34547
page-template/template_concern_page.php

0
page-template/template_concern_page.php

முகத்தில் காணப்படும், கண்ணுக்குத் தெரியக்கூடிய, திறந்தவாறு உள்ள துவாரங்கள்: காரணங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள்

Highlights

  • ● நமது சருமத்தில் உள்ள துவாரங்கள், சிறு குழாய்களின் முடிவில் உள்ள வாய்ப்பகுதான். இந்தக் குழாய்கள்தான் நமது வியர்வை, எண்ணெய் அல்லது சீபம் போன்றவற்றை சருமத்தின் மேல் பகுதிக்கு எடுத்துச் செல்லுகின்றன.
  • ● இவ்வாறு பெரிய அளவில் உள்ள துவாரங்கள், இனம், வயது இவற்றுக்கேற்ப மாறுபடுகின்றன. ஆண், பெண் இருபாலருக்கும் வரக்கூடியவை இவை.
  • ● வயதாக ஆக முகத்தில் உள்ள துவாரங்கள் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும்.
  • ● பொதுவாக இத்தகைய துவாரங்கள் அல்லது பள்ளங்கள் ஆரம்பகாலத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும். நாளடைவில் சருமம் பாதிக்கப்படும் போதும், வயது அதிகமாகும் போதும், ஹார்மோன்கள், மரபு சார்ந்த காரணங்கள், மற்றும் செபேஷியஸ் சுரப்பிகளின் இயக்கம் போன்றவற்றின் காரணமாகவும் இவை கொஞ்சம் பெரிதாகலாம்.
  • ● சருமத்தில் உள்ள துளைகள் பல்வேறு அளவுகளில் இருக்கும் 5-10 μm முதல் 40-80 μm வரை இவற்றின் விட்டம் இருக்கலாம்.

திறந்திருக்கும் துவாரங்கள் என்றால் என்ன?

உண்மையாகச் சொல்லப்போனால் விரிவடைந்துள்ள துவாரங்களைத்தான் நாம் திறந்திருக்கும் துவாரங்கள் (Open pores) என்று குறிப்பிடுகிறோம். இவ்வாறு திறந்திருக்கும் துவாரங்களின் வழியாக, சருமத்தின் மேல் பகுதியில் சீபம் சுரக்கிறது; சருமம் சுவாசிக்கிறது.
நமது முகத்தில் அதிக அளவில் இந்த சீபத்தை சுரக்கும் சுரப்பிகள் (sebaceous glands) இருந்தால், அதுவும் குறிப்பாக ‘t-zone’ பகுதியில் இருந்தால் முகத்தில் பெரிய துவாரங்கள் ஏற்படலாம். எண்ணெய் பிசுபிசுப்பு அதிகம் உள்ள சருமம் உள்ளவர்களுக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட சரும வகைகள் இணைந்து உள்ளவர்களுக்கும் இத்தகைய பெரிய துவாரங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதிக அளவில் சீபம் சுரப்பதனால் இவ்வாறு ஏற்படுகிறது. மரபு சார்ந்த காரணங்கள், இனம், வயது, பாலினம், சருமத்தின் நிலை போன்ற பல காரணங்களால் இத்தகைய துவாரங்கள் உருவாவதும், அவற்றின் அளவும், அவை பரவியிருக்கும் விதமும் நிர்ணயிக்கப்படுகின்றன.

பல்வேறு விதமான துவாரங்கள் விளக்கும் சில படங்கள்:

 

 

 

முகத்தில் பெரிய துவாரங்கள் ஏன் உண்டாகின்றன?

இத்தகைய துவாரங்கள் உருவாவதற்கு வெளியிலிருந்து பல காரணங்களும், உள்ளார்ந்த காரணங்களும் இருக்கலாம். அவற்றுள் சில:

