- Home
- பரு சிகிச்சை(Acne)
பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பரு அகற்றுதல் சிகிச்சை
முகப்பருவை அழிக்க மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட தீர்வுகள்
நமது சருமத்தில் உள்ள பல்வேறு எண்ணெய் சுரப்பிகளின் சீரற்ற இயக்கத்தினால்தான் பருக்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் மட்டுமே 200-300 மில்லியன் மக்கள் பருக்கள் தோன்றுவதாகக் கூறுகின்றனர். இது அடிப்படையில் அழகு சார்ந்த ஒரு பிரச்சனையாகவே பெரிதும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் பருக்கள் பெரும்பாலும் முகத்திலேயே தோன்றுகின்றன. மேலும் இவற்றுக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால் சருமத்தின் மிருதுத் தன்மையையும் நிறத்தையும் நிரந்தரமாக மாற்றிவிடுகின்றன. இத்தகைய பருக்களுக்கான, மிகச் சிறந்த மற்றும் மருத்துவ அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகள், நல்ல பலனைத் தரக்கூடிய சிகிச்சைகள் பற்றி மேலும் அறிய விரும்பினால், நீங்கள் சரியான இடத்தையே தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். மேலும் தொடர்ந்து படியுங்கள் நிறைய தெரிந்து கொள்ளுங்கள்!
உங்களுக்கு பருக்கள் எதனால் வருகின்றன?
நாம் பருக்கள் வருவதற்கான காரணத்தை முதலில் அறிந்து கொள்ளலாம். நமது சருமத்தில் உள்ள சிறு சிறு துளைகளை, நம் உடலில் கூடுதலாக சுரக்கும் எண்ணெய், அழுக்கு மற்றும் இறந்துபோன செல்கள் ஆகியவை சேர்ந்து மூடிக்கொள்ளும் போது பருக்கள் தோன்றுகின்றன. பருக்கள் நமது முகம், மார்பு, தோள் மற்றும் முதுகுப் பகுதியில் தோன்றலாம். கீழ்வரும் காரணங்களால் பருக்கள் அதிகமாகப் பரவலாம்:
- குடும்பத்தில் முன்னோர்களுக்கு பருக்கள் இருந்த வரலாறு
- ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்கள் அல்லது சமச்சீரற்ற தன்மை
- மிகவும் பரபரப்பான, மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடிய வாழ்க்கை முறை
- கார்டிகோஸ்டிராய்டுகள், வலிப்பைத் தடுக்கக் கூடிய மருந்துகள் போன்றவற்றை நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுதல்
- சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகளை உண்ணுதல்
- சருமத்தில் (காம்டோஜெனிக்) உள்ள சிறு துளைகளை அடைக்கக் கூடிய அழகு சாதனப் பொருட்கள்
பருக்கள் வருவதற்குரிய மேலும் சில காரணங்களை அடுத்த பிரிவில் பார்க்கலாம்.
ஆபத்து காரணிகள்:
கீழ்க்கண்ட பிரிவுகளின் கீழ் நீங்கள் இருந்தீர்கள் என்றால், உங்களுக்குப் பருக்கள் வரக்கூடிய ஆபத்து அதிகம்:
- பருவமடையும் வயதில் இருப்பவர்களில் 95% பேருக்கு பருக்கள் அதிகமாக வருகின்றன.
- 14 முதல் 30 வயது வரை உள்ளவர்களாக இருந்தால், அந்தப் பருவக் காலத்திலேயே பருக்கள் அதிகம் வருகின்றன.
- மிக மன அழுத்தத்தைத் தரக்கூடிய வாழ்க்கைமுறை இருந்தாலோ அல்லது ஹார்மோன்கள் சார்ந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தாலோ பருக்கள் வரும் வாய்ப்பு அதிகம். ஆண்களில் 20% பேருக்கும், பெண்களில் 35% பேருக்கும் இவை ஏற்படுகின்றன.
