- Home
- விரிதடங்களை நீக்கும் சிகிச்ளசகள்(Stretch Mark)
விரிதடங்கள் எனப்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்குவதற்கான பாதுகாப்பான, நேர்த்தியான சிகிச்சைகள்
விரிதடங்களை நிரந்தரமாக நீக்குவதற்கான மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள்
நமது சருமத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்/விரிதடங்கள் ஏற்பட்டால் மிக அசிங்கமான, பிறர் முன்ணலையில் நம்மைக் கூச்சப்பட வைக்கும்படியான ஒரு தோற்றத்தையே அவை ஏற்படுத்துகின்றன. இவை பொதுவாக நமது வயிறு, தொடை, தோள் பகுதிகள், பின்புறம், முதுகுப் பகுதி, மார்பகங்கள் போன்ற இடங்களில் தோன்றும். இவை பல காரணங்களினால் தோன்றலாம். உடல் எடை கூடுதல், கர்ப்பம், பதின்பருவத்தில் ஏற்படும் வளர்ச்சி, மரபு சார்ந்த, காரணங்கள் போன்று பல காரணங்கள் இருக்கலாம். இவை ஆண், பெண் இருவருக்குமே தோன்றலாம். அதேபோல எந்த வயதினருக்கும் (இளைஞர்கள், பெரியவர்கள்) தோன்றலாம். நமது சருமத்திற்குக் கீழே அதற்கு ஆதரவாக உள்ள ஆழமான திசுக்கள் சற்றுக் கிழிந்து போய் பாதிக்கப்படுவதால்தான் இத்தகைய விரிதடங்கள் ஏற்படுகின்றன. முக்கியமாக நமது உடலில் சுரக்கும் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஃபைபர்கள் (துணை புரோட்டின்கள்) போன்றவை தகர்க்கப்படுவதாலும், உடலில் உள்ள திசுக்கள் மிகவும் விரிவடைதாலும் இவ்வாறு ஏற்படுகின்றன. பொதுவாக இவை தோன்றும்போது சிவப்பு அல்லது பிங்க் நிறமாக இருக்கும். போகப்போக வெள்ளி நிறம்/வெள்ளை நிறமாக மாறிவிடும்.
நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் காரணமாக, இந்த விரிதடங்களை நீக்க தற்போது சிறந்த சிகிச்சை முறைகள் உள்ளன. அதி நவீன ரேடியோ ஃப்ரீக்வென்ஸி சிகிச்சை முறைகள் மூலம் இவை வழங்கப்படுகின்றன. ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கில் ஒரு அதிநவீன தொழில்நுட்பத்தை அதாவது “Secret Radiofrequency” எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இச் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதன் மூலம் புதிதாக கொலாஜன் உற்பத்தியாவதும் அது சருமத்தின் ஆழமான அடுக்குகளில் படிவதும் உறுதி செய்யப்படுகிறது. இது உடனடியாக நிகழ்கிறது. எனவே விரிதடங்கள் மெதுவாக மறையத் தொடங்குகின்றன. இந்த சிகிச்சை முற்றிலும் பாதுகாப்பானது. அறுவை சிகிச்சையற்றது. விரிதடங்களை நீக்கி மீண்டும் மாசற்ற சருமத்தை அளிக்கக்கூடியது.
இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் அல்லது விரிதடங்களை தோல் மருத்துவத்தில் ஸ்ட்ரியே என்று குறிப்பிடுவார்கள். நமது சருமத்தில் மெல்லிய கோடுகள், வரம்புகள் விழுவது போலவே இவையும் சற்று ஆழமாகவே ஏற்படுகின்றன. இவை பொதுவாக சிவப்பாகவோ அல்லது ஊதா நிறத்திலோ இருக்கும். மெதுவாக அவை வெள்ளை நிறம்/வெள்ளி நிறத்தில் மாறும். இவை நமது அடிவயிறு, பின்பகுதி, தொடை, கைகள், தோள்கள், மார்பகங்கள் போன்ற பகுதிகளில் தோன்றும். பெரும்பாலும் இவை கர்ப்பகாலத்திலும் ஒருவரது எடை மிக அதிகமாகும்போதும் சருமத்தில் தோன்றும்.
