- Home
- Laser Hair Removal
உடலில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க லேசர் சிகிச்சைகள்
முடிகள் அற்ற மிருதுவான சருமத்தைப் பெற நேர்த்தியான தீர்வுகள்
“லேசர்” என்பது Light Amplification by Stimulated Emission of Radiation என்பதைக் குறிக்கும் ஒரு குறுஞ்சொல். நமது உடலில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க லேசர் பயன்படுத்தி சிகிச்சைகள் வழங்கப்படுவதையே லேசர் ஹேர் ரிமூவல் LHR என்கிறோம். குறிப்பிட்ட இடத்தில் உள்ள மயிர்க்கால்களின் ஸ்டெம் செல்களில் மிகச் சீரான முறையில், துல்லியமாக, அதிக சக்தி வாய்ந்த, ஒளிக்கற்றைகள், ஒருங்கிணைத்து செலுத்தப்பட்டு இச் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் மீண்டும் புதிதாக முடி வளர்வது தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு புதுமையான முறையில் லேசர் கதிர்களைப் பயன்படுத்தி முடி நீக்குவதற்கான சிகிச்சைகள் வழங்கப்படும் போது, மிகத் துல்லியமாகவும், சுற்றியுள்ள சருமம் பாதிக்காத வகையிலும் சிகிச்சையை வழங்க முடிகிறது.
ஒலிவாவில் இன்று நீங்கள் லேசர் மூலம் முடி நீக்கும் சிகிச்சையை (LHR) எடுத்துக்கொள்வது, வாழ்நாள் முழுவதும் நல்ல பலன்களைத் தரக்கூடிய சிறந்த முதலீடு என்றே கூறலாம். ஒலிவாவில் LHR மிகப் பாதுகாப்பாகவும், எவ்விதமான வலியும் இன்றியும், முழுமையாக வழங்கப்படுகிறது. சுற்றியுள்ள சருமத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இன்றி தேவையற்ற மூடி நீக்கப்படுகிறது. இந்தப் பலன்கள் நிரந்தரமானவை. வேக்ஸிங் ஷேவிங் போன்ற பிரச்சனைகள் நிறைந்த முறைகளுக்கு பதிலாக மிகச் சிறந்த பலனளிக்கும் மாற்றுச் சிகிச்சையாக இது விளங்குகிறது: இந்தச் சிகிச்சையின் பிற பலன்கள்:
- நிரந்தரமாக, முடி வளர்வதைக் குறைக்கிறது
- உடலின் எந்தப் பகுதியிலிருந்தும் தேவையற்ற முடிகளை நீக்க இச் சிகிச்சை பொருத்தமானது
- சுற்றியுள்ள சருமம் பாதிக்காதபடி துல்லியமாக சிகிச்சை வழங்கப்படுகிறது
- இந்த சிகிச்சையை 45 நிமிடங்களிலிருந்து 1 மணி நேரத்திற்குள் செய்து விடலாம்
- பலன்களுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை
- பெரிய பக்க விளைவுகள் ஏதும் இல்லை
- பிரச்சனைகள் அற்ற, நீண்ட நாள் பயனளிக்கும் சிக்கனமான சிகிச்சை முறை
எங்கள் கிளினிக்கில் உள்ள மேம்பட்ட லேசர் மெஷின்கள் அனைத்துவிதமான இந்திய சரும வகைகளுக்கும் பொருத்தமானது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களது தனித்தனியான தேவைகளுக்கு ஏற்ப, உடலின் பல பாகங்களில், மிகக் கவனமாகத் தனிப்பட்ட சிகிச்சைகளை வழங்குகிறோம். கீழ்க்கண்ட பேக்கேஜ்களை நாங்கள் வழங்குகிறோம்:
- முழு உடலிலும் முடிகளை நீக்குதல்
- முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்குதல்
- அக்குள் பகுதிகளில் முடிகளை நீக்குதல்
- அந்தரங்கப் பகுதிகளில் முடிகளை நீக்குதல்
- மேலுதட்டுப் பகுதிகளிலும், முகவாய்ப் பகுதியிலும் முடி நீக்குதல்
- கால்களில் முடி நீக்குதல்
- மார்பு, அடிவயிற்றுப் பகுதி, முதுகில் முடி நீக்குதல்
- கைகள், உடலின் மேல் பகுதியில் முடி நீக்குதல்
ஒலிவாவில் LHR சிகிச்சையில் கீழ்க்கண்டவை வழங்கப்படும்:
- ஒரு சிறந்த தோல் மருத்துவ நிபுணரின் ஆலோசனை தனிப்பட்ட முறையில் வழங்கப்படுகிறது
- தேவையற்ற முடி வளர்வதற்கான அடிப்படைக் காரணம் தீவிரமாக ஆராயப்படுகிறது
- தனிப்பட்ட தேவைக்கேற்ப சிகிச்சைத் திட்டம் தயாரிக்கப்படுகிறது
- சிகிச்சைக்கு முன்னால் தேவையான வழிகாட்டுதல்கள்
- சிகிச்சைகள்
- சிகிச்சைக்குப் பிறகு தகுந்த உதவிகள் மற்றும் தொடர் பராமரிப்புக் குறிப்புகள்
ஒலிவாவில் LHR சிகிச்சை எடுத்துக் கொள்கையில் கீழ்க்கண்டவற்றை எதிர்பார்க்கலாம்:
- முதலில் நன்கு பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்கள் குறிப்பிட்ட பகுதியை ஷேவ் செய்து லேசர் சிகிச்சைக்கு முன் அங்கு ஒரு கூலிங் ஜெல்லைத் தடவுவார்கள்.
- மிகுந்த அனுபவம் உள்ள மருத்துவர், உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்பவும், முடியின் வகைக்கு ஏற்பவும் லேசர் கதிர்கள் செலுத்தப்பட வேண்டிய அளவை நிர்ணயம் செய்வார்.
- சிகிச்சை வழங்குபவர், சிகிச்சை வழங்கப்பட வேண்டிய பகுதியை சிறு சிறு பகுதிகளாகப் பிரிப்பார்.
- அந்தப் பகுதியில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவதற்காக தோல் மருத்துவ நிபுணர், கையில் வைத்துப் பயன்படுத்தக்கூடிய லேசர் கருவியைப் பயன்படுத்துவார்.
- சிகிச்சையை முடித்த பிறகு, ஒரு கோல்ட் கம்ப்ரெஸ் (Cold Comprass) பயன்படுத்தி எரிச்சல், சிவந்து போகுதல் போன்றவை ஏற்படாது பார்த்துக் கொள்வார்.
நீங்கள் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க விரும்பினால், ஒலிவா கிளினிக்கில் வழங்கப்படும். லேசர் சிகிச்சை உங்களுக்கு மிகவும் பொருத்தமானது. இது அனைத்து சரும வகைகளுக்கும் பொருத்தமானது. குறிப்பாக வெளிறிய சருமத்திற்கும் அடர்த்தியான முடிக்கும் மிகவும் பொருத்தமான சிகிச்சை இது.
எனினும் இதை கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும், பருவமடையும் பருவத்தில் உள்ளவர்களும் எடுத்துக் கொள்வது நல்லதல்ல. இந்தப் பருவங்களில் நமது உடலில் அதிகமாக ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதால் இச் சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதில்லை.