பருக்கள் அதிகம் உள்ள சருமத்தினால் பாதிக்கப்பட்டு, அவற்றை சரியாக கையாள்வதற்காகப் போராடிக் கொண்டிருந்தால், அடுத்த பிரிவு உங்களுக்கு மிகவும் பலனளிக்கும்.
உங்களுக்கு பருக்கள் எதனால் வருகின்றன? நாம் பருக்கள் வருவதற்கான காரணத்தை முதலில் அறிந்து கொள்ளலாம். நமது சருமத்தில் உள்ள சிறு சிறு துளைகளை, நம் உடலில் கூடுதலாக சுரக்கும் எண்ணெய், அழுக்கு மற்றும் இறந்துபோன செல்கள் ஆகியவை சேர்ந்து மூடிக்கொள்ளும் போது பருக்கள் தோன்றுகின்றன. பருக்கள் நமது முகம், மார்பு, தோள் மற்றும் முதுகுப் பகுதியில் தோன்றலாம். கீழ்வரும் காரணங்களால் பருக்கள் அதிகமாகப் பரவலாம்: • குடும்பத்தில் முன்னோர்களுக்கு பருக்கள் இருந்த வரலாறு • ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்கள் அல்லது சமச்சீரற்ற தன்மை • மிகவும் பரபரப்பான, மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடிய வாழ்க்கை முறை • கார்டிகோஸ்டிராய்டுகள், வலிப்பைத் தடுக்கக் கூடிய மருந்துகள் போன்றவற்றை நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுதல் • சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகளை உண்ணுதல் • சருமத்தில் (காம்டோஜெனிக்) உள்ள சிறு துளைகளை அடைக்கக் கூடிய அழகு சாதனப் பொருட்கள் பருக்கள் வருவதற்குரிய மேலும் சில காரணங்களை அடுத்த பிரிவில் பார்க்கலாம். ஆபத்து காரணிகள்: கீழ்க்கண்ட பிரிவுகளின் கீழ் நீங்கள் இருந்தீர்கள் என்றால், உங்களுக்குப் பருக்கள் வரக்கூடிய ஆபத்து அதிகம்: • பருவமடையும் வயதில் இருப்பவர்களில் 95% பேருக்கு பருக்கள் அதிகமாக வருகின்றன. • 14 முதல் 30 வயது வரை உள்ளவர்களாக இருந்தால், அந்தப் பருவக் காலத்திலேயே பருக்கள் அதிகம் வருகின்றன. • மிக மன அழுத்தத்தைத் தரக்கூடிய வாழ்க்கைமுறை இருந்தாலோ அல்லது ஹார்மோன்கள் சார்ந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தாலோ பருக்கள் வரும் வாய்ப்பு அதிகம். ஆண்களில் 20% பேருக்கும், பெண்களில் 35% பேருக்கும் இவை ஏற்படுகின்றன. பருக்கள் அதிகம் உள்ள சருமத்தினால் பாதிக்கப்பட்டு, அவற்றை சரியாக கையாள்வதற்காகப் போராடிக் கொண்டிருந்தால், அடுத்த பிரிவு உங்களுக்கு மிகவும் பலனளிக்கும். ஒலிவா கிளினிக்கில் வழங்கப்படும், மிக நேர்த்தியான, மருத்துவ அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட தீர்வுகள்
பருக்களுக்கு மிகச் சரியான சிகிச்சையைப் பெற வேண்டுமென்றால், பத்து ஆண்டுகளுக்கு மேல் மிகச் சிறந்த முறையில் இயங்கி, நேர்த்தியான, சிறந்த சேவைகளைத் தந்து வரும் ஒலிவா கிளினிக் தான் உங்களுக்கு மிகச் சிறந்த இடமாக இருக்கும். இங்கு பருக்களின் பல்வேறு வகைகளுக்கும், மிகத் தீவிரமான பருக்களுக்கும் மேம்பட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மேலும் உங்களுக்கு நீண்டநாள் நிலைத்து நிற்கும், திருப்தி அளிக்கக்கூடிய பலன்களைத் தரவும் இந்த சிகிச்சைகள் உத்தரவாதம் அளிக்கின்றன.
