34493
page-template/template_concern_page.php

0
page-template/template_concern_page.php

இளமையிலேயே வயதானதுபோல் தோற்றமளிக்கும் சருமம்: அதன் பொருள், காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்

Highlights

  • ● இந்தக் காலத்தில் நம்மில் பலபேர், விரைவிலேயே வயதானவர்போல தோற்றம் வந்துவிடுகிறதோ என்று கவலைப்படுகிறோம். நமது அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள பரபரப்பு, மனஅழுத்தம், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களால் இத்தகைய வயாதான தோற்றம் விரைவிலேயே ஏற்படுகிறது என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது.
  • ● வயதாவது என்பது தவிர்க்க முடியாதது; இருந்தாலும் விரைவிலேயே வயதான தோற்றத்தைப் பெற்று விடுவதைத் தவிர்க்க தற்போது பல சிகிச்சைகள் உள்ளன.
  • ● மிகவும் அனுபவம்வாய்ந்த தோல் மருத்துவ வல்லுநர்கள், இத்தகைய சிகிச்சையை அளித்து வயதான தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
  • ● இந்த சிகிச்சைகள் பற்றி ஒரு தெளிவான முடிவெடுப்பதற்கு முன்பு, உங்கள் சருமத்தைப் பற்றியும், வயதாவது போன்ற அறிகுறிகள் ஏற்படக் காரணத்தையும், சிகிச்சை முறைகள் பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

வயதாவதுடன் தொடர்புடைய நிகழ்வுகள் என்னென்ன?

நமக்கு வயதாகும்போது, இயற்கையாகவும், உடலியல் அடிப்படையிலும் ஏற்படும் மாற்றங்களால் நமது சருமத்திலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக சுருக்கங்கள், மடிப்புகள், கோடுகள், சிரிக்கும்போது ஏற்படும் கோடுகள், சருமம் தளர்வடைந்து தொங்குதல் போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன.

சில வெளிப்படைக் காரணங்களாலும், சில உள்ளார்ந்த காரணங்களாலும் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. மரபணு சார்ந்த காரணங்கள், சுற்றுச் சூழலின் பாதிப்பு, வெளியே இருந்து தூண்டிவிடும். கிரியா ஊக்கிகள் போன்றவை விரைவிலேயே வயதான தோற்றத்தை அளிக்கக் காரணமாக இருக்கின்றன. எனவே நமது சருமம், மிகுந்த சோர்வடைந்து, ஈரப்பதம் இல்லாமல், தொங்கிப்போய், நிறம் மங்கி, கோடுகளும் பள்ளங்களும் நிறைந்து காட்சி அளிக்கிறது: அதிக வயதானது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

வகைகள் மற்றும் பிரிவுகள்

நமக்கு வயதாவதைப் போன்ற தோற்றம் ஏற்படுவதை, அதற்கான காரணங்களின் அடிப்படையில் பல விதமாகப் பிரிக்கலாம். கீழ்க்கண்டவை நமக்கு வயதாவதற்கான அடிப்படை மற்றும் மருத்துவ ரீதியான காரணங்கள் ஆகும் –

  • மரபணு சார்ந்த, உள்ளார்ந்த காரணங்கள்: நமது மரபணுக்கள் அல்லது DNA போன்றவைதான் நமக்கு வயதாவதை நேரடியாக பாதிக்கும் உள்ளார்ந்த காரணங்கள் ஆகும். எனவே வயதாவது, வயதான தோற்றம் ஏற்படுவது போன்றவை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். இது மிகவும் நிதானமாக நடைபெறும் ஒரு செயல் என்றே கூறலாம். நமது உடலில் உள்ள இயங்கும் அயனிகள் (free radicals) நாம் வயதான தோற்றம் பெறுவதை விரைவாக்குகிறது. உள்ளார்ந்த காரணங்களால் வயதாகும்போது கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றுகின்றன:
  • சருமம் தளர்ந்து தொங்கிப் போகுதல்: நமது சருமத்தின் கீழே உள்ள எலாஸ்டின், கொலாஜன் புரோட்டீன் போன்றவை தகர்க்கப்படுவதால் இவ்வாறு ஏற்படுகிறது.
  • வயதாவதால் ஏற்படும் புள்ளிகள்: UV கதிர்கள் நம்மேல் படும்போது நமது சருமத்தில் கருந்திட்டுக்கள் ஏற்படலாம், தோல் ஒரே சீராக இல்லாமல் போகும், கரும்புள்ளிகளும் ஏற்படலாம்.
  • மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள்: நமக்கு வயதாகும்போது நமது சருமம் மெலிதாகத் தொடங்குகிறது. அதன் எலாஸ்டிக் தன்மை குறைகிறது. ஈரப்பதமும் குறைகிறது. எனவே மடிப்புகள், தடிப்பான வரம்புகள், கோடுகள் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றையே சுருக்கங்கள் என்கிறோம்.
  • வறண்ட, மெல்லிய, ஒளி ஊடுருவும் சருமம்: நமது உடலில் அதிகமாக வியர்வை மற்றும் எண்ணெய் போன்றவை சுரப்பதால் இவை ஏற்படலாம். அனைவருக்குமே வயதாகும்போது ஹார்மோன்கள் சுரப்பு குறையும். குறிப்பாகப் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும். அதனால் சருமத்தில் ஈரப்பசை குறையும். மேலாக உள்ள இறந்த செல்கள் நிறைந்த சருமம் ஒரு மங்கிய தோற்றத்தையும், வறண்ட தோற்றத்தையும் கொடுக்கிறது.