இந்தியாவில் லேசர் மூலம் முடி நீக்கும் சிகிச்சைக்கு ஒரு அமர்வுக்கு ஏறக்குறைய ரூ.1000/- லிருந்து தொடங்குகிறது. அதிகபட்சமாக ஒரு அமர்வுக்கு ரூ.30,000/- வரை செலவாகலாம். சிகிச்சை அளிக்க வேண்டிய பகுதி, முடியின் நிறம், வகை, அடர்த்தி, சருமத்தின் தன்மை மற்றும் முடி வளர்வதற்கான காரணம் ஆகியவற்றைப் பொருத்தும், தேர்ந்தெடுக்கப்படும் லேசர் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலும் ஒருவருக்கொருவர் கட்டணங்கள் மாறுபடலாம். உதாரணமாக உதட்டின் மேல் உள்ள முடியை நீக்குவதற்கான செலவு, முழு உடலில் நீக்குவதற்கான செலவைவிடக் குறைந்தே இருக்கும்.
*நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் பொருந்தும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டணங்கள் தோராயமானவை மற்றும் குறிப்பாகக் கொடுக்கப்பட்டவை மட்டுமே. உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப இவை மாறும். உங்களுடைய தேவைகளுக்கு எவ்வளவு செலவாகும் என அறிய விரும்பினால், எமது தோல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்று, ஒரு சிகிச்சை திட்டத்தைத் தயார் செய்து கொள்வது நல்லது. இந்தக் கட்டணங்கள் தோராயமானவை ஒலிவாவில் வழங்கப்படும். லேசர் மூலம் முடி நீக்கும் சிகிச்சைகளுக்கான சரியான/துல்லியமான கட்டணம் அல்ல.
ஆன்லைன் அல்லது 1800-103-3893 மூலம் அபாயிண்ட்மெண்ட் பெற வேண்டும். எமது வாடிக்கையாளர் சேவைக் குழுவினர் உங்கள் வசதிக்கேற்ப எமது தோல் மருத்துவ நிபுணரிடம் அபாயிண்ட்மெண்ட் பெற உதவுவார்கள்.
தேவையற்ற முடிகளை நீக்க ஒலிவாவில் FDA ஒப்புதல் பெற்ற சிகிச்சை வழங்கப்படுகிறது. எங்கள் சிகிச்சையின் விவரங்களை நன்கு அறிந்து கொள்ளுங்கள். ஒரு மிகச் சிறந்த தோல் மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் அது எப்படி வழங்கப்படுகிறது என்பதையும் பாருங்கள்.
*Images are from real clients, and results can be subjective
லேசர் மூலம் எடுக்கப்பட்டது – முன்/பின் புகைப்படங்கள்
ஒலிவாவில் சிகிச்சை பெற்றவர்களின் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பாருங்கள். அவர்கள் முகம், மேலுதடு போன்ற பகுதிகளில் நல்ல வித்தியாசம் தெரிவதை உணர்வீர்கள். லேசர் மூலம் முடி நீக்கும் சிகிச்சை வழங்கும் போது நமது தோல் மருத்துவ நிபுணர்கள் மிகத் திறமையாக வழங்குவதால் நல்ல பலன்களைப் பெற முடிகிறது. குறிப்பாக அக்குள் பகுதிகள், அடிவயிற்றுப் பகுதி, கால்கள், முதுகு, மார்பு போன்ற பகுதிகளில் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கின்றன.
Treatment results may vary from person to person
Client Reviews
Read below what our esteemed clients have to say about us and what makes us the premier provider of skin and hair care services.