ஒலிவாவில் உள்ள மிகச் சிறந்த முன்னணி மருத்துவக் குழுவினர், ஒவ்வொருவரின் சரும வகைக்கும் ஏற்ற சரியான சிகிச்சைகளை அக்கறையுடன் வழங்குகின்றனர். இச் சிகிச்சைகள் மூலம் மிக லேசான, மிதமான மற்றும் தீவிரமாக உள்ள பருக்களுக்கு சரியான தீர்வுகள் வழங்கப்பட்டு, வடுக்கள் ஏற்படாமலும் தடுக்கப்படுகின்றன. மிகுந்த அனுபவம் பெற்ற எமது தோல் மருத்துவர்கள் பிரச்சனையின் மூல காரணத்தை ஆராய்ந்து பின்னர் ஒரு முழுமையான சிகிச்சையை அளிக்கின்றனர். அப்போது பருக்கள் தீவிரமடையாமலும், அடிக்கடி தோன்றாமலும் தடுக்கப்படுகின்றன.
ஒலிவாவில் உள்ள திறன் மிக்க தோல் மருத்துவர்கள், பருக்களைக் குறைப்பதற்கும், தற்போதுள்ள வடுக்களை வெளியே தெரியாதபடி செய்வதற்கும் தேவையான அதிநவீன அழகியல் சார்ந்த சிகிச்சைகளை வழங்குகின்றனர். இந்த சிகிச்சை முறைகளை அவர்கள் தனித்தனியாகவோ ஒன்றுக்கு மேற்பட்டவைகளை இணைத்தோ வழங்கலாம். ஒலிவாவில் சிகிச்சை பெறும் உங்களுக்கு மிகச் சிறந்த பலன்கள் மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதே அவர்களது அடிப்படை நோக்கமாகும்:
- உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் மற்றும் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவும் மருந்துகள்: ஒலிவாவில் உள்ள சிறந்த, அனுபவம் மிக்க தோல் மருத்துவர்கள் முதலில் பிரச்சனையின் அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து ஒரு முழுமையான சிகிச்சை அளிக்கின்றனர். உதாரணமாக PCOS (பாலிசிஸ்டிக் ஓவரேயின் சிண்ட்ரோம்) மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போன்ற சில காரணங்களால் பருக்கள் மிக அதிகமாக வரலாம். அத்தகைய தருணங்களில் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் சிலவற்றை அவர்கள் பரிந்துரைக்கலாம். உள்ளே எடுத்துக் கொள்ளக் கூடிய ஐஸோடிரெடினாயின், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஹார்மோனல் சிகிச்சைகள் போன்றவற்றை அளித்து பருக்களைக் குறைக்க முயற்சி செய்வார்கள். மேலும் அவை புதிது புதிதாகத் தோன்றுவதைக் குறைக்க ரெடினாய்ட் போன்ற கிரீம்களையும், பருக்கள் உள்ள இடத்தில் தடவிக் கொள்வதற்காகப் பரிந்துரைக்கலாம்.
