ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக், சென்னை, தமிழ்நாடு
சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பிற்கான சிறப்பு மருத்துவர்கள்
சென்னை ஒலிவாவில் முன்னணித் தோல் மருத்துவர்கள் மருத்துவத் துறையில் தமது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, தோல் மற்றும் தலைமுடிக்கான உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை அளித்து, வருகின்றனர். அச் சிகிச்சைகள் ஈடு இணையற்ற பலன்களைத் தருகின்றன. ஒலிவா இன்று நம் நகரிலேயே மக்களின் மிகுந்த நம்பிக்கைக்குரிய பிராண்ட் ஆகத் திகழ்கிறது. சருமம் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மிகவும் நேர்த்தியான தீர்வுகளைப் பாதுகாப்பாக இங்கு பெறமுடியும் என்று மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது
சென்னையில் உள்ள எமது கிளினிக்கில் மிகச் சிறந்த தோல் மருத்துவர்கள், சான்றிதழ் பெற்ற சிகிச்சையாளர்கள் மற்றும் தகுதி பெற்ற உணவு ஆலோசகர்கள் ஆகியோர் குழுவாக இணைந்து உங்களுக்கு மிகச் சிறந்த, முழுமையான சிகிச்சைகளை வழங்குகின்றனர். சென்னையில் அடையார், ஆழ்வார்பேட்டை மற்றும் அண்ணாநகர் ஆகிய 3 இடங்களில் எமது சிறப்பு கிளினிக்குகள் உள்ளன. உங்களுடைய தோல் மற்றும் தலைமுடி சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வுகளைப் பெற இன்றே சென்னை ஒலிவாவைத் தேர்ந்தெடுங்கள்!
AWARDS AND RECOGNITIONS
Client Reviews
Read below what our esteemed clients have to say about us and what makes us the premier provider of skin and hair care services.
நமது 91% வாடிக்கையாளர் மனநிறைவு என்பது ஈடு இணையில்லாதது!
எங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதை கீழே படியுங்கள் மற்றும் தோல் மற்றும் முடி பராமரிப்பு சேவைகளின் முதன்மை வழங்குநராக எங்களை உருவாக்குவது பற்றி மேலும் அறிக.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-
எங்கள் கிளினிக்கிற்கு வருவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்:
- கிளினிக் வேலை நேரம் – திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
- கன்சல்டேஷன் கட்டணம் – ரூ.600
- பணம் செலுத்தும் வழிகள் – ரொக்கமாகவும், காசோலை,
- கிரெடிட்/டெபிட் கார்டுகள் இன்டர்நெட் பேங்கிங் மூலமும் செலுத்தலாம்
- மருத்துவரின் பரிந்துரைகள் – மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்ற பிறகு வழங்கப்படும்
- சிகிச்சை பெறக் குறைந்தபட்ச வயது – 18 வயதுக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெறலாம்
- சிகிச்சைகளை வழங்குபவர்கள் – அனுபவம் பெற்ற தோல் மருத்துவர்கள் மற்றும் சான்றிதழ் பெற்ற சிகிச்சையாளர்கள்
-
உங்கள் கிளினிக்கில் எப்படி அபாயிண்மெண்ட் பெற வேண்டும்?
சென்னையில் 3 இடங்களில் எங்கள் அதிநவீன கிளினிக்குகள் உள்ளன. 1800-103-3893 என்ற எண்ணை அழைக்கலாம்; அல்லது மேலே வலது புறம் உள்ள ‘BOOK APPOINTMENT’ என்பதை கிளிக் செய்யலாம். எங்கள் கிளினிக்கிலிருந்து உங்களைத் தொடர்பு கொண்டு, உங்களுக்கு வசதியான நாளில் வசதியான நேரத்தில் கிளினிக்கிற்கு வந்து மருத்துவரை சந்திக்க உதவுவார்கள்.
-
உங்கள் கிளினிக்கில் எப்படி அபாயிண்மெண்ட் பெற வேண்டும்?