மேற்சொன்ன காரணங்கள் தவிர வேறு சில காரணங்களும் வயதான தோற்றத்தை ஏற்படுத்தலாம் –

  • பயன்பாட்டினால் வரும் மாற்றம் (மெக்கானிக்கல் ஏஜிங்): இது நமது சருமத்தின் சில சில பகுதிகளை தொடர்ந்து ஒரே மாதிரியாக நாம் இயக்கும்போதும், சில முகபாவங்களைத் தொடர்ந்து அடிக்கடி செய்யும்போதும் அந்தந்த இடங்களில் கோடுகள் உருவாகலாம். முகத்தை சுருக்குதல், புன்னகைத்தல், கண்ணடித்தல், சிரித்தல் போன்றவற்றை ஒரே மாதிரி தொடர்ந்து செய்யும்போது இவ்வாறு ஏற்படும். கண்களையும், புருவம், வாய் போன்றவற்றையும் சுற்றிவரும் சுருக்கங்களும் இவ்வகையில் அடங்கும்.
  • வெளிப்புறக் காரணங்களால், சுற்றுப்புறச் சூழலால் வயதான தோற்றம் ஏற்படுதல்: அதிகமாக சூரிய ஒளி நம் மேல் விழுதல், மன அழுத்தம், காற்றில் உள்ள மாசு போன்றவற்றால் விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படலாம். இவற்றின் காரணமாக மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், சீரற்ற சருமம், கரும் புள்ளிகள் போன்றவை உண்டாகலாம். இவற்றுள் சூரிய ஒளியின் தாக்கம் மட்டுமே, நமது சருமம் வயதான தோற்றம் பெற 80% காரணமாகிறது என ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

நமக்கு ஏன் வயதாகிறது? வயதாவது போன்ற தோற்றம் ஏன் ஏற்படுகிறது?

அடிப்படைக் காரணங்கள், நமக்கு வயதாவதைத் தூண்டுகின்றன. அடுத்த நிலையில் உள்ள காரணங்கள், இத்தகைய வயதான தோற்றத்திற்கான அறிகுறிகள் ஏற்படுவதை துரிதப்படுத்துகின்றன.

அடிப்படை காரணங்களுள் சில –

  • சூரிய ஒளி படுதல் – தொடர்ந்து பல காலம் நம் சருமத்தின் மீது சூரிய ஒளிபடும்போது UV கதிர்கள் படுகின்றன. அப்போது நமது சருமத்தில் உள்ள எலாஸ்டின், கொலாஜன் போன்றவை தகர்க்கப்படுகின்றன. எனவே கரும் புள்ளிகள், சுருக்கங்கள், கோடுகள், மேலும் விரைவிலேயே வயதான தோற்றம் தரும் பிற அறிகுறிகள் தோன்றுகின்றன.
  • புகை பிடித்தல் – புகை பிடித்தலால் வெகு விரைவில் சுருக்கங்கள் தோன்றி வயதான தோற்றம் ஏற்பட்டுவிடும். புகையிலை, நமது சருமத்தை விரைவில் சிதைவடையச் செய்யக்கூடியது. மேலும் புகை பிடிக்கும்போது நமது சருமத்தில் தனித்து இயங்கும் அயனிகள் (free radicals) அதிகமாகச் சேர்ந்து விடுவதால், சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குணமாகவும் நீண்ட காலம் ஆகிறது. மேலும் சருமத்திற்கு வரக்கூடிய இரத்தத்தின் அளவைக் குறைப்பதால் சருமத்திற்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை.
  • நீர்ச்சத்துக் குறைதல் – நமக்கு வயதாகும்போது, ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையை நமது சருமம் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறது. எனவே நமது சருமம் வறண்டு போய், அதில் கோடுகள், சுருக்கங்கள் ஏற்படுகின்றன.

வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் பிற காரணங்கள்

  • மது அருந்துதல் – மிக அதிக அளவில் மது அருந்தும் போது, சருமத்திற்குக் கிடைக்க வேண்டிய ஊட்டச் சத்துக்கள் மிகவும் குறைந்து விடுகின்றன. அதனால் சருமம் மிகவும் வறண்டு, விரைவில் வயதான தோற்றம் பெறுகிறது.