- இரசாயன பீல்கள்: உங்களுக்கு வந்துள்ள பருக்களின் தீவிரத்தைப் பொருத்து, ஒலிவாவில் உள்ள மிகுந்த தகுதி வாய்ந்த மருத்துவர்கள் பல்வேறு விதமான இரசாயன பீல்களையும் பரிந்துரைக்கின்றனர். இவை உங்கள் சருமத்தின் தன்மையைப் பொருத்தும், பருக்களின் தீவிரத்தைப் பொருத்தும் மாறுபடும். மூலிகைச் செடிகளின் சாறுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட இவை நமது சருமத்தின் மேலே உள்ள பாதிக்கப்பட்ட படலத்தை மட்டுமே மிகவும் பாதுகாப்பாக நீக்கி, தூசுகள் நிறைந்த இறந்துபோன செல்களையும், நமது சருமத்தில் உள்ள துளைகளில் சேர்ந்துள்ள கூடுதல் எண்ணெய் போன்றவற்றையும் நீக்குகின்றன. மேலும் மேம்படுத்தப்பட்ட அழகியல் சிகிச்சைகள், லேசான மற்றும் மிதமான பருக்களை திறம்பட நீக்குகின்றன. இத்தகைய இரசாயன பீல்கள் உங்கள் சருமத்தின் மிருதுத் தன்மையை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்துகின்றன.
- காம்டோன் எக்ஸ்ட்ராக்ஷன்: பிளாக் ஹெட்ஸ் மற்றும் வொயிட் ஹெட்ஸ் என்று சொல்லப்படும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகளை நீக்கும் சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன. மிகவும் பாதுகாப்பாகவும் திறம்படவும் இவற்றை நீக்குவதில் அனுபவமிக்க எமது தோல் மருத்துவர்கள், கிருமிகள் அற்ற மிகுந்த சுத்தமான சூழலில், சிறப்பான சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
- பெரிய பருக்களில் போடப்படும் ஊசிகள்: மிகப் பெரிய அளவில் வீங்கி, கட்டிகள் போலவும், முடிச்சுகள் போலவும் உள்ள பருக்களுக்கான மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குவதிலும், ஒலிவா கிளினிக்கில் உள்ள மிகப் புகழ்பெற்ற மருத்துவர்கள் சிறந்து விளங்குகின்றனர். இத்தகைய சிகிச்சைகள் மூலம் இவை மேலும் தீவிரமாவது தடுக்கப்பட்டு, வடுக்களாக மாறும் ஆபத்தும் தடுக்கப்படுகிறது.
- லேசர் டோனிங் சிகிச்சை: மேலும் பருக்களினால் சருமத்தில் ஏற்படும் கருந்திட்டுக்களை நீக்குவதற்கு ஒலிவாவில் உள்ள மிகவும் தேர்ச்சி பெற்ற அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் லேசர் சிகிச்சைகளையும் அளிப்பார்கள். ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப எத்தனை அமர்வுகள் அளிக்கலாம் என்பது நிச்சயிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இந்த சிகிச்சையின் மூலம் பருக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, அவற்றால் ஏற்படக்கூடிய வடுக்களின் தீவிரமும் குறைக்கப்பட்டு, சருமத்தின் மிருதுத் தன்மையும் மேம்படுகின்றது.
ஒலிவா கிளினிக்கில் எத்தனை வகையான பருக்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?
ஒலிவா கிளினிக்கில் நமது முகம் மற்றும் உடலில் ஏற்படும் கிரேட் I முதல் IV வரையிலான பருக்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பிளாக் ஹெட்ஸ் மற்றும் வொயிட் ஹெட்ஸ் எனப்படும் கருப்பு/வெள்ளைப் புள்ளிகள், பாப்யூல்ஸ் எனப்படும் சிவப்புக் கட்டிகள், சீழ் நிறைந்த பஸ்ட்யூல்ஸ், முடிச்சுகள், சிரங்குகள் போன்ற அனைத்து விதமான பருக்களுக்கும் இங்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. நாங்கள் இங்கே வழங்கும் சிகிச்சைகள் உங்கள் சருமத்தில் பருக்கள் தோன்றக் கூடிய ஆபத்தைக் குறைத்து, சருமத்தை மேலும் தெளிவாகவும் மிருதுவாகவும் மாற்றும்.
