீண்டும் வளர்வதற்காக, ஒலிவாவில் சிகிச்சை பெற்ற, சிலரது புகைப்படங்கள் – சிகிச்சைக்கு முன்னும் பின்னும்.
Treatment results may vary from person to person
Why Oliva
Experienced in-house team of
Certified DermatologistsComprehensive one-to-one
consultation with the doctorAdvanced US-FDA approved
equipmentWell trained and certified
therapistsServed 6,00,000 happy customers
and countingStringent guidelines and set
protocols for better service efficacy
உங்களுக்கு உள்ள முடி கொட்டும் பிரச்சனை எந்த வகையைச் சேர்ந்தது, அப்பிரச்சனை எந்த அளவு தீவிரமாக உள்ளது என்பவற்றைப் பொருத்து, இச் சிகிச்சைக்கான கட்டணமும் மாறுபடும். இவற்றை நன்கு ஆராய்ந்த பிறகு, இங்குள்ள மருத்துவர் உங்களுக்குரிய சரியான சிகிச்சையைப் பரிந்துரைப்பார். அவர் தேர்ந்தெடுக்கும் சிகிச்சையைப் பொருத்தும் கட்டணங்கள் மாறுபடலாம். இவை பற்றி மேலும் விவரங்களை அறிய எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.
பொதுவாக ஒலிவாவில் உள்ள மருத்துவர்கள், முடி வளரச் செய்யும் சிகிச்சையைப் பெற 6-8 முறை வரச் சொல்லுவார்கள். சிறந்த பலன்களைப் பெற ஒரு முறைக்கும் மற்றொரு முறைக்கும் இடையே 1 மாதமாவது இடைவெளி இருக்க வேண்டும். மேலும் சிகிச்சை முடிந்த பிறகு, பராமரிப்பிற்காக சில முறை வரச் சொல்லலாம்.
ஒலிவாவில் தலைமுடி வளர்வதற்கான சிகிச்சைகளைப் பெற்ற பிறகு, பலன்களைப் பெற காத்திருக்கவே தேவையில்லை. பொதுவாக ஒவ்வொரு முறையும் சிகிச்சை அளிக்க 1 மணி நேரம் வரை ஆகலாம்.
ஒலிவாவில் பெறும் முடி வளர்வதற்கான சிகிச்சைக்கு எவ்விதமான குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளும் இருக்காது. 100% அவை பாதுகாப்பானவை; ஆனாலும் ஒரு சில வாடிக்கையாளர்கள், சிகிச்சை பெறும் சமயத்தில் அசௌகரியமாக உணர்வார்கள். அல்லது தலை அரிப்பதைப் போல உணர்வார்கள். அப்போது தோல் மருத்துவர்கள், அந்த நிலையை / வலியை சரியாக்குவதற்கு வலி நிவாரணிகளைக் கொடுக்கலாம்.
ஒலிவாவில் தலைமுடி மீண்டும் வளர்வதற்காக வழங்கப்படும் சிகிச்சை, அறுவை சிகிச்சையற்றது; எந்தவிதமான வெட்டு, இரத்த சேதம், வலி எதுவும் இருக்காது. சிலர் மட்டும் சிகிச்சையின் போது சற்று அசௌகரியமாக உணரலாம். அது விரைவில் சரியாகி விடும்
எங்களிடம் சிகிச்சை பெற்ற பலர், உடனடியாக முடி கொட்டுவது குறைந்துள்ளதை உணர்கிறார்கள். மேலும் அவர்களது முடி அடர்த்தியாகிறது. ஒலிவாவில் மூன்றாவது அல்லது நான்காவது முறை சிகிச்சை பெற்ற பிறகு முடி மீண்டும் வளரத் தொடங்குகிறது.
ஆயுர்வேத முறை, ஹோமியோபதி மற்றும் இயற்கை வைத்தியங்களை கூடுதலாகவோ, அல்லது இந்த சிகிச்சைக்கு பதிலாகவோ எடுத்துக்கொள்ளும்போது பக்கவிளைவுகள் இருக்காது என்று கூறுகின்றனர். ஒலிவாவில் முடி வளர்வதற்கான சிகிச்சை, இயற்கையாக மீண்டும் முடி வளரச் செய்கிறது. எவ்விதமான பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை; அதுமட்டுமின்றி, சிகிச்சைக்கு முன்பு முடி கொட்டுவதற்கான காரணங்கள் துல்லியமாக அறியப்பட்டு, மருத்துவ அடிப்படையில் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இயற்கையான வீட்டு வைத்தியங்களினால் பலன் கிடைக்குமா என்பது இதுவரை மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. நீங்கள் கை வைத்தியங்களைப் பயன்படுத்தி, விரும்பிய பலன்கள் கிடைக்கவில்லை என்றால், விரைவாக எமது மருத்துவர்களைக் கலந்தாலோசித்து சரியான சிகிச்சை முறைகளை அறியவும்.
எந்தவிதமான கட்டுப்பாடும் / கண்காணிப்பும் இன்றி சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொண்டால், சில சமயங்களில் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அத்தகைய மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு முன் தோல் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று எடுத்துக் கொள்வது நல்லது.