அதிக மன அழுத்தம் – தொடர்ந்து வெகுநாட்கள் மன அழுத்தம் இருந்தால், நமது சருமம் பாதிக்கப்படலாம் அதனால் முகத்தில் சுருக்கங்கள், மடிப்புகள், கோடுகள் வரலாம்.

கண்டறிதல்

உங்கள் உடலில் வயதாவதற்கான அறிகுறிகள் சீக்கிரமாகவே தோன்றி விட்டால், அதை நன்கு பரிசோதித்து அதற்குரிய காரணங்களைச் சரியாகக் கண்டறியக் கூடியவர் தோல் மருத்துவர்தான். உங்களை நன்கு பரிசோதித்தபின், உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான சிகிச்சையை அவர் பரிந்துரைப்பார்.

உங்களுக்கு விரைவாகவே வயதான தோற்றம் ஏற்படும் ஆபத்து உள்ளதா?

இயல்பாக வயதாவதையோ அதனால் ஏற்படும் மாற்றங்களையோ நம் யாராலும் தவிர்க்கவே முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் வெகு நேரம் சூரிய ஒளி உடலில் படும்படி வேலை செய்பவர்களுக்கு சற்று விரைவாகவே வயதாவதற்கான அறிகுறிகள் தோன்றலாம். அதேபோல் புகை பிடிப்பவர்களுக்கும் மது அருந்துபவர்களுக்கும் சருமத்தில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

தடுத்தல் மற்றும் பராமரிப்பு:

  • நாள்தோறும் சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தி சருமத்தின் மேல் UVA, UVB கதிர்கள் படுவதைத் தடுக்கவும்.
  • நீங்கள் நிறைய தண்ணீர் குடித்து உங்கள் உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளவும். சருமமும் எப்போதும் வறண்டு போகாமல் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • புகை பிடித்தலையும் மது அருந்துவதையும் நிறுத்தினால் வயதான தோற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
  • நல்ல ஆரோக்கியமான, சரிவிகித உணவினை எடுத்துக் கொள்ளவும். அனைத்து ஊட்டச் சத்துக்களையும் சேர்த்துக் கொள்ளவும். வைட்டமின் A சருமத்தின் திசுக்களை சரி செய்யும். வைட்டமின் E சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வைட்டமின் C வயதாவதால் வரும் கரும் புள்ளிகளைத் தடுக்கும்.

விரைவாகவே வயதான தோற்றம் தரும் சருமத்திற்கான சிகிச்சை

  • ஃபிராக்ஷனல் மைக்ரோநீடிலிங் ரேடியோ ஃப்ரீக்வென்ஸி
  • இரசாயன பீல்கள்
  • போடுலினம் (Botulinum) டாக்ஸின் ஊசிகள் மற்றும் ஹையாலுரானிக் (Hyaluronic) அமிலத்தினால் ஃபில்லர்கள்
  • லேசர் டோனிங்
  • லேசர் ரீசர்ஃபேசிங்

மேலும் படிக்கவும்: இளமையான சருமத்திற்கும், வயதாவதற்கான அறிகுறிகளைத் தடுப்பதற்கும், அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகள்.

இத்தகைய சிகிச்சைகள் எல்லாமே நமது சருமத்தை சீராக்கி, கரும் புள்ளிகள், கோடுகள், மடிப்புகள், பள்ளங்கள் அல்லது மேலாகத் தோன்றும் சுருக்கங்கள் போன்றவற்றை நீக்க முயற்சிக்கின்றன. மேலும் ஆழமான சுருக்கங்கள், தடிப்புகள், பள்ளங்கள் போன்றவற்றை நீக்க உங்கள் தோல் மருத்துவர் மேம்பட்ட சிகிச்சைகளை (ஹையாலுரானிக் அமில ஃபில்லர்கள்) பரிந்துரைக்கலாம். இவை எல்லாமே வயதான தோற்றத்தைத் தரும் அறிகுறிகளைக் குறைத்து எந்த வயதிலும் மிகவும் இளமையான சருமத்தையும் தரக்கூடியவை.

வயதாவதற்கான அறிகுறிகள் விரைவாகவே தோன்றுவது போல் இருந்தால், உடனடியாக அனுபவம் மிக்க தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். உங்கள் நகரத்தில் உள்ள மிகச் சிறந்த தோல் மருத்துவரின் ஆலோசனையை பெற இன்றே அருகில் உள்ள ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கைத் தொடர்பு கொள்ளவும்.

    Talk to Our Experts

      Subscribe to Newsletter

      Expert guide to flawless skin and nourished hair from our dermatologists!