ஒலிவாவில் உள்ள எமது மருத்துவ வல்லுநர்கள் கீழ்க்கண்ட சிறப்பு சிகிச்சைகளை வழங்குவார்கள்:
- சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கான சிகிச்சைகள் – இங்கு ஒலிவாவில் சருமம், முடி மற்றும் நகம் சார்ந்த பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. சொரியாஸிஸ், தோலில் ஏற்படும் தொற்றுக்கள், அடோபிக் டெர்மடைடிஸ், தோலில் ஏற்படும் வெடிப்புகள், ஒவ்வாமை போன்ற பல பிரச்சனைகளுக்கு இங்கே சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
- சருமம் சார்ந்த தீர்வுகள் – பருக்களையும் பருக்களினால் ஏற்படும் வடுக்கள், அடர் நிறதிட்டுக்கள், பிறவி அடையாளங்கள், திறந்தவாறு உள்ள சிறு துளைகள் மற்றும் சருமம் கறுத்துப் போகுதல் போன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நாங்கள் மிகச் சிறந்த சிகிச்சைகளை வழங்குகிறோம். அதிநவீன, லேசர் அடிப்படையில் வழங்கப்படும் சிகிச்சைகள், இரசாயன பீல்கள் பயன்படுத்தும் மேம்பட்ட சிகிச்சைகள் ஆகியவை உங்களது சருமத்தின் மிருதுத் தன்மையையும் தோற்றத்தையும் மிகவும் மேம்படுத்தக் கூடியவை.
- முடிக்கான சிகிச்சைகள் – உங்கள் உடலில் தேவையற்ற இடங்களில் முடி வளர்வதைக் குறைக்கவும், தலைமுடி மிகவும் கொட்டினால் அதைத் தடுப்பதற்கும், ஒரு குறிப்பிட்ட வடிவில் / அமைப்பில் வழுக்கை விழுவதைத் தடுப்பதற்கும், முடி மெலிந்து போவதைத் தடுப்பதற்கும், முன் நெற்றியில் முடி கொட்டுவதை நிறுத்துவதற்கும், ஆங்காங்கே முடி கொட்டுவதை நிறுத்தவும் நீங்கள் பாதுகாப்பான மற்றும் நேர்த்தியான சிகிச்சைகளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப தேவையற்ற முடியை நீக்க லேசர் சிகிச்சைகளையும், தலைமுடி மீண்டும் வளர PRP ஹேர் ரீகுரோத் சிகிச்சை போன்றவற்றையும் வழங்குகிறோம்.
- முகத்திற்கான அழகியல் சார்ந்த சிகிச்சைகள் – உங்கள் முகத்தில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் சில அறிகுறிகளை நீக்க ஒலிவாவில் மிகவும் மேம்பட்ட சிறப்பு அழகியல் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. முகத்தில் உள்ள சுருக்கங்களையும் மிக மெல்லிய கோடுகளையும் நீக்க ‘பொடுலினம்’ டாக்ஸின் பயன்படுத்தப்படுகிறது. தொங்கும் சதைகளை சீராக்கவும், கண்ணுக்குக் கீழே உள்ள குழியை சரிசெய்யவும் ‘டெர்மல் ஃபில்லர்ஸ்’ பயன்படுத்தப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை நீக்கி ‘இரசாயன பீல்கள்’ சிகிச்சைகளும், முகவாய்ப் பகுதியில் உள்ள கூடுதல் சதையை நீக்க அதிக வீரியத்துடன் தேவைப்பட்ட இடத்தில் மட்டும் செலுத்தப்படும் அல்ட்ரா சவுண்ட் சிகிச்சைகளும் (HIFU) வழங்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி முகப் பொலிவை மேம்படுத்தவும் முகவாய்ப்பகுதியை சீர் செய்யவும் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
- அறுவை சிகிச்சை ஏதுமின்றி, உடலுக்கு அழகான வடிவமைப்பைத் தரும் சிகிச்சைகள் – ஒலிவாவில் உள்ள ஆழ்ந்த அனுபவம் பெற்ற மருத்துவர்களும், சான்றிதழ் பெற்ற உணவு ஆலோசகர்களும் அறுவை சிகிச்சை அற்ற, இரத்த சேதம், காயம் போன்ற எதுவும் அற்ற இன்ச் லாஸ் சிகிச்சைகளை வழங்குகின்றனர். நமது உடலில் சேர்ந்திருக்கும் விடாப்பிடியான கொழுப்பை நீக்கவும், சருமத்தின் நெகிழ்வை நீக்கி, இறுக்கமாக்கவும் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் மற்றும் ரேடியோ ஃப்ரீக்வென்ஸியைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த அதிநவீன சிகிச்சைகள் மிகவும் உதவுகின்றன. சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் வழங்கும் உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி நடந்தால் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கக்கூடிய பலன்களைத் பெறலாம்.
