33498
page-template/template_concern_page.php

0
page-template/template_concern_page.php

பருக்களினால் ஏற்படும் வடுக்கள் – அவற்றின் காரணங்கள், வகைகள் மற்றும் அவற்றைக் கையாளுதல்

Highlights

  • • எந்த வயதினராக இருந்தாலும், ஆண்/பெண் எந்தப் பாலினமாக இருந்தாலும், நமது சருமம் எந்த வகையைச் சேர்ந்தது என்றாலும் வடுக்கள் ஏற்பட முக்கியக் காரணமாக அமைவது பருக்கள்தான்.
  • • உலக அளவிலேயே, மக்கள் தொகையில் 90% பேருக்கு அவர்களது பதின்பருவத்தில் (Teenage) பருக்கள் வருகின்றன. இதனால் முகம், நெற்றி, மூக்கு, மார்பு, முதுகு ஆகிய பகுதிகளில் வடுக்கள் ஏற்படுகின்றன.
  • • பருக்கள் தோன்றி மறைந்த பின்பு, இந்த வடுக்கள் நமது சருமத்தின் தன்மையையே மாற்றி விடுகின்றன.
  • • பருக்கள் மறைந்த பிறகு நன்கு வெளிப்படையாகத் தெரியும்படி அந்த இடத்தில் சிறு பள்ளங்கள், அல்லது மேடுகள் அல்லது நன்கு தெரியும்படியான வடுக்கள் ஆகியவை ஏற்படுகின்றன.
  • • ஒரு தோல் மருத்துவரால் இந்த வடுக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். உங்கள் வடுக்களின் தீவிரத்தைப் பொருத்து, இந்த சிகிச்சைக்கு குறைந்தது 3 மாதம் முதல் 24 மாதங்கள் வரை தேவைப்படலாம்.
  • • பருக்களினால் ஏற்படும் மிதமான வடுக்களுக்கு எளிதாக சிகிச்சை அளிக்க முடியும். ஆழமான மற்றும் வெகுநாட்களாக உள்ள வடுக்களை குணப்படுத்த நீண்டகாலம் தேவைப்படும். அப்போதுதான் பலன்கள் தெரிய ஆரம்பிக்கும்.

பருக்களினால் ஏற்படும் வடுக்கள் என்பது என்ன? அவை எப்படி உருவாகின்றன?

பருக்கள் தோன்றி, அவை வெடித்து மறைந்த பிறகு நமது சருமத்தில் வடுக்கள் அல்லது பள்ளங்கள் போன்றவை ஏற்படும். கூடுதலாக சுரக்கும் சீபம் (எண்ணெய் போன்ற திரவம்), இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியா போன்றவை சேர்ந்து கொண்டு நமது சருமத்தில் உள்ள சிறு சிறு ஓட்டைகளை அடைத்து விடுவதால் அங்கு வீக்கம் ஏற்படுகிறது. மிதமான பருக்கள் தோன்றினால் வீக்கம் வடிந்த பிறகு அங்கு கரும் திட்டுக்களோ, வடுக்களோ ஏற்படலாம்; ஆயினும் ஆழமான வடுக்கள் தோன்றினால், கொலாஜன் பாதிக்கப்படலாம். அப்போது சருமத்தின் தன்மையே மாறுபட்டு நிரந்தரமான வடுக்களும் ஏற்படலாம்.

பொதுவாக சாதாரண பருக்கள் 90% இளைஞர்களுக்கே (பதின் பருவத்தினர்) ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் வடுக்கள், பொதுவாக பலருக்கும் ஏற்படக்கூடியவைதான். அதற்கு சரியான கவனமும் மருத்துவ கவனிப்பும் தேவை. ஆனால் வடுக்களை குணப்படுத்துவதற்கு முன்பாக, பருக்கள் வராமல் தடுப்பது மிகவும் அவசியம். எனவே எதனால் பருக்களினால் வடுக்கள் ஏற்படுகின்றன என்பதைத் தெரிந்து கொண்டு பின்பு அவற்றுக்கான சிகிச்சைகளையும், அவற்றின் வகைகளையும் பார்க்கலாம்.

பருக்களினால் வடுக்கள் ஏற்படக் காரணங்கள்?

எத்தனை தீவிரமான பருவாக இருந்தாலும், அதற்குப் பிறகு நமது சருமம் மீண்டும் இயல்பாக மாற எடுத்துக் கொள்ளும் காலத்தைப் பொருத்து வடுக்களின் தீவிரமும் மாறுபடும். இருந்தாலும் கீழ்க்கண்ட காரணங்களால் தீவிரமான வடுக்கள் ஏற்படும் ஆபத்து அதிகம்.

  • மிகத் தீவிரமான நீர்க் கட்டிகள், முடிச்சுகள் (சிஸ்ட் மற்றும் நாட்யூல்ஸ்) போன்றவை அடிக்கடி தோன்றுதல்.
  • தீவிரமான பருக்களும் வீக்கமும் ஏற்பட்டபோது அதற்கான சிகிச்சை அளிக்கத் தாமதப்படுத்துதல்.
  • பருக்களை கிள்ளுதல், அழுத்துதல் மற்றும் நசுக்குதல்.
  • உங்கள் குடும்பத்தில் பலருக்கு பருக்களும் அதனால் வடுக்களும் இருந்திருந்தால், உங்களுக்கும் வரலாம்.