ஒலிவாவை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
புரட்சிகரமான சருமச் சிகிச்சைகளைப் பொருத்தமட்டில் இந்தியாவின் பெரிய நகரங்கள் அனைத்திலும் கிளைகளைக் கொண்டுள்ள ஒலிவா கிளினிக்தான் மிகுந்த நம்பிக்கைக்குரிய பிராண்ட் ஆகும். பருக்களைக் கையாள்வதற்கு மிக நேர்த்தியான சிகிச்சை அளிப்பதற்கு ஒலிவா மிகச் சிறந்த இடம் என்பதற்கான சில முக்கிய காரணங்கள் இவை:
- ஈடு இணையற்ற மருத்துவ நிபுணத்துவம் நிறைந்த, மிகுந்த புகழ்பெற்ற மருத்துவர்கள் நிறைந்துள்ளனர். பருக்களுக்கான சிகிச்சைகளை இவர்கள் மிகச் சிறந்த முறையில் வழங்குகின்றனர்.
- ஒலிவா கிளினிக்கில் USFDA-வின் ஒப்புதல் பெற்ற, மிக உன்னதமான தொழில்நுட்ப வசதிகள் நிறைந்துள்ளதால் மிகவும் பாதுகாப்பான, திறன்மிக்க தீர்வுகள் கிடைக்கின்றன.
- உலக அளவில் பின்பற்றப்படும் வழிமுறைகளின்படி சிகிச்சைகள் வழங்கப்படுவதால் இதனால் ஆபத்துக்கள் ஏற்படுவதில்லை. மிகச் சிறந்த பலன்களே கிடைக்கின்றன.
- ஒவ்வொருவரின் தனித் தேவைகளுக்கேற்ப தனிப்பட்ட சிகிச்சை முறைகள் திட்டமிடப்பட்டு முழுமையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மேலும் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் மிகுந்த அக்கறையுடன் வழிகாட்டுதல்களும் ஆதரவும் வழங்கப்படுகின்றன.
- கிளினிக்கில் சிகிச்சை பெறும்போது மிகச் சிறந்த அனுபவத்தைத் தரக்கூடிய அதிநவீன வசதிகள் உள்ளன.
- இதுவரை பருக்களுக்காகவே 70,000க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
- இதுவரை சிகிச்சை பெற்ற (ஏறக்குறைய) 2.5 லட்சம் மக்களில் 95% பேர் மிகுந்த மனநிறைவைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரிவில் உள்ள கிளினிக்குகளை ஒப்பிடுகையில் இது மிக அதிகமாகும்.
- இந்தியாவில் சருமம் மற்றும் தலைமுடிக்கான சிகிச்சைகளை அளிப்பதில் மிகுந்த நம்பிக்கைக்குரிய பிராண்ட் என்பதற்கான பல விருதுகளையும் இத்துறையில் ஒலிவா பெற்றுள்ளது.
மேலே ஒலிவா பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகள்/விவரங்கள் அனைத்தும் உங்களுக்கு நம்பிக்கையைத் தந்தால், அவற்றின் அடிப்படையில் ஒலிவாவில் பருக்களுக்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டால், ஒலிவாவில் எப்படி, என்ன விதமான சிகிச்சை முறை வழங்கப்படுகிறது என்பதை மேலும் தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளுங்கள்.
ஒலிவாவில் பருக்களுக்கான சிகிச்சை எப்படி வழங்கப்படுகிறது?
ஒலிவாவில் பருக்களுக்கான மேம்பட்ட சிகிச்சைகள் கீழ்க்கண்ட வழிமுறையின்படி வழங்கப்படுகிறது:
- முதலில் ஒரு தகுதிபெற்ற, அனுபவம் மிக்க தோல் மருத்துவரிடம் தனியாக ஆலோசனை பெறுதல்.
- அப்போது பருக்கள் வந்ததற்கான அடிப்படைக் காரணத்தை விரிவாக ஆராய்ந்து, அதன் அடிப்படையில் முழுமையான தீர்வளித்தல்.
