- Home
- நிறமி சிகிச்சை(Pigmentation)
Best Treatments For Skin Pigmentation
உங்கள் சருமத்தில் ஆங்காங்கே கருந்திட்டுகளையும், சீரற்ற தன்மையையும்
பார்க்கிறீர்களா. அப்போது உங்களுக்கு ஹைபர்பிக்மெண்டேஷன் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறலாம். நமது சருமத்தில் இயல்புக்கு மாறாக மெலனின் சுரப்பதும், சருமத்தில் ஒவ்வொரு படலத்திலும் அது சீரற்று பரவுவதும், ஆங்காங்கே கருந்திட்டுக்கள் ஏற்படுவதும் பொதுவாக பலருக்கு ஏற்படும் ஒரு சருமப் பிரச்சனைதான். இதுதான் பிக்மெண்டேஷன் என்று சொல்லப்படுகிறது. இது அதிகமாக ஏற்படும் போது ஹைபர்பிக்மெண்டேஷன் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக ஆண்கள், பெண்கள் இருவருக்கும் நிறம் வெளிறுதல், அடர் திட்டுகள் தோன்றுதல் போன்றவை ஏற்படலாம். அனைத்து விதமான சரும வகைகளுக்கும் இப் பிரச்சனை தோன்றலாம். இவ்வாறு சருமத்தில் ஏற்படும் நிறத் திட்டுகளுக்கான சிகிச்சைகளையும் தீர்வுகளையும் பெற வேண்டும் என்று விரும்பினால் மேலே தொடர்ந்து படியுங்கள்:
சருமத்தில் ஏற்படும் அடர் திட்டுக்கள் சார்ந்த பிரச்சனைகள்
பொதுவாக அடர் திட்டுக்கள் ஏற்படுதல் என்றாலே அது அதிகமாக மெலனின் சுரப்பதைத்தான் (ஹைபர்பிக்மெண்டேஷன்) குறிக்கிறது. இந்தப் பிரச்சனை ஏற்படும்போது சருமத்தில் அடர் நிறத் திட்டுக்கள் ஏற்படலாம், சருமத்தின் மிருதுத் தன்மை மாறுபடலாம். மேலும் கீழ்க்கண்ட விதங்களில் வெளிப்படலாம்:
- வயதாவதனால் தோன்றும் புள்ளிகள்: இவற்றை சன் ஸ்பாட்ஸ் அல்லது லிவர் ஸ்பாட்ஸ் என்றும் கூறுவார்கள். இவை முகம், மார்பு, தோள் மற்றும் முன் கைகளில் தோன்றலாம். இவை பிரவுன் அல்லது அடர் நிறம் அல்லது கருப்பு நிறத்தில் இருக்கலாம். அதிகமாக சூரிய ஒளி நம் மீது படும்போது, கூடுதலாக மெலனின் சுரக்கும் காரணத்தினால் இவை ஏற்படுகின்றன.
- மெலஸ்மா: சருமத்தில் சீரற்று அங்கங்கே கருந்திட்டுக்கள் ஏற்படுவதைத்தான் மெலஸ்மா என்கிறோம். பெரும்பாலும் நமது முகம், நெற்றி, மூக்கு, கன்னத்திள் மேல் பகுதி, உதட்டுக்கு மேல் பகுதி மற்றும் முகவாய்ப் பகுதிகளில் தோன்றும். கர்ப்பம் தரித்துள்ள பெண்களுக்கு ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் அதிகமாகி, அதன் காரணமாக இவை பரவலாகத் தோன்றுவதால் இதை ‘க்லோயஸ்மா’ என்றும் கர்ப்பத்தின் வெளிப்பாடு என்றும் கூறுவார்கள் (the mask of pregnancy).
- வீக்கத்திற்கு பிறகு ஏற்படும் அடர் திட்டுக்கள் (PIH): சில சமயங்களில் சருமத்தில் பெரிய பருக்கள் (acne vulgaris) அல்லது சிரங்கு / எக்ஸிமா போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது வீக்கம் ஏற்பட்டு அதற்குப் பிறகு அடர் திட்டுக்கள் ஏற்படலாம். இவை பொதுவாக பருக்கள் அதிகம் வரக்கூடிய பகுதிகளான முகம், கழுத்து ஆகியவற்றிலேயே வரும்.