Laser

Reviewed us for : Laser Hair Removal
Naredla Mamatha
Full body laser treatment

Reviewed us for : Laser Hair Removal
Bhanushali Sila
Skin treatment

Reviewed us for : Skin Lightening Treatment
Sara Akshitha srinivas
Treatment

Reviewed us for : Tattoo Removal
JAHNAVI SWEETY
Inch lose treatment

Reviewed us for : Laser Hair Removal
satya kartthick
Treatment
Reviewed us for : Pimple Treatment
Lubna Khan
Highly Recommended
Reviewed us for : Hair Loss Treatment
AJITTESH BIHHARII
Awesome service
Reviewed us for : Acne Scar Treatment
Diya Kovoor
Weight Loss Treatment by Dr. Shweta
Reviewed us for : Inch Loss Treatment
hajira tasu
Why Oliva
Experienced in-house team of
Certified DermatologistsComprehensive one-to-one
consultation with the doctorAdvanced US-FDA approved
equipmentWell trained and certified
therapistsServed 2,50,000 happy customers
and countingStringent guidelines and set
protocols for better service efficacy
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - லேசர் மூலம் முடி நீக்கும் சிகிச்சைகள்
எங்களிடம் சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 6-8 அமர்வுகளுக்குள் முடி வளர்வதிலும், முடியின் அடர்த்தியிலும் நல்ல மாற்றங்கள் தெரிகின்றன. ஆயினும் முடியின் வகை, சிகிச்சை பெறுபவரின் வயது அவரது ஹார்மோன்களின் நிலை ஆகியவை பொருத்து இது மாறலாம்.
ஆம். எமது வாடிக்கையாளர்களில் 91% நீண்டகாலப் பலன்களைப் பெற்றுள்ளனர். பராமரிப்புக்காக சில அமர்வுகள் தேவைப்பட்டாலும் மிகச் சிறந்த பலன்களைப் பெற்றுள்ளனர்.
ஒலிவாவில் USFDA-வின் ஒப்புதல் பெற்ற அதிநவீன Soprano Ice லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். ஒலிவாவில் உள்ள இந்த மிக மேம்பட்ட லேசர் கருவிகள் உலகிலேயே மிகச் சிறந்தவைகளுள் ஒன்று. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, லேசர் கதிர்களின் அடர்த்தியை மிகத் துல்லியமாகக் கணித்து எமது தோல் மருத்துவ நிபுணர்கள் பயன்படுத்துவதால், இந்த சிகிச்சைகள் மிகவும் பாதுகாப்பானவை. நல்ல பலன்களையும் இவை மூலம் பெற முடிகிறது.
நிச்சயம் இல்லை. ஒலிவாவில் இச் சிகிச்சை பெறும்போது மிகவும் சௌகரியமாக உணர்வீர்கள். Soprano Ice கருவிகளில் உள்ள குளிர்ந்த முனைப் பகுதிகளால், வெப்பத்தால் ஏற்படும் காயங்கள் எதுவுமின்றி மிகுந்த பாதுகாப்போடு இச் சிகிச்சைகளைத் தர முடிகிறது. எங்களிடம் இந்த சிகிச்சை பெற்ற சிலர், இது ஒரு வெது வெதுப்பான கல்லால் இதமாக மசாஜ் செய்வது போல இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
முதல் முறை சிகிச்சை அளிப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்பாகவே அந்த இடத்தில் வேக்ஸிங், திரெடிங் மற்றும் பிளக்கிங் போன்றவற்றை நிறுத்தச் சொல்லி தோல் மருத்துவர் அறிவுறுத்துவார்.
ஒரு அமர்வுக்கும் மற்றொரு அமர்வுக்கும் இடைப்பட்ட நாட்களில் வேறு முறைகள் மூலம் முடியை நீக்க வேண்டாம் என தோல் மருத்துவர் அறிவுறுத்துவார். சிகிச்சையின் மொத்த காலகட்டத்திலும் அந்த முடிகளின் வேர்ப்பகுதிகளில் மாற்றங்கள் ஏற்படாமல் இருப்பது அவசியம்.
லேசர் மூலம் முடி நீக்குதல் புரட்சிகரமான புதுமையான ஒரு தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படும் சிகிச்சை என்பதாலேயே பலர் அதற்குக் கட்டாயம் மிக மிக அதிக செலவாகும் என நினைக்கின்றனர். ஆனால் பல பழைய முறைகளுடன் ஒப்பிடுகையில் இது மிக நல்ல பலனளிக்கக் கூடிய நியாயமான கட்டணத்துடன் கூடிய சிகிச்சை முறை என்று உறுதியாகக் கூறலாம்.