34480
page-template/template_concern_page.php

0
page-template/template_concern_page.php

அலோபேசியா (முடி கொட்டுதல் / முடி இழத்தல்): காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்

Highlights

  • ● தலைமுடி கொட்டுவதை மருத்துவத்தில் அலோபேசியா என்று சொல்லுவார்கள்.
  • ● 30 - 50 வயது வரை உள்ள ஆண்களில் 58% பேருக்கு தலைமுடி கொட்டும் (அலோபேசியா) பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
  • ● 20 - 29 வயது வரையில் உள்ள பெண்களில் 12% பேருக்கு இந்த பிரச்சனை உள்ளது.
  • ● மரபுசார்ந்த பரம்பரை சார்ந்த காரணங்கள்தான் பெரும்பாலும் முடி கொட்டுதலுக்குக் காரணமாக உள்ளது.
  • ● தலைமுடி மற்றும் அதன் நோய்கள் பற்றிய பிரிவான டிரைகாலஜியில் தற்போது ஏற்பட்டுள்ள அதிநவீன முன்னேற்றங்களால், மிகவும் அதிகமாக முடி கொட்டுவதைக் கூட மருத்துவர்களால் குணப்படுத்த முடியும்.

முடி கொட்டுவது என்பது என்ன?

அலோபேசியா என்பது தலையின் ஒரு பகுதியிலோ அல்லது மொத்தமாகவோ, ஒரு இடத்தில் மட்டுமோ அல்லது பொதுவாகவோ, வெளிப்புற காரணங்களாலோ, உள்ளார்ந்த காரணங்களாலோ முடி கொட்டுவதைக் குறிக்கும். பொதுவாக நம் அனைவருக்குமே ஒரு நாளைக்கு 100 தலைமுடிகள் கொட்டும். அதற்கும் மேலாக 120-150 வரை முடி கொட்டினாலோ அல்லது தலை மண்டைப் பகுதியில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் முடி கொட்டுவது போல இருந்தாலோ உடனடியாக தலைமுடி சிகிச்சை வல்லுநரை (டிரைகாலஜிஸ்ட்) சந்திக்க வேண்டும்.

முடி கொட்டுவது நமது உடலின் எந்தப் பகுதியையும், தலை மண்டைப் பகுதி உட்பட, பாதிக்கலாம். பொதுவாக பெரும்பாலோருக்கு ஆண்ட்ரோஜெனடிக் அலோபேசியா அல்லது ஒரு குறிப்பிட்ட வடிவம்/விதமாக முடி கொட்டும் பிரச்சனை ஏற்படுகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது. முடி கொட்டும் பிரச்சனை எவருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆண்ட்ரோஜெனடிக் அலோபேசியா 20-30 வயதிற்குள்ளாகவே சிலருக்கு ஏற்படுகிறது.

முடி கொட்டுவதன் வகைகள்:

அனுபவமும் தகுதியும் பெற்ற முடி சிகிச்சை வல்லுநர்கள் முடி கொட்டுவதை கீழ்க்கண்ட வகைகளாகப் பிரிக்கிறார்கள்:

  • ஆண்ட்ரோஜெனடிக் அலோபேசியா – இது பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்களிடையே காணப்படுகிறது. அவர்களது பதின்பருவத்திலேயே (teenage) தொடங்கி விடுகிறது, வயதாக ஆக முடி கொட்டுவதும் அதிகரிக்கிறது.
  • ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை – பொதுவாக ஆண்களுக்கு வழுக்கை விழும்போது ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஏற்படுகிறது. முதலில் தலையின் முன்பக்கத்தில் நெற்றிக்கு இரு பக்கமும் முடி கொட்டுகிறது. வயதாக ஆக தலைமுடி பின்னே சென்று ‘M’ போன்ற வடிவம் ஏற்படுகிறது. மண்டையின் நடுப்பகுதி, உச்சந்தலையில் முடி கொட்டுகிறது; கொஞ்சமாகவோ முழுவதுமாகவோ வழுக்கை விழுகிறது.
  • பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை – பொதுவாகப் பெண்களுக்கு உச்சந்தலையில் முடி கொட்டத் தொடங்குகிறது. தலை வகிடு அகலமாகத் தெரியத் தொடங்குகிறது. ஆனால் நெற்றியில், தலையின் முன்புறம் முடி பெரும்பாலும் கொட்டுவதில்லை – அப்படிக் கொட்டினால் முழுவதும் வழுக்கை விழ வாய்ப்பு உண்டு.
  • டெலோஜென் எஃப்ளுவியம் – இது பரவலாக முடி கொட்டி ஆங்காங்கே தலை மண்டை தெரிவதைக் குறிக்கிறது. தலைமுடி கொட்டுவதைத் தூண்டக்கூடிய ஒரு நிகழ்வுக்குப் பிறகு 3 மாதங்களில் முடி கொட்டத் துவங்கி, பெரும்பாலும் 6 மாதங்களில் தானாகவே முடி கொட்டுவது நின்றுவிடும்.
  • அலோபேசியா அரியேடா – தலை மண்டைப் பகுதியில் ஆங்காங்கே முடி கொட்டி வட்ட வட்டமாக வழுக்கை விழுவதை இது குறிக்கிறது. பிற பகுதிகளில் உள்ள தலைமுடி கொஞ்சமும் பாதிக்கப்பட்டிருக்காது. ஆனால் நாளடைவில் மொத்த முடியும் கொட்டி விடும் நிலை ஏற்படலாம். நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியே நமது உடலின் திசுக்களை எதிர்க்கும் போது இவ்வாறு ஏற்படலாம்.
  • டிரைகோடில்லோமேனியா – அடிக்கடி தலை முடியைப் பிடித்துப் பிடித்து இருப்பதனால் முடி கொட்டுவதை இது குறிக்கிறது. முடியைப் பிடித்து இழுக்க வேண்டும் என்ற உந்துதல் சிலருக்கு அடிக்கடி ஏற்படும்போது நிகழ்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
  • இன்வொல்யூஷனல் அலோபேசியா – பொதுவாக, இயற்கையாக வயதாவதால் முடி கொட்டுவதை இது குறிக்கிறது. தலைமுடி வளரும் சுழற்சியில், நமது தலைமுடி வளரும் Anagen (growth) காலம் குறைந்து கொண்டே வருவதனால் இது ஏற்படுகிறது. வயதாகும் போது முடி கொட்டும் வேகத்தில், முடி மீண்டும் வளருவதில்லை.
  • ஸ்காரிங் அலோபேசியா – இந்த cicatricial alopecia என்றும் சொல்வார்கள். மிக அரிதாக ஏற்படக்கூடியது. எப்போதாவது ஏதாவது வீக்கமோ அல்லது வடுவோ ஏதாவது தீவிர நோய்களின் காரணமாக ஏற்பட்டு, அவற்றால் தலைமுடி வளர்ச்சி தடைப்பட்டால் அதை இப்படி வகைப்படுத்துவார்கள்.

பேதோஃபிஸியாலஜி (நோயியல் மற்றும் உடலியல் சார்ந்த விவரங்கள்):

நமது முடி வளரும் சுழற்சியில் தடங்கல்கள் ஏற்படும் போதுதான் முடி கொட்டுதல் அதிகமாகிறது. கீழ்க்கண்டவாறு இந்த சுழற்சி அமையும்:-

  1. அனாஜென் அல்லது வேகமாக முடி வளரும் காலம் (2-7 வாரம்)
  2. கேடஜென் அல்லது நிலை மாறும் காலம் (1-2 வாரம்)
  3. டெலோஜென் அல்லது தங்கியிருக்கும் காலம் (5-12 வாரங்கள்)

சராசரியாக ஆரோக்கியமான தலைப்பகுதியில் நமது மொத்த தலைமுடியில் 9-10% டெலோஜென் நிலையில் இருக்கும். ஆண்ட்ரோஜெனிக் அலோபேசியா இருந்தால், கொஞ்சம் கொஞ்சமாக முடி கொட்டுவது அதிகரித்துக் கொண்டே போகும். இதனால் வழுக்கை தெரிவதும் அதிகரிக்கப்படும். மேலும் அவ்வாறு நடக்கும்போது முதல்நிலை (அனாஜென்) குறுகி, மூன்றாவது நிலை கொஞ்சம் அதிகமாகிறது. கொஞ்சம் கொஞ்சமாக முடி கொட்டுவது அதிகரித்து விடுகிறது.

முடி கொட்டுவதற்கான காரணங்கள்:

முடி கொட்டுவதை இவைபோல பல காரணங்கள் தூண்டலாம்:

  • பரம்பரை சார்ந்த காரணங்கள் – உங்கள் குடும்பத்தில் முன்னோர்களுக்கு இருந்தால், உங்களுக்கும் ஆண்ட்ரோஜெனிடிக் அலோபேசியா ஏற்படலாம். அதன்படி, ஆண்களுக்கு அங்கங்கே வழுக்கையும், நெற்றியின் முன் பகுதியில் வழுக்கையும் ஏற்படலாம். பெண்களுக்கு முடி மெலிந்து போகலாம். வகிடு அகலமாகலாம்: அந்த இடத்தில் தலைமண்டைப் பகுதி அகலமாகச் தெரியலாம்.
  • ஹார்மோன்களால் ஏற்படும் பிரச்சனைகள் – கருவுற்று இருக்கும் போதும், மாதவிடாய் நிற்கும் போதும் பெண்களுக்கு முடி கொட்டுவது அதிகமாகலாம். மேலும் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தும் போதும், குழந்தை பிறப்பின்போதும், கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகும், ஹார்மோன்களின் நிலைகள் மாறுவதால் பெண்களுக்கு முடி கொட்டலாம். அப்போது முடி வளரும் காலம் (Anagen phase) குறைந்து விடுகிறது. இன்சுலினுக்கு எதிர்த்து உடல் செயல்படும் போதும் முடி கொட்டலாம். சில சமயங்களில் ஆண்களுக்கும், ஹார்மோன்களின் ஏற்ற இறக்கத்தால் முடி கொட்டலாம்.
  • முறையற்ற வாழ்க்கை முறை – மிகுந்த மன அழுத்தம், சரியான உணவு எடுத்துக் கொள்ளாதிருத்தல், ஊட்டச்சத்துக் குறைபாடு, சீரற்ற வாழ்க்கை முறை, போன்றவையும் முடி கொட்டுவதைத் தூண்டலாம்.
  • மருந்துகள் – புற்றுநோயை குணப்படுத்த கீமோதெரபி (மருந்துகள்) கொடுக்கப்படும் போது தலைமுடி கொட்டலாம்.
  • மிக இறுக்கமாக முடியைக் கட்டுதல் மற்றும் இரசாயனப் பொருட்களின் பயன்பாடுகள் – மிக இறுக்கமாக குதிரைவால் கட்டுதல், பின்னுதல் போன்றவை மயிர்க் கால்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி அதனால் முடி கொட்டலாம். சில சமயங்களில் இரசாயனப் பொருட்கள் கலந்த பிளீச், வண்ணங்கள், சாயம் போன்றவற்றாலும் முடி கொட்டலாம்.
  • பிற காரணங்கள் – சில சமயங்களில் தைராய்டு பிரச்சனைகள், லூபஸ், PCOD, அதிரடியான உணவு மாற்றங்கள் (diet), திடீர் பழக்கங்கள் போன்றவைகளாலும் தலைமுடி கொட்டலாம். மேலும் பதட்டத்தினால் அடிக்கடி முடியைப் பிடித்து இழுத்தல், தலையை அழுத்தித் தேய்த்தல், வேகமாக எடை குறைதல், தொற்று நோய்கள், தலைமுடி சாயத்திற்கு ஒவ்வாமை, தலைமுடிக்குப் பயன்படுத்தும் சில அழகு பொருட்கள், செபோரிக் டெர்மடைடிஸ் அல்லது சொரியாசிஸ் போன்ற நோய்கள் போன்ற இவற்றாலும் முடி கொட்டலாம்.

அறிகுறிகள், அடையாளங்கள்:

  • மிக அதிகமாக, தொடர்ந்து முடி கொட்டுதல்.
  • உச்சந்தலையில் முடி கொட்டி மெலிந்து போகுதல்.
  • ஆங்காங்கே வட்ட வட்டமாக முடி கொட்டி வழுக்கை விழுதல்.
  • தலை மண்டையில் ஃபங்கஸ் தொற்று மற்றும் அத்துடன் வலி/அரிப்பு போன்றவையும் இருந்தாலும் முடி கொட்டலாம்.
  • அங்கங்கே முடி கொட்டுதல்.
  • M வடிவத்தில் முன்புறத்தில் முடி கொட்டுதல்.

கண்டறிதல்

டிரைகாலஜிஸ்ட்ஸ், அதாவது தலைமுடி சிகிச்சை வல்லுநர்கள் உங்கள் மருத்துவப் பின்னணியை கேட்டு அறிந்து கொண்டு, உங்களையும் நன்கு பரிசோதித்து, டிரைகோஸ்கோபி போன்ற பரிசோதனைகளையும் செய்து, உங்களுக்கு முடி கொட்டுவதற்கான சரியான காரணங்களைக் கண்டறிவார்கள். சில சமயங்களில் மிக அதிகமாக முடி கொட்டினால் ஏதேனும் சந்தேகம் இருந்தால், உங்கள் மருத்துவர் பயாப்ஸி செய்யச் சொல்லி பரிந்துரைக்கலாம். அந்த முடிவுகளுக்கேற்ப சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம்.

உங்களுக்கு முடி கொட்டும் ஆபத்து உள்ளதா?