- மேகுலர் அமிலாய்டோஸிஸ்: இந்தப் பிரச்சனை ஏற்படும்போது சருமத்தில் சிறு சிறு சாம்பல் நிற அல்லது பிரவுன் நிறத் திட்டுக்கள் / கறைகள் ஏற்படும். இவை உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம். இவை நீரில் தோன்றும் அலைகள் போல வட்ட வட்டமாகவும் தோன்றலாம். நமது சருமத்தின் மேல் பகுதியில் அமிலாய்ட் அல்லது அமிலாய்ட்கள் போன்ற புரதச் சத்துக்கள் அடர்த்தியாக சேர்ந்து கொள்ளும் போது இப்படித் தோன்றலாம். நமது உடலில் சூரிய ஒளி நேரடியாகப் படக்கூடிய பாகங்களான முகம், கைகள் போன்றவற்றில், ஆரம்பநிலையில் தோன்றலாம்.
- சூரியனால் சருமம் கருமை அடைதல்: நீண்ட நேரம் தொடர்ந்து சூரிய ஒளி நமது உடலில் பட்டுக்கொண்டேயிருக்கும் போது உடலில் அதிக மெலனின் உற்பத்தியாகி அதனால் சருமம் கருமை அடைகிறது. இது மிகப் பரவலாக பலருக்கு ஏற்படக் கூடியது. முகம், கழுத்து, கைகள் போன்றவற்றில் ஏற்படுகிறது. பலருக்கு, இது தோற்றத்தைப் பாதிக்கக் கூடிய/அழகு சார்ந்த ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது. தொடர்ந்து நமது உடலில் UV கதிர்கள் படும்போது அதனால் சருமம் பாதிக்கப்பட்டு, காயங்கள் (Sun burns), சருமப் புற்றுநோய் போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
- லிச்சன் பிளானஸ் பிக்மென்டோஸஸ் (LPP): நமது முகத்திலும் கழுத்திலும் ஆங்காங்கு சீரற்ற முறையில் அடர் சாம்பல் நிறத் திட்டுகள் தோன்றுவதையே LPP என்று கூறுவார்கள். சற்று அடர்ந்த நிறமான சருமம் உடையவர்களுக்கு இவ்வாறு தொடர்ந்து அடர் திட்டுக்கள் ஏற்படலாம்.
- லென்டிஜியன்ஸ் மற்றும் ஃப்ரெக்கிள்ஸ் (மச்சம்/மரு போன்ற சிறு புள்ளிகள்): நமது உடலில் சூரிய ஒளி நேராகத் தாக்கக்கூடிய பகுதிகளில் இத்தகைய சிறு பிரவுன் அல்லது கருப்புப் புள்ளிகள் 2 முதல் 3 மிமீ வரை அளவுகளில் தோன்றலாம். UV கதிர்களின் பாதிப்பினாலோ அல்லது மரபுவழிக் காரணங்களாலோ இவை ஏற்படலாம்.
நமது சருமத்தில் ஏற்படும் கருந்திட்டுக்கள் பற்றிப் பல விஷயங்களை அறிந்து கொண்டதால் அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
ஹைபர்பிக்மெண்டேஷன்க்கான நேர்த்தியான சிகிச்சைகள்
மிகச் சிறந்த அதிநவீன சிகிச்சைகள் மூலம் கருந்திட்டுகள், அடர் திட்டுக்களுக்கு நல்ல தீர்வுகள் அளிக்கமுடியும். மிகவும் பாதுகாப்பான மற்றும் அதிநவீன சிகிச்சை முறைகள் மூலம் நமது உடலில் மெலனின் சுரப்பதைக் கட்டுப்படுத்தவே இந்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஒலிவாவில் பாதிக்கப்பட்டவர்களை முதலில் தோல் மருத்துவ நிபுணர்கள் நன்கு ஆராய்ந்து, பின்பு பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பரிசீலிப்பார்கள். அப்போது அந்தத் திட்டுக்களின் வகை, தீவிரம் ஆகியவை பற்றியும், அவற்றின் காரணம் பற்றியும் சரியாக அறிந்து கொள்வார்கள். அவற்றின் அடிப்படையில் அவருக்கு ஏற்ற தனிப்பட்ட சிகிச்சை திட்டத்தைத் தயாரித்து, அதற்கேற்ப கீழ்க்கண்ட சிகிச்சைகளை தனியாகவோ சிலவற்றை இணைத்தோ பரிந்துரைப்பார்கள்.