- உங்கள் சருமத்திற்கும், உங்கள் சருமத்தில் உள்ள பருக்களின் வகை மற்றும் அவை தூண்டப்படும் விதங்களுக்கு ஏற்பவும் உங்களுக்காகவே தனியான சிகிச்சை திட்டம் தயாரித்தல்.
- உங்கள் சருமத்தை இந்த மேம்பட்ட சரும அழகியல் சிகிச்சைக்குத் தயார்படுத்துவதற்கான வழிகளை, சிகிச்சைக்கு முன்பே விளக்குதல்.
- சிறந்த பலன்களைப் பெறும் விதமாக நடு நடுவில் சரியான இடைவெளிகளுடன் அமர்வுகளைத் திட்டமிடுதல்.
- நீண்ட நாட்கள் இந்த சிகிச்சையின் பலன்களைப் பெறும் விதமாக சிகிச்சைக்குப் பிறகு வழங்கும் ஆலோசனைகள்.
ஒலிவாவில் வழங்கப்படும் பருக்களுக்கான மேம்பட்ட சிகிச்சையைப் பெற என்ன செய்யவேண்டும்?
ஆன்லைன் மூலமாகவோ அல்லது 1800-103-3893 என்ற எண்ணை அழைத்தோ முதலில் உங்களுக்கான நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளவும். எங்களது வாடிக்கையாளர் சேவைக் குழுவினர், ஒரு தேர்ந்த, அனுபவம் மிக்க தோல் மருத்துவரை, உங்களுக்கு வசதியான நேரத்தில், சந்திக்க உதவி செய்வார்கள்.
Acne Treatment Procedure Explained By Dermatologist
Oliva offers the most advanced treatments for pimple/ acne. Check out the details on procedure and gain deeper insights into how our treatment proceeds under an expert dermatologist.
*Images are from real clients, and results can be subjective
Acne Treatment Before And After Results
Check out real images of our clients before and after the sessions of pimple removal treatment at Oliva.
Treatment results may vary from person to person
Why Oliva
Experienced in-house team of
Certified DermatologistsComprehensive one-to-one
consultation with the doctorAdvanced US-FDA approved
equipmentWell trained and certified
therapistsServed 6,00,000 happy customers
and countingStringent guidelines and set
protocols for better service efficacy
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும், பருக்கள் அதிகமாக வரும் பிரச்சனை இருந்தால், இந்த சிகிச்சையை ஒலிவாவில் எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது. சாலிசிலிக் அமிலம் பயன்படுத்தப்படும் பீல்கள் மூலம் வழங்கப்படும் சிகிச்சையை 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
ஆம். இங்கு மிகக் குறைவாக/லேசாகவே தோன்றியுள்ள பருக்கள், மிதமானவை, மிகவும் தீவிரமானவை, பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ், பாப்யூல்ஸ், சீழ்நிறைந்த பஸ்ட்யூல்ஸ், முடிச்சுக்கள் போல உள்ள நாட்யூல்ஸ், கட்டிகள் (cysts) அனைத்திற்கும் சிகிச்சைகள் வழங்கப்படும்.
2வது அல்லது 3வது அமர்வுக்குப் பிறகு நல்ல பலன்கள் / மாற்றங்கள் தெரியலாம். சிகிச்சை முன்னேறும் போது மேலும் மேலும் நல்ல பலன்கள் தெரிய ஆரம்பிக்கும். உங்கள் பருக்களின் தீவிரத்தைப் பொருத்து 4 முதல் 6 முறை இந்த சிகிச்சைக்காக வர நேரிடும். சிறந்த பலன்களைப் பெற ஒரு முறைக்கும் மற்றொரு முறைக்கும் இடையில் 2 முதல் 4 வாரங்கள் இடைவெளி தேவைப்படலாம்.
