34574
page-template/template_concern_page.php

0
page-template/template_concern_page.php

விரி தழும்புகள் (ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்): காரணங்கள், சிகிச்சைகள் மற்றும் இவற்றைக் கையாளுதல்

Highlights

  • ● விரி தழும்புகள் அல்லது ஸ்ட்ரயி (striae): இவை பொதுவாக பருவமடையும் வயதில் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மிகவும் உடல் எடை அதிகமுள்ளவர்களுக்குத் தோன்றுகின்றன.
  • ● நமது சருமம் விரிவடையும் போது இவை தோன்றுகின்றன. பொதுவாக அடிவயிறு, தொடைப்பகுதி, தொடையின் பின் பகுதியில் தோன்றுகின்றன.
  • ● இத்தகைய விரி தழும்புகளால் எவ்விதமான பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை; மிக அரிதாக சிலருக்கு, இவை வேறு ஏதாவது ஒரு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
  • ● வெகு நாட்களாக உள்ள தழும்புகளை குணப்படுத்துவது / நீக்குவது கடினமாகும். எனவே இவை தோன்றிய உடனேயே நீங்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. லேசர் சிகிச்சைகளும் MNRF சிகிச்சை முறைகளும் நன்கு பலனளித்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

விரி தழும்புகள் என்றால் என்ன?

விரி தழும்புகள் (Stretch marks or striae) வெள்ளை அல்லது பிங்க் நிறத்தில் நமது சருமத்தின் மேல் ஏற்படும் தழும்புகளாகும். சருமம் வழக்கத்துக்கு மாறாக நீட்டிக்கப்படும் போது, சருமத்திற்கு கீழே உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உராய்கின்றன. இவை மீண்டும் இயல்பு நிலைக்கு வரும்போது இந்த விரி தழும்புகள் தோன்றுகின்றன. பொதுவாக தோள் பகுதி, அடிவயிற்றுப் பகுதி, ஆடுசதைகள், இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் இவை தோன்றுகின்றன. இவை நாளடைவில் குறையலாம், ஆனால் நிரந்தரமாக மறையாது.

விரி தழும்புகளின் வகைகள்:

இவை தோன்றும் விதம் மற்றும் இவற்றின் தோற்றத்தின் அடிப்படையில் இவற்றை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்:

  • ஸ்ட்ரயிருப்ரே: இவை ஆரம்ப நிலையில் உள்ள தழும்புகள். இவை மிக லேசாக எழும்பி, வெளிர் சிவப்பு நிறத்தில், இரத்த நாளங்கள் (veins) போல நீளவாக்கில் இருக்கும். பல மாதங்கள் அல்லது வருடங்களில் இவை வெண்ணிறமாக மாறும்.
  • ஸ்ட்ரயிஅல்பே: இவை வெள்ளை நிறத்தில், வரப்புகளுடன்கூடிய சற்று அமுங்கிய விரி தழும்புகளாக இருக்கும். பெரும்பாலும் நிரந்தரமானவையாக இருக்கும். மேலும் இவை தோற்றத்தின் அடிப்படையில் ஸ்ட்ரியாஅட்ரோஃபியன்ஸ், ஸ்ட்ரியாஎனிக்ரே, ஸ்ட்ரியாகேருலியா மற்றும் ஸ்ட்ரியாகிராவின்ட்ரம் என்று 4 வகைகளாகப் பிரிக்கப்படும்.

விரி தழும்புகளின் இந்த வகைகள் பற்றிய சில விவரங்கள்:

  • ஸ்ட்ரியாஅட்ரோஃபியன்ஸ்: மெலிதான தோலைச் சார்ந்த விரி தழும்புகள் இவ்வகையைச் சேர்ந்தவை. கஷ்ஷிங் சிண்ட்ரோம் (Cushing’s Syndrome) போன்ற பிரச்சனைகள் இருக்கும் போதோ, மிக அதிகமாக கார்டிகோஸ்டிராய்டுகளை எடுத்துக் கொள்ளும் போதோ இவை நம் உடலில் தோன்றலாம்.
  • ஸ்ட்ரியாநிகாரா: பொதுவாக அடர்ந்த நிறம் உடையவர்களுக்கு இவை தோன்றும் இத்தகைய விரி தழும்புகள் அடர்ந்த கிரே அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும்.
  • ஸ்ட்ரியாகேருலியா: இவை அடர் நீலம் – ஊதா நிறத்தில் இருக்கும். அடர்ந்த நிறம் உடையவர்களிடத்தில் தோன்றும்.
  • ஸ்ட்ரியாகிராவிடரம்: இவை கருவுற்றிருக்கும்போது தோன்றுபவை.