- இரசாயன பீல்கள்: அடர்ந்த நிறத்தில் உள்ள திட்டுக்களைக் குறைப்பதற்கு மிகச் சிறந்த சிகிச்சை முறையாக இரசாயன பீல்கள் ஒலிவாவில் பரிந்துரைக்கப்படுகின்றன. இயற்கை மூலிகைகளின் சாற்றைப் பல்வேறு அடர்த்திகளில் பயன்படுத்தி இச் சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை அளிக்கப்படுவதால் நமது சருமத்தில் மேலாக உள்ள, பாதிக்கப்பட்ட படலமும், சேர்ந்துள்ள மெலனினும் நீக்கப்படுகின்றன. மேலும் நல்ல ஆரோக்கியமான, புதிய திசுக்கள் உருவாகவும், சருமம் சீராக மிருதுவாக மாறவும் இவை உதவுகின்றன. உங்களது சருமத்தின் வகை, பாதிப்பின் தீவிரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றைப் பார்த்து அதற்கேற்ற சரியான பீல்களை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.
- லேசர் டோனிங்: ஒலிவாவில் உள்ள மிகத் திறமையான தோல் மருத்துவ நிபுணர்கள், இத்தகைய அடர் நிறத் திட்டுக்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு, அதிநவீன, USFDA வின் ஒப்புதல் பெற்ற லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சைகள் வழங்குகின்றனர். சூரிய ஒளியால் ஏற்படும் கருமை (suntan) மெலஸ்மா, வயதாவதால் ஏற்படும் கரும்புள்ளிகள், மேக்குகலர் அமிலாய்டோஸிஸ், பருக்களினால் ஏற்படும் வடுக்கள் இன்னும் பலவற்றுக்கு லேசர் சிகிச்சைகள் பயன்படுகின்றன. நமது கைதேர்ந்த மருத்துவர்கள் Q switched YAG லேசர்களைப் பயன்படுத்தி, கூடுதலாகச் சேர்ந்துள்ள மெலனினை மிகச் சிறு துகள்களாகத் துல்லியமாக உடைக்கின்றனர். பிறகு எதிர்ப்பு சக்தியுள்ள நல்ல செல்கள் சருமத்தின் மேல் சேர்ந்துள்ள அழுக்குகளை முற்றிலும் அகற்றி, சருமத்தை மிகச் சிறப்பாக மிருதுவாக்குகின்றன. இருந்தாலும் மிகச் சிறந்த பலன்களைப் பெறுவதற்கு லேசர் சிகிச்சைகளை பெற 4-8 முறை வரவேண்டியிருக்கும்.
இப்போது ஒலிவாவில் இதற்கு வழங்கப்படும் மிகச் சிறந்த சிகிச்சைகளைப் பார்க்கலாம். இந்த அடர் திட்டுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு எத்தகைய மிகச் சிறந்த சிகிச்சைகள் ஒலிவாவில் வழங்கப்படுகின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
அடர் திட்டுக்களை நீக்குவதற்கு சிகிச்சை பெற ஒலிவாவை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
அடர் திட்டுக்களை நீக்குவதற்கு, பாதுகாப்பான சிகிச்சையைப் பெற ஒலிவாவைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் முக்கிய காரணங்கள் இவை:
- ஒலிவாவில் மிகச் சிறந்த, பயிற்சி பெற்ற தோல் மருத்துவர்கள் உள்ளனர். இவர்களுக்கு அதிநவீன சிகிச்சை முறைகள், புதிய கண்டுபிடிப்புகள் பற்றி அறியவும், மிகத் தனிப்பட்ட விதத்தில் திட்டுக்களை நீக்குவதற்கான சிகிச்சைகளை அனைத்து சரும வகைகள் உள்ளவர்களுக்கும் ஏற்றவாறு வழங்குவதற்கும் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
- இங்குள்ள மருத்துவ நிபுணர்கள் மிகவும் நன்கு திட்டமிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, ஒவ்வொருவருக்கும் ஏற்ப தனிப்பட்ட சிகிச்சைகளை வழங்குகின்றனர்.
- எங்களது அனைத்து கிளினிக்குகளிலும் அதிநவீன, USFDA ஒப்புதல் பெற்ற சாதனங்கள் உள்ளன; மற்றும் உலகளாவிய பாதுகாப்பு விதிகளும் பின்பற்றப்படுகின்றன.