- மிராடிரை சிகிச்சை – நமது உடலில் அக்குள் பகுதியில் மிக அதிகமாக வியர்வை ஏற்பட்டாலோ அல்லது உடலில் துர்நாற்றம் ஏற்பட்டாலோ அவற்றுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமது மருத்துவ வல்லுநர்கள் சிறப்பு சிகிச்சைகளை வழங்குவார்கள். ஒரே ஒரு முறை வந்து சிகிச்சையை எடுத்துக்கொண்டாலே நல்ல பலன்கள் கிடைக்கும் என உறுதியளிக்கிறோம்.
-
ஒலிவாவில் சிகிச்சைகள் எந்த முறையில் வழங்கப்படுகின்றன?
ஸ்டெப் 1: முதலில் ஒலிவா கிளினிக்கில் முன்பதிவு செய்து ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும். முதன்முறையாக கிளினிக்கிற்கு வரும்போது ஒரு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் உங்கள் தொடர்பு எண் மற்றும் மருத்துவப் பின்னணி ஆகியவற்றை வழங்க வேண்டும்.
ஸ்டெப் 2: இதற்குப் பிறகு எமது அனுபவமிக்க தோல் மருத்துவர் ஒருவரை நேரில் சந்தித்து விரிவாக ஆலோசனைகள் பெறலாம். மருத்துவர் முதலில் உங்கள் சருமம் மற்றும் தலைமுடியை நன்கு ஆராய்ந்து, மதிப்பீடு செய்வார். பிறகு தற்போதைய சருமப் பிரச்சனையை ஆராய்ந்து அதற்குரிய காரணத்தைக் கண்டறிந்து பின்பு ஒரு முழுமையான தீர்வைத் தருவார்.
ஸ்டெப் 3: ஆலோசனைகளைப் பெற்ற பிறகு உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை பற்றிய அனைத்து விவரங்கள், கட்டண விவரங்கள் உங்களுக்கு விளக்கப்படும்.
-
தனிப்பட்ட முறையில் ஒருவருக்கான சிகிச்சைத் திட்டம் என்பது என்ன?
Customised Treatment Plan என்று வழங்கப்படும் தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்படும் சிகிச்சைத் திட்டம், உங்கள் சருமம் மற்றும் தலைமுடியின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவற்றின் காரணத்தைக் கண்டறிந்து, உங்கள் மருத்துவப் பின்னணியையும் மனதில் கொண்டு, தயாரிக்கப்படும் திட்டமாகும். எல்லோருக்கும் பொதுவாக வழங்கப்படும் சிகிச்சை முறைகளை விட இது நிச்சயம் பாதுகாப்பானது. ஒவ்வாமைகள், பக்க விளைவுகள் ஏற்படாது. நல்ல பலன்களும் கிடைக்கும்.
-
இந்த சிகிச்சைகள் பாதுகாப்பானவையா? சிகிச்சைகளின் வெற்றி விகிதம் என்ன?