சிகிச்சைக்குப் பிறகு வழங்கப்படும் அறிவுரைகளை மிகவும் கவனமாகப் பின்பற்றும் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட நாட்கள் பலன் கிடைக்கின்றன. இருந்தாலும் உங்கள் பருக்களின் தீவிரத்தைப் பொருத்து பலன்கள் மாறுபடலாம். மிக மிகத் தீவிரமான, அதிக பருக்கள் உள்ளவர்களுக்கு மேலும் திறம்பட சிகிச்சை அளிக்க கூடுதலாக சில அமர்வுகள் தேவைப்படலாம்.
நீங்கள் சிகிச்சைக்கு வரும்போது மிகவும் வசதியாகவும் சௌகரியமாகவும் உணர நாங்கள் ஒலிவாவில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி தனித்தனியாக சிகிச்சைகளை வழங்கும்போது, உலகளாவிய பாதுகாப்பு விதிகளை முழுமையாகக் கடைப்பிடிக்கிறோம். அதற்கேற்ப அதிநவீன USFDA அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் எமது தோல் மருத்துவர்களுக்கு சிறந்த, கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மிக கவனமாகக் வழிமுறைகளைப் பின்பற்றி எங்கள் மருத்துவர்கள் இந்த மேம்பட்ட சிகிச்சைகளை அளிப்பதனால், சருமம் லேசாக சிவப்படைதல் மற்றும் லேசான எரிச்சல் ஏற்படுதல் போன்றவற்றைத் தவிர வேறு பக்க விளைவுகள் இல்லாதவாறு உறுதி செய்யப்படுகிறது. மேலும் சிகிச்சை முடிந்த பிறகு சில பிரச்சனைகளை ஏற்பட்டாலும் அவற்றை தீர்க்கவும் எமது மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்குவார்கள்.
மிக லேசான பருக்கள் கூட, சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் நிரந்தரமான வடுக்களை ஏற்படுத்தலாம். எனவே பருக்கள் வந்தால் எந்த அளவு விரைவாக உங்கள் மருத்துவரைப் பார்க்க முடியுமோ அவ்வளவு விரைவில் பார்ப்பது நல்லது. இதன் மூலம் உங்கள் சருமத்தின் தன்மை மோசமடையாமலும், பின்விளைவுகள் ஏற்படாமலும் தவிர்க்கலாம்.
ஒலிவாவில் உள்ள நல்ல பயிற்சி பெற்ற தோல் மருத்துவர்கள், சிறந்த பலனைப் பெற சிகிச்சைக்கு முன்னும் பின்னும் தரும் ஆலோசனைகளைப் பின்பற்றி நடக்க வேண்டியது மிகவும் அவசியம்:
சிகிச்சைக்கு முன்: தினசரி சருமப் பராமரிப்பிற்கு நேரம் ஒதுக்கவும். காம்டோஜெனிக் அல்லாத கிளென்ஸர் மற்றும் மாய்ச்சரைசர், பொதுவாகப் பலர் பயன்படுத்தும் சன்ஸ்கிரீன் லோஷன் ஆகியவவற்றைப் பயன்படுத்த வேண்டும். அழகு நிலையங்களுக்குச் சென்று சருமத்தில் சில சிகிச்சைகளை / சேவைகளைப் பெறுவதையும் வீட்டு வைத்தியமாக சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதையும், மிகத் தீவிரமான கிரீம்களைப் பயன்படுத்துவதையும் (AHA கிரீம்கள், தடவிக்கொள்ளும் ரெடினாய்ட்கள்) தவிர்க்கவும்.
சிகிச்சைக்குப் பிறகு: நேரடியாக சூரிய ஒளி சருமத்தில் படுவதைத் தவிர்க்கவும். சூரிய ஒளி மிக அதிகமாக உள்ள நேரத்தில் வெளியே வேலை செய்வதை கூடிய வரையில் தவிர்க்கவும். மருத்துவர்கள் அறிவுரையின்படி, குறிப்பிட்ட காலம் வரை ஸ்டீம், சானா மற்றும் சாலோன் சேவைகள் பெறுவதைத் தவிர்க்கவும்.