- இந்தியாவில் பல நகரங்களில் பல்வேறு இடங்களில் உள்ள எமது கிளினிக்குகளில் அதிநவீன வசதிகள் உள்ளன. மேலும் எமது கிளினிக்குகளில் பாதுகாப்பு, வசதி, இடையூறுகள் இன்றி தனிப்பட்ட முறையில் சிகிச்சை பெறுதல் போன்றவற்றுக்கே மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகின்றது.
- இந்தியாவிலேயே முன்னணியில் உள்ள, மிகச் சிறந்த நம்பர் 1 ஸ்கின் & ஹேர் கிளினிக்கான ஒலிவா, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களின் மன நிறைவு 95% உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
சிகிச்சைக்கு முன்னும் பின்னும் வழங்கப்படும் ஆலோசனைகள் / உதவிகள் என்னென்ன?
அடர் திட்டுக்களை நீக்குவதற்கு வழங்கப்படும் சிகிச்சைகளிலிருந்து மிகச் சிறந்த பலன்களைப் பெற, சிகிச்சைக்கு முன்னும் பின்னும் கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்குவார்கள்.
சிகிச்சைக்கு முன் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்:
- சிகிச்சைக்கு 2 நாட்களுக்கு முன்பாவது மிகவும் கடினமான பிரஷ் அல்லது ஸ்க்ரப் கொண்டு தேய்க்க வேண்டாம்; வீட்டிலேயே சிகிச்சைகளையும் செய்து கொள்ள வேண்டாம்.
- சிகிச்சைக்கு ஒரு வாரம் முன்பாகவே வேறு சாலோன் சேவைகளை (அழகு நிலையங்களில்) பெறுவதைத் தவிர்க்கவும்.
- சிகிச்சை பெறும் நாளன்று எந்த விதமான அழகு சாதனங்களையும் மேக்அப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம்.
- பீல் சிகிச்சை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 12 மணி நேரத்திற்கு முன்பாக முகக்சவரம் செய்வதைத் தவிர்த்து விட வேண்டும்.
- சிகிச்சைக்குக் குறைந்தபட்சம் 4-6 நாட்களுக்கு முன்பாகவோ (அல்லது தோல் மருத்துவர் பரிந்துரைத்தபடியோ) பிரிமிங் கிரீம் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
சிகிச்சைக்குப் பிறகு பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்:
- சிகிச்சைக்கு பிறகு குறைந்தபட்சம் 12 மணி நேரத்திற்காவது சோப் அல்லது கிளென்ஸர் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். முகம் கழுவுவதற்கு தண்ணீர் மட்டுமே பயன்படுத்தவும்.
- சிகிச்சைக்குப் பிறகு குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு கடினமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டாம். அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்.
- சிகிச்சைக்குப் பிறகு 3 நாட்களுக்காவது ஸ்டீம்/சானா போன்ற குளியல் சேவைகளைப் பெற வேண்டாம்.
- மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் லோஷன் தடவவும். நேரடியாக சூரிய ஒளி உடல் மேல் படுவதையும் தவிர்க்கவும்.
- சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது ஒரு வாரமாவது அழகு நிலையங்களுக்குச் சென்று சாலோன் சேவைகளைப் பெறுவதைத் தவிர்க்கவும்.
- சிகிச்சைக்குப் பிறகு அந்த இடம் சிவந்து போனாலோ அங்கு எரிச்சல் ஏற்பட்டாலோ குளிர் ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது மூன்று/நான்கு முறை மாய்ச்சரைசர் தடவவும்.
சிகிச்சை வழங்கும் போதும், அதற்குப் பின்னும் வழங்கப்பட்ட இடத்தைக் கிள்ளுவதையோ அழுத்தித் தேய்ப்பதையோ தவிர்க்கவும்.
இந்த சிகிச்சையைப் பெற என்ன செய்யவேண்டும்? எப்படித் தொடங்க வேண்டும்?
எமது இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து எங்களது மருத்துவ வல்லுநர்களிடம் பேசி முன்பதிவு செய்யலாம். அல்லது 1800-103-3893 எண்ணை அழைத்தும், அடர் நிறத் திட்டுக்களுக்கு மிகச் சிறப்பான சிகிச்சை வழங்கக்கூடிய மருத்துவர்களிடம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ஆம். முகத்தில் உள்ள அடர் நிறத் திட்டுக்களை நீக்க லேசர் சிகிச்சைகள் மிகவும் பாதுகாப்பானவை சிறந்த பலன் தரக்கூடியவை அடர் நிறத் திட்டுக்களால் ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை, அவை மேல் பகுதியில் மட்டுமே இருந்தாலும், ஆழமாக இருந்தாலும் லேசர் சிகிச்சை மூலம் வெகுவாகக் குணப்படுத்த முடியும். தடவிக்கொள்ளும் கிரீம்கள் போன்றவை பலனற்றுப் போனாலும் கூட, அத்தகைய பிரச்சனைகளுக்கும் இந்த சிகிச்சையை அளிக்கலாம்.