மேலே குறிப்பிட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்றையாவது உங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தால் உங்களுக்கு பருக்கள் வரவும், அதனால் வடுக்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு வடுக்கள் இருந்தால், அதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள். அது எந்த வகையைச் சேர்ந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள்; அதற்கேற்ற சிறப்பு சிகிச்சையை அப்போதுதான் சரியாக நிர்ணயிக்க முடியும்.

பருக்களால் வரும் வடுக்களின் வகைகள் மற்றும் பிரிவுகள்

பருக்கள் வந்து மறையும்போது, பாதிக்கப்பட்ட நமது சருமம் இயல்பு நிலைக்குத் திரும்பும் சமயத்தில், நமது சருமத்தில் உள்ள கொலாஜன் அளவைப் பொருத்து வடுக்கள் ஏற்படும் – அவற்றை இரண்டு வகைப் படுத்தலாம்:- ஏட்ரோபிக் (உள்ளழுந்தி இருப்பவை) அல்லது ஹைபர்ட்ராபிக் (மேலே எழும்புபவை). வடுக்களில் பொதுவாக 10% மட்டுமே மேலே எழும்பிய வடுவாக உள்ளன. இவற்றை கெலாய்ட்ஸ் என்று குறிப்பிடுவார்கள்.

அனுபவம் மிக்க தோல் மருத்துவ நிபுணர்கள் ஏட்ரோபிக் வடுக்களை மேலும் சில பிரிவுகளாகப் பிரிக்கின்றனர்:

  • ஐஸ் பிக் ஸ்கார்ஸ் – இவை கூர்மையாகவும் குறுகலாகவும் மிகுந்த கூர்மையான முனைகளுடனும் காணப்படும். இவற்றின் விட்டம் 2 மிமீ விடக் குறைவாக இருக்கும்.
  • ரோலிங் ஸ்கார்ஸ் – இவை சருமத்தில் பள்ளங்கள் போலக் காணப்படும். விட்டம் ஏறக்குறைய 5 மிமீ வரை இருக்கும். இவை தொடரலை போன்ற தோற்றத்தில் வட்டமாக இருக்கும்.
  • பாக்ஸ்கர் ஸ்கார்ஸ் – இவை ரோலிங் ஸ்கார்களை விட விரிவானவை. நன்கு வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடுகளுடன், 1.5 மிமீ முதல் 4 மிமீ வரை ஆழமாக இருக்கும்.

வடுக்களை நீக்க வழங்கப்படும் அனைத்து சிகிச்சைகளும் அவை எந்த வகையைச் சேர்ந்தவை என்பதைப் பொருத்தும், எந்த அளவு தீவிரமானவை என்பதைப் பொருத்துமே அமையும்; இவற்றை சரியாகத் தெரிந்து கொண்டு வழங்கப்படும் சிகிச்சைகள் வெற்றிகரமாக அமையும்.

பொதுவான அடையாளங்கள் & அறிகுறிகள்

உங்களுக்கு அதிகம் பருக்கள் வரக்கூடிய வாய்ப்பு இருந்தால் அதனால் உங்களது முகம், மார்பு மற்றும் முதுகில் வடுக்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளும், அடையாளங்களும்:

  • சருமத்தில் சற்று ஆழமான பள்ளங்கள்.
  • சருமத்தில் மேலெழும்பி நிற்கும் கட்டி போன்றவை.
  • பருக்கள் மறைந்த பிறகு அந்த இடத்தில் ஏற்படும் கருந்திட்டுக்கள்.

பருக்களால் ஏற்படும் வடுக்களைப் பற்றிய நோயியல் மற்றும் உடலியல் சார்ந்த சில விவரங்கள்

சருமத்தில் ஏதாவது பெரிய காயம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் அவை குணமடைந்து சரியாகும் சமயத்தில் பொதுவாக வடுக்கள் ஏற்படுகின்றன. பருக்கள், தீக்காயங்கள், உடலில் ஏற்படும் நேரடிக் காயங்கள், அம்மை, தடுப்பூசிகள், அறுவை சிகிச்சைகள் போன்ற பல காரணங்களால் இத்தகைய வடுக்கள் தோன்றலாம். பருக்களால் ஏற்படும் வடுக்கள் பொதுவாக ஏட்ரோபிக் அதாவது ஆழமான பள்ளங்கள் போல இருக்கும். இவை கொலாஜன் அளவு குறைவதால் ஏற்படும். ஹைபர்ட்ராபிக் வடுக்கள் மேலெழும்பி, கனமாகவும், அழுத்தமாகவும் இருக்கும். பருக்கள், மறைந்த பிறகு கொலாஜன் கூடுதலாக சுரந்தால் இவை தோன்றலாம்.

கண்டறிதல்

பருக்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அவை தீவிரமாகலாம். நிரந்தரமாக கொலாஜனைப் பாதிக்கலாம். நிரந்தரமான, நன்கு வெளியே தெரியக்கூடிய வடுக்களை ஏற்படுத்தலாம். தோல் மருத்துவர்கள் நேரடியாக பரிசோதிக்கும்போதே பருக்களால் ஏற்படும் வடுக்களைப் பற்றி பல விஷயங்களை அறிந்து கொள்வார்கள். அவை லேசானவையா, மிதமானவையா, தீவிரமானவையா என்று கண்டறிந்து அவற்றுக்கு ஏற்ற சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்கள்.

    Talk to Our Experts

      Subscribe to Newsletter

      Expert guide to flawless skin and nourished hair from our dermatologists!