பொதுவாக ஒரு குடும்பத்தில் முன்னோர்களுக்கு வழுக்கை இருந்தால், அக் குடும்பத்தில் ஆண்களுக்கு வழுக்கை விழ வாய்ப்புகள் அதிகம். பெண்களுக்கு பெரும்பாலும் கர்ப்பமாக இருக்கும் போதும், மாதவிடாய் நிற்கும் சமயத்திலும், கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் சமயத்திலும் PCOD போன்ற நோய்கள் இருக்கும் போதும் அதிகமாக முடி கொட்டலாம்.

இந்தப் பிரச்சனையை தடுப்பது மற்றும் கையாள்வது எப்படி:

முடி கொட்டுவதைத் தடுப்பதற்கு சில எளிய வழிகள் இதோ:

  • மிகத் தீவிரமான இரசாயனப் பொருட்களைத் தலைக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மேலும் முடியை நேராக்கும் ஸ்ட்ரெய்ட்னர்கள் மற்றும் பர்மிங் அயர்ன் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
    தினமும் தவறாமல் முடியை கவனித்துப் பராமரிப்பதை வழக்கமாகக் கொள்ளவும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை மிதமான ஷாம்பூ பயன்படுத்தி முடியை சுத்தமாக வைத்திருக்கவும். உங்கள் தலைமுடியைப் பொருத்தும், எந்த அளவு தலைமுடியில் தூசி மற்றும் மாசு போன்றவை படுகின்றன என்பதைப் பொருத்தும் ஷாம்பூவை வாரத்திற்கு எத்தனை முறை பயன்படுத்துவது என்று முடிவு செய்யலாம்.
     சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளவும். நல்ல ஊட்டச் சத்துக்களும், வைட்டமின்களும், இரும்புச்சத்து, வைட்டமின் B12, வைட்டமின் D, புரதச்சத்து மற்றும் வைட்டமின் E போன்றவை நிறைந்துள்ள உணவுகளையும் எடுத்துக் கொள்ளவும்.
     ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும். தவறாமல் தினசரி உடற்பயிற்சி செய்தும், தினசரி யோகா மற்றும் தியானம் போன்றவற்றை செய்தும் உடலை நன்கு பராமரித்து, மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
     முடியை மிகவும் இழுக்கக்கூடிய தலை அலங்காரத்தைத் தவிர்க்கவும்.

Self-care:

சுயமாகத் தானே கவனித்துக் கொள்ளுதல்:

முடி கொட்டும் பிரச்சனையை நீங்களே கவனித்து சீர் செய்ய நினைத்தால், தற்காலிக தீர்வுதான் கிடைக்கும். நீண்ட நாட்களுக்கான தீர்வு கிடைக்காது.

ஒலிவா கிளினிக்கில் வழங்கப்படும் சிகிச்சைகள்:

எங்கள் கிளினிக்கில் உள்ள மருத்துவர்கள் முடி கொட்டுவதைத் தடுக்க கீழ்க்கண்ட சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்கள்:

  1. வாய்வழியாக மருந்து எடுத்துக்கொள்ளுதல்
  2. பாதிக்கப்பட்ட இடத்தில் தடவும் மருந்துகள்
  3. முடி மீண்டும் வளர சிகிச்சைகள்
  4. முடி மாற்றுப் பொருத்துதல்

 

நோயைப் பற்றிய கணிப்பு

மருத்துவ ரீதியான காரணங்களால் முடி கொட்டினால் அதற்கு தகுந்த சிகிச்சை கொடுத்து நிறுத்த முடியும்; அவ்வாறின்றி பரம்பரையிலேயே முடி கொட்டும் பிரச்சனை இருந்தால் அதை குணப்படுத்துவது சவாலான விஷயம்தான். அதற்கு மேம்பட்ட சிகிச்சைகள் தேவைப்படலாம். எவ்வளவு விரைவில் சிகிச்சையை தொடங்குகிறோமோ அந்த அளவு முடி மீண்டும் வளர வாய்ப்புகள் அதிகம். தோல் மருத்துவரைச் சந்தித்து தீவிரமாக ஆலோசித்து உங்களுக்கு உள்ள சிகிச்சைகளைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளவும். அதுதான் மிகவும் பாதுகாப்பானது. முடி கொட்டுவதற்கு சரியான காரணத்தைக் கண்டுபிடிப்பது, சரியான சிகிச்சையை வழங்குவதற்கு மிகவும் முக்கியமானது என்று புரிந்து கொள்ளவும்.

    Talk to Our Experts

      Subscribe to Newsletter

      Expert guide to flawless skin and nourished hair from our dermatologists!