  • அதிகமாக சீபம் சுரத்தல் – நமது உடலில் உள்ள முடியின் வேர்க்கால்கள் குழாய்கள் போல இருக்கும். அதிகமாக சீபம் சுரக்கும் போது இவை வழியாக அதிகமாக அவை பாய்வதால் இந்த மயிர்க்கால்கள் பெரிதாகின்றன. எனவே அவற்றின் வாய்ப்பகுதிகளான துவாரங்களும் பெரிதாகத் தெரிகின்றன.
  • மயிர்க்கால்களின் அடர்த்தி அதிகரித்தல் – தடிமனான மயிர்க்கால்களின் விட்டமும் அதிகமாக இருப்பதால், அவற்றின் வாய்ப்பகுதிகளின் அளவும் (துவாரங்கள்) பெரிதாக இருக்கும். எண்ணெய் அதிகமாக சுரக்கும் போது அதற்கு வழி விடுவது போல இந்தக் குழாய்கள் பெரிதாகும்போது, துவாரங்களும் பெரிதாகத் தெரியும்.
  • பரம்பரைக் காரணங்கள் / மரபுசார் காரணங்கள் – பரம்பரை சார்ந்த கணிப்புகள், மரபு சார்ந்த காரணங்கள், இனம் சார்ந்த காரணங்கள் போன்றவையும் முகத்தின் துவாரங்களின் அளவை பாதிக்கலாம்.
  • வயது மற்றும் சூரிய ஒளி படுதல் – வயதாவதன் காரணமாகவும், சூரிய ஒளி படுவதனால் சருமத்தில் உள்ள கொலாஜன், எலாஸ்டின் இழைகள் பாதிக்கப்படுவதனாலும், நமது சருமத்தின் இழுக்கப்படும் தன்மையும் (tensile), நெகிழ்வுத் தன்மையும் பாதிக்கப்படுகின்றன. இதனால் மயிர்க்கால்களைச் சுற்றியுள்ள பல சிறு சிறு அமைப்புகளின் ஒருங்கிணைந்த தன்மையும் பாதிக்கப்படுகிறது. அப்போது முகத்தில் உள்ள துவாரங்கள் பள்ளங்கள் போலத் தோன்றுகின்றன. எனவே வயதானவர்களுக்கு பெரிய துவாரங்கள் தோன்றுவது இயல்பு.
  • நீண்ட நாள் இருக்கும் பருக்கள் – பருக்களால் பாதிக்கப்பட்ட சருமத்தில் இருக்கும் துவாரங்கள் அடைத்துக் கொள்ளும்போது அவை comedones ஆக மாறுகின்றன. மேலும் வீக்கத்துடன் கூடிய பருக்கள் சீபம் சுரக்கும் சுரப்பிகளை வலுவிழக்கச் செய்கின்றன; மயிர்க்கால்களின் வாய்ப்பகுதியும் அகன்று துவாரங்களாக மாறுகின்றன.
  • ஹார்மோன்களில் மாற்றம் – நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் கூட சீபம் சுரக்கும் சுரப்பிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம்; அதனால் துவாரங்கள் பெரிதாகலாம்.
  • சருமத்தில் சில தீவிர குறைபாடுகள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் – ரேடியோ டெர்மடைடிஸ் போன்ற நோய்கள் நீண்டகாலம் இருப்பதனாலும் வைட்டமின் A குறைபாட்டினாலும் சில சமயங்களில் சருமத்தில் பெரிய துவாரங்கள் ஏற்படலாம்.

முகத்தில் இத்தகைய துவாரங்கள் இருப்பதைக் கண்டறிவது எப்படி?

முதலில் ஒரு தோல் மருத்துவர் உங்களை நேரில் பார்த்துப் பரிசோதிப்பார்; பாதிக்கப்பட்ட முகப் பகுதிகளை பார்வையிட்டு கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் உங்கள் நிலைமை எந்த அளவு தீவிரமாக உள்ளது என்று நிர்ணயிப்பார்:

  • துவாரங்களின் அளவு
  • துவாரங்கள் அமைந்துள்ள இடங்கள்
  • துவாரங்களின் அடர்த்தி
  • எத்தனை சதவீதம் சருமம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அளவு

நன்கு பரிசோதித்து மதிப்பீடுகள் செய்த பிறகு, தோல் மருத்துவர் உங்களது சருமத்தின் பாதிப்பைப் பற்றியும் அவற்றின் காரணங்கள் பற்றியும் மிக விரிவாக விளக்குவார். அதன் அடிப்படையில், உங்கள் முகத்தில் உள்ள துவாரங்களை எப்படி குறைக்கலாம் என்றும் கூறுவார் – தடவக்கூடிய கிரீம்கள், உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் சில சிறப்பு சிகிச்சைகள் போன்றவற்றை அவர் பரிந்துரைப்பார்.

உங்களுக்கு இத்தகைய துவாரங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதா?

ஒருவேளை முகத்தில் இத்தகைய சிறு சிறு துவாரங்களுடன் சருமத்தில் எரிச்சல், பரு போன்றவையும் இருந்தால் உடனடியாக ஒரு தோல் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். கீழ்க்கண்ட விவரங்களை எப்போதும் நினைவில் கொள்ளவும்:

  • பெரும்பாலும் முகத்தில் உள்ள பெரிய துவாரங்கள் தீங்கற்றவையாக இருக்கும் (benign); இவற்றால் கருந்திட்டுக்கள் ஏற்படாது; வேறு சருமப் பிரச்சனைகளும் இருக்காது. இவற்றைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
  • துவாரங்களின் அளவு அதிகரித்து, மேலும் பரவ ஆரம்பித்து, அவற்றின் அடர்த்தியும் அதிகமானால் தோல் மருத்துவரை சந்திப்பது அவசியம். அவை மேலும் தீங்கு விளைவிக்காமல், அழகையும் பாதிக்காமல் இருக்குமாறு அவர் உறுதி செய்வார்.