நம் உடலில் ஏன் இத்தகைய விரி தழும்புகள் தோன்றுகின்றன?

நம் உடலில் இவை தோன்றுவதற்கான சில முக்கிய காரணங்கள் இவை:

  • பருவமடையும் காலத்தில் வளர்ச்சி – 6% – 86% பேருக்கு இத்தகைய விரி தழும்புகள் பருவமடையும் காலத்தில் தோன்றுகின்றன. வளரும் பருவத்தில் இருப்பவர்கள் பலருக்கு வெளிர் பிங்க் அல்லது அடர்ந்த பிரவுன் நிறத்தில் உள்ள ஸ்ட்ரியே அவர்களுடைய தொடைப்பகுதி, மார்புப் பகுதிகளில் தோன்றுகிறது. வளரும் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களினால் இவை பெரும்பாலும் தோன்றுகின்றன.
  • மிக அதிக உடல் பருமன் – 43% பேருக்கு மிக அதிகமாக எடை கூடுவதால் இவை தோன்றுகின்றன. உடல் எடை கூடும் போது சருமம் விரிவடைகிறது. அதனால் மேல் தோலுக்குக் கீழே உள்ள திசுக்களில் உராய்வு ஏற்பட்டு, விரி தழும்புகள் ஏற்படும்.
  • கர்ப்ப காலம்: விரி தழும்புகள் ஏற்பட மிக முக்கிய காரணமாக இதுதான் கருதப்படுகிறது. 43-88% கர்ப்பிணிப் பெண்களுக்கு விரி தழும்புகள் தோன்றுகின்றன. கருவுற்றிருக்கும் போது எடை கூடுகிறது. அதனால் பெரிய விரி தழும்புகள் ஏற்படுகின்றன. அவை பெரும்பாலும் அடிவயிற்றிலேயே தோன்றுகின்றன. லேசான அரிப்பும் அந்த விரி தழும்புகளில் ஏற்படும். ஆய்வுகளின் படி இளம் தாய்மார்களுக்கு இத்தகைய விரி தழும்புகள் அதிகம் ஏற்படுகின்றன. சற்று வயது முதிர்ந்து கர்ப்பம் தரிப்பவர்களுக்கு இவை குறைவாகவே ஏற்படுகின்றன.
  • உடலில் ஹார்மோன் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் – நமது உடலில் உள்ள அட்ரிலனின் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் அதிக அளவிலான கார்டிஸான், புரோட்டின் கேட்டபாலிஸத்தை மேலும் தூண்டுகிறது. நமது உடலில் ஏற்படும் காயங்கள், மன அழுத்தங்கள், சில மருத்துவக் குறைபாடுகள் காரணமாக இத்தகைய ஒரு நிலை ஏற்படலாம். இவை ஏற்படும்போது நமது உடலின் எலாஸ்டின் இழைகள் பாதிக்கப்படலாம். அதன் விளைவாக விரி தழும்புகள் ஏற்படலாம்.
  • மரபணு சார்ந்த கணிப்புகள் – இத்தகைய விரி தழும்புகள் தோன்றுவதற்கு மரபணுக்களும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. இக்கருத்து இன்னும் ஆழமாக ஆராய்ச்சி செய்யப்படவில்லை. குடும்பத்தில் முன்னோர்களுக்கு உடலில் இத்தகைய விரி தழும்புகள் இருந்தால், உங்களுக்கும் வாழ்நாளில் ஏதாவது ஒரு சமயத்தில் அவை தோன்றலாம். உங்களது மரபணுக்களில் கொலாஜனும், ஃபைப்ரோநெக்டினும் குறையும்போது இவ்வாறு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
  • வேறு உடல் பிரச்சனைகள் / நோய்கள் சார்ந்த அறிகுறிகள் – கஷ்ஷிங் சிண்ட்ரோம் (Cushing Syndrome) மற்றும் மார்ஃபன் சிண்ட்ரோம் (Marfan Syndrome) போன்றவை உள்ளவர்களுக்கு ஸ்ட்ரியே அட்ரோஃபிகன்ஸ் (கனமான தோல்) போன்றவை ஏற்படலாம்.
  • உடல் எடை குறைதல் – மிகவும் உடல் எடை குறையும் போது சருமம் மிகவும் தளர்ந்து போகும். அத்தகைய சமயங்களிலும் விரி தழும்புகள் ஏற்படும்.
  • நீண்ட நாட்கள் ஸ்டிராய்டுகள் பயன்படுத்துதல் – கார்டிகோஸ்டிராய்டுகளை நீண்ட நாட்கள் தொடர்ந்து அதிகமாகப் பயன்படுத்தினால் “ஸ்ட்ரியே” வர வாய்ப்பு ஏற்படலாம்.

அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்:

பொதுவாக இத்தகைய விரி தழும்புகள் சருமத்திலிருந்து மேலெழும்பி, சிவப்பு, பிரவுன் அல்லது பர்ப்பிள்-பிங்க் நிறங்களில், வடுக்கள் போலத் தோன்றும். அங்கு அரிப்பு ஏற்படுவது போலத் தோன்றும். நாளாக நாளாக அவை சற்றுக் குறுகி, மேலும் ஆழமாகவும், அடர் நிறத்திலும் மாறும்; சில சமயங்களில் வெண்மை நிறக் கோடுகளாக தோலில் அழுந்தியுள்ளது போல் தோன்றும். இத்தகைய விரி தழும்புகள் ஆரம்ப நிலையில் இருக்கும் போது அவற்றுக்கு திறம்பட சிகிச்சை அளிப்பது எளிது.

கண்டறிதல்:

உங்கள் உடலில் உள்ள விரி தழும்புகள் மிகவும் பரவலாகவும் மற்றும்/அல்லது அரிப்புடன் கூடியவையாகவும் இருந்தால், உடனடியாக ஒரு தோல் மருத்துவரிடம் செல்வது நல்லது. அத்தகைய தழும்புகளின் தீவிரத்தைப் பொருத்து, தோல் மருத்துவர் உங்களுக்கு ஏற்ற, மிகப் பொருத்தமான சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.

தற்போதுள்ள சிகிச்சைகள்

விரி தழும்புகளுக்கு சிகிச்சை அளிப்பது ஒரு சவாலான காரியம்தான். அவற்றை மறையச் செய்ய மிகமிக தனித்துவமான சிகிச்சைகள்/செயல் முறைகள் தேவைப்படும். தற்போது விரி தழும்புகளை மறையச் செய்ய கீழ்க்கண்ட சிகிச்சைகள் உள்ளன:

  • மைக்ரோ-நீடிலிங் ரேடியோ ஃப்ரீக்வென்ஸி (MNRF)
  • இரசாயன பீல்கள்
  • ட்ரெடினாயின் (Tretinoin) கிரீம்

 ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கில் விரி தழும்புகளை நீக்கும் சிகிச்சைகள்:

விரி தழும்புகளை முற்றிலும் அடியோடு நீக்குதல் என்பது மிகக் கடினமான செயல் என்றாலும், அதி நவீன தொழில்நுட்பமும், நல்ல அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைகளும் இணைந்து செயல்படும் போது அவற்றின் வெளிப்புறத் தோற்றத்தை மிகவும் குறைக்க முடியும். எனவே விரி தழும்புகளை நீக்க சரியான மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். நீங்கள் ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கில் முன்பதிவு செய்து வல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெற்று மேலும் விவரங்கள் அறியலாம்.

விரி தழும்புகள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?

கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் இத்தகைய விரி தழும்புகளை தடுக்கவோ, மறையச் செய்யவோ தடவப்படும் கிரீம்கள் எந்த அளவு பலன் அளிக்கக்கூடியவை என்பதற்கான மருத்துவ பூர்வமான ஆதாரங்கள் இல்லை.

பொறுப்புத் துறப்பு: கர்ப்பிணிப் பெண்கள் இத்தகைய கிரீம்களைத் தடவிக் கொள்வதற்கு முன்பாக (அவர்களது கருவில் உள்ள குழந்தையின் பாதுகாப்பை மனதில் கொண்டு) மருத்துவரின் ஒப்புதலை பெற வேண்டியது அவசியம்.

Home Remedies For Stretch Marks:

விரி தழும்புகளுக்கான வீட்டு வைத்தியங்கள்:

விரி தழும்புகள் தோன்றிய பிறகு அவற்றை நீக்க வீட்டு சிகிச்சை முறைகள் பெரிதும் உதவுவதில்லை. எனவே அவ்வாறு செய்வதற்கு முன்பு அனுபவம் மிக்க தோல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

    Talk to Our Experts

      Subscribe to Newsletter

      Expert guide to flawless skin and nourished hair from our dermatologists!