ஒலிவாவில் எங்கள் வாடிக்கையாளரின் பாதுகாப்பிற்குத்தான் என்றும் முதலிடம் வழங்கப்படுகிறது. அனைத்து சிகிச்சைகளுமே அனுபவம் மிக்க தோல் மருத்துவ வல்லுநர்களால் வழங்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்கள் அவர்களுக்கு சிகிச்சையின்போது உதவுகின்றனர். எல்லா சிகிச்சைகளும் வழங்கும் போது கடுமையான வழிகாட்டு செயல்முறைகள் (Protocols) பின்பற்றப்படுகின்றன. மிக மிகத் தூய்மையான, கிருமிகள் அற்ற சூழலில், அதிநவீன, US-FDA ஒப்புதல் பெற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவை வழங்கப்படுகின்றன. எமது மருத்துவர்கள், தொற்று எதுவும் ஏற்படாமல் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாமல், நல்ல பலன்களை அளிக்கக் கூடிய முழுமையான சிகிச்சைகளை வழங்குகின்றனர். எமது தோல் மருத்துவர்களும் சிகிச்சையாளர்களும் பல்லாயிரக் கணக்கானோருக்கு சிகிச்சைகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளனர்.
எனவே எமது கிளினிக்கிற்கு வரும்போது சென்னையின் மிகச் சிறந்த கிளினிக்கிற்குதான் வருகிறோம் என்று நம்பிக்கையுடன் உறுதியுடன் வாருங்கள்.
-
ஒலிவாவில் உள்ள வசதிகள், சாதனங்கள் மற்றும் கருவிகள் யாவை?
எமது அதிநவீன கிளினிக்குகளில் அனைத்திலுமே US-FDA ஒப்புதல் பெற்ற சாதனங்கள் இருக்கும். கீழ்க்கண்டவை அவற்றுள் சில:
- ஸோப்ரானோ ஐஸ் (Soprano Ice): லேசர் சிகிச்சை மூலம் முடியை நீக்க தற்போதுள்ள அதிநவீன, மிக அதிக செலவாகக் கூடிய தொழில்நுட்ப வசதி
- PRP சிகிச்சைக்கு உன்னதத் தரத்தை உறுதி செய்யக்கூடிய, தனித்துவம் வாய்ந்த இரட்டை சுழற்சி முறை (double spin method)
- ஃப்ராக்ஷனல் லேசர் ரீசர்ஃபேசிங் முறைக்கு iPixel தொழில்நுட்பமும், வடுக்களைக் குறைக்கவும் நீக்கவும் வழங்கப்படும் சிகிச்சைக்கு மேம்படுத்தப்பட்ட RF தொழில்நுட்பமும் (Secret RF advanced radio frequency technology) பயன்படுத்தப்படுகின்றன
- கூடுதல் வியர்வையைக் கட்டுப்படுத்த மிராடிரை சிகிச்சை முறை
- இன்ச் லாஸ் சிகிச்சைக்கான Accent Prime முறை
-
மிகப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளிலிருந்து ஒலிவா எப்படி மாறுபட்டு தனித்துவம் பெறுகிறது?
பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளில் தனிப்பட்ட முறையில் கவனிப்போ சேவைகளோ கிடைப்பதில்லை. தனி நபர்களின் தேவைக்கேற்ற சிகிச்சைகளும் பெரும்பாலும் கிடைப்பதில்லை. மேலும் பொதுவாக மருத்துவமனைகளில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருக்கும். ஒலிவா கிளினிக்குகளில் அனுபவம் மிகுந்த தோல் மருத்துவர்களின் சேவைகள், பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்களின் சேவைகள், மருந்துகள், அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்துமே ஒரே இடத்தில் கிடைத்துவிடுகின்றன. எனவே உங்களுக்குத் தேவையான மிக மிக நேர்த்தியான சேவைகள், வல்லுநர்கள் மூலம் திறம்பட வழங்கப்படுகின்றன. நீங்களும் வேறு எங்கும் இல்லாத அளவு வசதியாகவும் பாதுகாப்பாகவும் செளகரியமாகவும் உணர்வீர்கள்.