சுய வைத்தியம்

இந்தப் பிரச்சனை ஏற்பட்டதும் பெரும்பாலானவர்கள் தாங்களாகவே கைவைத்தியம் செய்து கொள்ளுவார்கள். ஆனால் உங்கள் தோல் மருத்துவரின் ஒப்புதலின்றி எந்தப் பொருளையும் பயன்படுத்த வேண்டாம். முக்கியமாக வீட்டு வைத்தியமாகப் பயன்படுத்த நினைக்கும் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இத்தகைய கை வைத்தியமாகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அவைகளின் பொதுவான குணத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன. சரும வகைகளுக்கு ஏற்ப அவைகளைப் பிரித்துப் பார்த்துப் பயன்படுத்துவதில்லை; அதேபோல, துவாரங்கள் ஏற்படுவதற்கான காரணங்களில் அடிப்படையிலும் இவற்றைப் பயன்படுத்துவதில்லை. எனவே இவற்றைப் பயன்படுத்தும் போது சில சமயம் ஒவ்வாமை கூட ஏற்படலாம்.

பெரிய துவாரங்களுக்கான சிறப்பு சரும சிகிச்சைகள்

முகத்தில் உள்ள பெரிய துவாரங்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம்; ஏனென்றால் அவை ஏற்பட பலவிதமான காரணங்கள் இருக்கலாம். அதிகமாக சீபம் சுரத்தல், தோலுக்கு வயதாகுதல் போன்று பலப்பல காரணங்கள் இருக்கலாம்.

பொதுவாக, தோல் மருத்துவர்கள், இத்தகைய துவாரங்களுக்குச் சிகிச்சை அளிக்க, தடவிக் கொள்ளும் கிரீம்கள், சிகிச்சை முறைகள், உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் போன்ற பல பலவற்றைப் பரிந்துரைக்கலாம். தடவக்கூடிய மற்றும் உள்ளே எடுத்துக் கொள்ளும் ரெடினாய்ட்கள், வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் ஆன்டிஆண்ட்ரோஜென்ஸ் இரசாயன பீல்கள், லேசர்கள், MNRF போன்ற சிகிச்சைகள் பலவற்றை தனித்தனியாகவோ சேர்ந்தோ பரிந்துரைப்பார். துவாரங்கள் ஏற்படும் காரணங்கள் மற்றும் அவற்றின் தீவிரம் பொறுத்து சிகிச்சைகள் மாறலாம்.

  • தடவக்கூடிய கிரீம்கள் – டிரெடினாயின், நிகோடினடைட், வைட்டமின் C, AHA போன்ற பலவிதமான கிரீம்களை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
  • வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் – ரெடினாய்டுகள் (ஐஸோட்ரெடினாயின்) ஆன்டிஆண்ட்ரோஜென்ஸ் (ஸ்பைரோனோலேக்டேன்) மேலும் உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் கருத்தடை மாத்திரைகள் போன்றவற்றுள் உங்களுக்குப் பொருத்தமானதைப் பரிந்துரைப்பார்.
  • லேசர் டோனிங் – தோல் மருத்துவர்கள் Q-Switched YAG லேசர் மற்றும் fractionated erbium YAG லேசர் போன்றவற்றைப் பயன்படுத்தி கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பார்கள். இது பருக்களால் ஏற்படும் வடுக்களுக்கும், திறந்த துவாரங்களுக்கும் நல்ல சிகிச்சையாக மாறும். 2011ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, Q-switched லேசர்கள், ஃபோட்டோ ஆக்டிவேட்டட் கிரீம்கள்/திரவங்களுடன் இணைந்து பயன்படுத்தும்போது, துவாரங்கள் வெகுவாகக் குறைந்தன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • ஃப்ராக்ஷனல் மைக்ரோநீடிலிங் ரேடியோ ஃப்ரீக்வென்ஸி – இந்த சிகிச்சையில் மருத்துவர்கள் மிக நுண்ணிய ஊசிகள் மூலம் ரேடியோ ஃப்ரீக்வென்ஸி சக்தியை செலுத்துவார்கள். அப்போது சருமத்தின் ஆழமான பாகங்களில் வெப்ப மண்டலங்கள் உருவாகும் இதனால் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்றவை அதிகமாக சுரக்கின்றன அதன் விளைவாக துவாரங்கள் குறைகின்றன.

