மச்சங்களை நீக்குவதற்கான பாதுகாப்பான மற்றும் நேர்த்தியான சிகிச்சைகள்
தேவையற்ற மச்சங்களை நிரந்தரமாக நீக்குவதற்கு நிபுணர்கள் கையாளும் வழிமுறைகள்.
மச்சங்களை மருத்துவத்துறையில் Nevi என்று குறிப்பிடுவார்கள். அடர்ந்த கருப்பு அல்லது பிரவுன் நிறமுடைய சில உயிரணுக்களின் (Cells) கூட்டத்தையே நாம் மச்சம் என்கிறோம். மச்சங்களில் பல வகை உண்டு. பெரும்பாலும் மச்சங்களால் எவ்விதமான ஆபத்துக்களும் ஏற்படுவதில்லை. ஆனால் ஒரு சில பார்ப்பதற்கு சற்று விகாரமான தோற்றத்தைத் தரலாம். மிக மிகச் சில மச்சங்கள் புற்றுநோயாக மாறலாம். மச்சங்கள் நமது உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம். நாம் பெரியவர்களாகும் போது கிட்டத்தட்ட 10-40 மச்சங்கள் வரை இருக்கலாம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. வயதாக ஆக சில மச்சங்கள் மறைந்து போகின்றன. சிலவற்றின் நிறம் மாறுகிறது. சில பெரியதாக மாறுகின்றன.
நமது உடலில் உள்ள மெலனோசைட்கள் என்று அழைக்கப்படும் செல்களில் சில, உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றாக இணைந்து இருக்கும் போது மச்சம் உண்டாகிறது. அது தட்டையாகவோ மேலெழும்பியோ இருக்கலாம். மச்சங்களில் பலவகை உண்டு. பிறவியிலேயே தோன்றியவை மற்றும் பிறகு தோன்றியவை. மச்சங்களில் ஏதேனும் வலி ஏற்பட்டாலோ, அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்பட்டாலோ, அளவில் பெரியதாக ஆனாலோ, சீரற்று இருந்தாலோ, உடனடியாக தோல் மருத்துவரை சந்திப்பது நல்லது.
Why Oliva
Experienced in-house team of
Certified DermatologistsComprehensive one-to-one
consultation with the doctorAdvanced US-FDA approved
equipmentWell trained and certified
therapistsServed 3,00,000 happy customers
and countingStringent guidelines and set
protocols for better service efficacy