பிரச்சனையின் வகை, தீவிரம், அது ஏற்பட்டதற்கான காரணம், தேர்வு செய்யப்பட்ட சிகிச்சை முறை, எத்தனை முறை கிளினிக்கிற்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என்னும் விவரம், பாதிக்கப்பட்ட பகுதியின் அளவு போன்ற பலவற்றைப் பொருத்துக் கட்டணங்கள் மாறுபடலாம்.
முதலில் சில அமர்வுகளுக்குப் பிறகே நல்ல பலன்கள் தெரியும். சருமத்தின் தன்மை மேம்படும். அடர் திட்டுக்களும் மறையத் தொடங்கும். ஆனாலும் முழுப் பலனைப் பெற, சிகிச்சையை முழுமையாகப் பெற வேண்டும்.
சிகிச்சைக்குப் பிறகு ஒலிவாவில் உள்ள தோல் மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகளைத் தவறாமல் பின்பற்றி, குறைந்தபட்சமாவது சருமப் பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாதுகாத்து வந்தால் நீண்ட காலம் தொடர்ந்து பலன்களைப் பெற்று அனுபவிக்கலாம்.
ஒலிவாவில் லேசர் சிகிச்சை பெறும்போது பொதுவாக வலி இருக்காது. சிகிச்சையைத் தொடங்கும் முன்பாக எமது மருத்துவ வல்லுநர்கள், ஒரு சிறிய பகுதியில் அந்த சிகிச்சையை அளித்துப் பரிசோதிப்பார்கள் (patch test). சிகிச்சை அளிக்கப்படும்போது வாடிக்கையாளருக்கு எந்தவிதப் பிரச்சனையும் இல்லாதவாறு உறுதி செய்யப்படுகிறது. சில சமயங்களில் மிக லேசாக கிள்ளுவது போல ஓர் உணர்வு ஏற்படலாம். இது தாற்காலிகமானது. எளிதில் தாங்கிக் கொள்ளக் கூடியது.
ஒலிவாவில் சிகிச்சைக்கான கட்டணங்களை, ரொக்கமாகவோ, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலமோ செலுத்தலாம்.
பொதுவாக மிகச் சிறந்த பலன்களைப் பெற 6-8 முறை கிளினிக்கிற்கு வந்து சிகிச்சை பெறுமாறு எமது தோல் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்பார்கள்; ஆனாலும் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, சரும வகை, தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சை முறை, பாதிக்கப்பட்ட பகுதியின் அளவு, பாதிப்பிற்கான காரணம் இவற்றின் அடிப்படையில் இது மாறலாம்.
இல்லை. ஒலிவாவில் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு தனித்தனியே திட்டமிட்டு வழங்கப்படும் சிகிச்சைகளினால் குறிப்பிடும்படி பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுவதில்லை. இங்கு USFDA ஒப்புதல் பெற்ற தொழில்நுட்பமும், கடுமையான வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பும் திருப்தியுமே எங்களுக்கு மிகவும் முக்கியமாகும். சிகிச்சைக்கு முன்னும் பின்னும் மிக விரிவான வழிமுறைகள் வழங்கப்படுவதால் ஆபத்துக்கள் ஏதும் இன்றி மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கின்றன.
லேசர் டோனிங் சிகிச்சையைப் பெற்ற உடனேயே பலன் தெரிய ஆரம்பிக்கும். ஆயினும் இரசாயன பீல் சிகிச்சையின்போது விரைவில் பலன் பெற, சிகிச்சைக்குப் பிறகு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் தந்து நமது மருத்துவ நிபுணர்கள் உதவுவார்கள்.
ஒலிவாவில் மேம்பட்ட சிகிச்சைகள் பெற்று நீண்ட நாள் பலன்பெறலாம். ஆனாலும் சிகிச்சைக்குப் பின் உங்கள் மருத்துவர் கூறும் அறிவுரைகளை மிகக் கவனமாகப் பின்பற்றி, அவற்றின்படி நடந்தால் நீடித்த நல்ல பலன்களைப் பெறலாம்.