இரசாயன பீல்கள் – சாலிசிலிக் அமிலம் மற்றும் கிளைகாலிக் அமிலம் போன்றவை பயன்படுத்தப்படும் பீல்கள் கட்டுப்படுத்தப்பட்ட முறையில், இறந்து போன செல்களை சருமத்திலிருந்து நீக்குகின்றன. மேலும் கூடுதலாக சுரக்கும் சீபம் அளவைக் குறைத்து, சருமத்தைப் புதுப்பித்து, துவாரங்கள் வெளியே தெரிவதை பெருமளவு குறைகின்றன.

  • Comedone நீக்குதல் – சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் போன்ற, black heads என்று பரவலாகக் கூறப்படும் comedones க்கான சிகிச்சையில், சில சிறப்பு சாதனங்களைப் பயன்படுத்தி தோல் மருத்துவர்கள் அவற்றை நீக்குகின்றனர். திறந்திருக்கும் comedones மற்றும் மூடியிருப்பவற்றையும் (whiteheads) இவ்வாறு நீக்குவதால் துவாரங்களில் அடைப்பு நீங்குகிறது. அவை அகலமாவதும் தடைபடுகிறது.

முகத்தில் பெரிய துவாரங்கள் ஏற்படாமல் எப்படித் தடுக்க முடியும்!

மிகவும் கவனமாக தோல் பராமரிப்பிற்காக சில விஷயங்களைச் செய்து வந்தால் முகத்தில் துவாரங்கள் தோன்றுவதைக் குறைக்க முடியும்; துவாரங்களைச் சுருங்க வைக்கவும் முடியும். கீழ்க்கண்டவற்றை தினமும் செய்வது அவசியம்:

  • சுத்தம் – மிகவும் மிதமான, non-comedogenic கிளென்ஸரை ஒரு நாளைக்கு 2 முறை பயன்படுத்தவும்; அப்போது அடைத்துக் கொண்டுள்ள துவாரங்களின் அடைப்பு நீங்கிவிடும்.
  • பாதுகாப்பு – பொதுவான (broad-spectrum), தண்ணீரை எதிர்க்கக் கூடிய சன்ஸ்கிரீன் (SPF 30+) ஒன்றை ஒவ்வொரு நாளும் தவறாது பயன்படுத்தினால் சருமத்தை சூரிய ஒளி பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க முடியும்.
  • ஊட்டச்சத்து – எண்ணெய் பிசுபிசுப்பு மிகுந்த சருமத்திற்கான மாய்ச்சரைசர்களைப் பயன்படுத்தவும். மேலும் ரெடினால் போன்ற கொலாஜன் சுரப்பை அதிகமாக்கும் தயாரிப்புகளையும் பயன்படுத்தலாம்.
  • சிகிச்சைகள் – பருக்கள், சருமம் தொங்கிப் போகுதல் போன்றவற்றுக்கு தகுதி வாய்ந்த தோல் மருத்துவரின் ஆலோசனைகளின்படி சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளவும். துவாரங்களின் அளவுகளைச் சிறிதாக்கவும், கட்டுப்படுத்தவும் உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள், அந்த இடத்தில் தடவக் கூடிய கிரீம்கள், சிகிச்சை முறைகள் போன்றவற்றை மருத்துவர் பரிந்துரைப்பார்.

முக்கிய குறிப்பு – எப்போதும் non-comedogenic சருமத் தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்தவும்.

நோயைப் பற்றிய கணிப்பு

உங்கள் முகத்தில் உள்ள திறந்துள்ள துவாரங்களை மூடுவதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தால், அதற்கு மிக முக்கியமாக உங்கள் சருமத்தை சுத்தமாக வைத்திருப்பதும், சூரிய ஒளி படாமல் வைத்திருப்பதும் அவசியம். பொதுவாக எந்த சிகிச்சையாலும் உங்கள் முகத்தில் உள்ள துவாரங்களை முழுவதுமாகவோ முற்றிலுமாகவோ நீக்கிவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேம்பட்ட சரும சிகிச்சை முறைகள் மூலம் இவை வெளியே தெரியாமல் செய்து, உங்கள் சருமத்தை வழவழப்பாகவும், பளபளப்பாகவும் மாற்ற முடியும்.

உங்கள் முகத்தில் உள்ள துவாரங்களின் காரணமாக உங்கள் தோற்றம் பாதிக்கப்படுகிறதோ என்ற கவலை இருந்தால் உடனே ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கில் உள்ள ஒரு தோல் மருத்துவரை சந்தித்து, உங்களுக்குத் தேவையான, பொருத்தமான சிகிச்சைகள் பற்றி ஆலோசனை பெறுங்கள்.

    Talk to Our Experts