மருக்களை நீக்குவதற்கு பாதுகாப்பான மற்றும் மிகச் சிறந்த சிகிச்சைகள்
அனைத்து விதமான மருக்களையும் நீக்குவதற்கான FDA ஒப்புதல் பெற்ற சிகிச்சை முறைகள்
நம்மைச் சுற்றியுள்ள பல காரணங்களினால், நமது சருமம் பல்வேறு தொற்றுக்களினால் பாதிக்கப்படலாம். அத்தகைய பாதிப்புகளால் மிகப் பெரும்பாலானோருக்கு மருக்கள் தோன்றுவது சகஜம். HPV என்று குறிப்பிடப்படும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்றின் காரணமாக நமது உடலில் ஏற்படும் சின்னச் சின்ன கட்டிகள் போன்ற திரட்சிகள்தான் மருக்கள். சில சமயங்களில் இவை மிகவும் பெரியதாக மாறி நமக்கு சங்கடத்தை ஏற்படுத்துகின்றன.
இவற்றுள் பல வகை உண்டு
- ஃபிலிஃபார்ம் மருக்கள்
- பொதுவான மருக்கள்
- பிளான்டர் மருக்கள்
- தட்டையான மருக்கள்
- பெரிங்குவல் மருக்கள் மற்றும் பிற மருக்கள்
இவை உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம். பெரும்பாலும் கைகள், கால்கள் முகத்தில் தோன்றுகின்றன. சில சமயங்களில் HPVயின் வேறு சில வகைகளால் நமது அந்தரங்க உறுப்புகளில் இவை தோன்றலாம். அவை உடலுறவின் போது பரவவும் வாய்ப்பு உண்டு. மருக்கள் தாமாகவே மறைந்து விடும் தன்மை கொண்டிருந்தாலும், அதற்கு நீண்ட காலம் ஆகலாம். அந்தக் கால அளவும் ஒருவருக்கொருவர் மாறுபடும். சில சமயங்களில் சில வகையான சிகிச்சைகளினால் அவை மீண்டும் வருவதற்கான அபாயமும் உண்டு. இவை பொதுவாக கருப்பு/பிரவுன் நிறத்தில் இருக்கும். 2-4 மிமீ வரையான அளவில் இருக்கும்.
பொதுவாக மருக்கள் பரவும் தன்மை கொண்டவை. ஆனால் சில சமயங்களில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இவை இருக்கும். பிறருக்கு இல்லாமலேயே போகும் சூழ்நிலையும் ஏற்படலாம்.
Why Oliva
Experienced in-house team of
Certified DermatologistsComprehensive one-to-one
consultation with the doctorAdvanced US-FDA approved
equipmentWell trained and certified
therapistsServed 3,00,000 happy customers
and countingStringent guidelines and set
protocols for better service efficacy