மரபு சார்ந்த காரணங்கள், நமது சருமத்தின் புதுப்பித்துக் கொள்ளும் திறன், ஆகியவற்றைப் பொருத்து நமது சருமத்தில் உள்ள விரிதடங்களின் தீவிரமும், பரவும் தன்மையும் மாறுகின்றன. ஆண் பெண் இருபாலாருக்கும் ஏற்படலாம். பெண்களுக்கு சற்று அதிகம் என்று கூறலாம். நமது சருமத்தின் தசை நார்களின் தன்மை/பாதிப்பு, கொலாஜன், எலாஸ்டின் போன்றவற்றின் சுரப்பி ஆகிய காரணங்களைப் பொருத்து விரிதடங்கள் ஏற்படுகின்றன. அவை தாமாகவே மறையும் என்று எதிர்பார்க்காதீர்கள். கட்டாயமாக அவற்றை சிகிச்சை மூலமாகவே அகற்ற முடியும்.
ஒலிவா கிளினிக்கில் உள்ள தோல் மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு, மாசற்ற சருமத்தைப் பெறுங்கள்.
ஒலிவாவில் வழங்கப்படும் சீக்ரெட் RF மூலம் வழங்கப்படும் சிகிச்சைகள், மார்பகங்கள், இடுப்பு, தொடை, கால்கள், முதுகின் கீழ்ப்பகுதி மேலும் உடலின் பிற பாகங்களிலும் உள்ள விரிதடங்களை மிகத் திறம்பட அகற்றுகின்றன.
சீக்ரெட் RF என்பது பைபோலார் மைக்ரோ நீடிலிங் ரேடியோ ஃப்ரீக்வென்ஸி பயன்படுத்தி வழங்கப்படும் ஒரு சிகிச்சையாகும். இதன் மூலம் சருமத்தின் அடிப்பகுதி சூடாக்கப்படுகிறது. இதன் மூலம் கொலாஜன் சுரப்பும், அவை படிவதும் தூண்டப்படுகிறது. இத்தகைய நிகழ்வுகள் சருமத்தின் கீழ்ப்புற அடுக்குகளில் ஏற்படுகின்றன. மேற்புரத்தில் பாதிப்புகள் ஏற்படாது.
இந்த RF சிகிச்சைக்கு 4 – 8 அமர்வுகள் (Sessions) தேவைப்படலாம். ஒவ்வொன்றுக்கும் இடையில் 1 மாத இடைவெளி இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். சிறந்த பலன்களைப் பெற இவற்றை வேறு சில சிகிச்சைகளுடன் இணைந்தும் வழங்கலாம். இந்த சீக்ரெட் RF சிகிச்சைக்கு பிறகு பலன்களைப் பெறக் காத்திருக்கவே தேவையில்லை. உடனடியாகவே பலன்கள் தெரிய ஆரம்பிக்கும். சிகிச்சை முடிந்த உடனேயே நீங்கள் இயல்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
ஒலிவாவில் வழங்கப்படும் சீக்ரெட் RF சிகிச்சை ஒரு எளிய சிகிச்சையாகும். அதிகபட்சமாக 2 மணி நேரத்திற்கு மேல் இதற்குத் தேவைப்படுவதில்லை. பிற சிகிச்சைகளைப் போலவே, இதற்கும் முதலில் தோல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். உங்கள் மருத்துவப் பின்னணி, விவரங்களைக் கேட்டறிந்து, நேரிலும் உங்களைப் பரிசோதித்து மருத்துவர்கள் விரிதடங்களைப் பற்றி சரியாக அறிந்து கொள்வார்கள்.
பிறகு உங்களை ஒரு தனி அறைக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு மருத்துவரும் அவரது உதவியாளரும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட இடத்தை உதவியாளர் நன்கு சுத்தம் செய்வார். அந்த இடம் மட்டும் மரத்துப் போகும் படியாக ஒரு கிரீமைத் தடவுவார்கள். உங்களை மிகவும் வசதியாக உணர வைக்கவும் தொற்று ஏற்படாமல் இருக்கவும் இவ்வாறு செய்யப்படுகிறது.
45 நிமிடங்கள்/ஒரு மணி நேரம் கழித்து, தோல் மருத்துவர் சீக்ரெட் RF சிகிச்சையைத் தொடங்குவார். கைப்பிடி போன்ற பகுதியை விரிதடங்கள் உள்ள பகுதியின் மேல் மிகவும் கவனமாகத் தேய்ப்பார். பாதிக்கப்பட்ட இடம் முழுவதிலும் இது படுகிறதா என்பதை உறுதி செய்வார். இந்த சிகிச்சை 45 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை வழங்கப்படும். சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் அந்தப் பகுதியை உதவியாளர் சுத்தம் செய்வார். 30-40 நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் உங்கள் இயல்பான நடவடிக்கைகளைத் தொடங்கலாம். சிகிச்சை முழுவதும் முடிந்ததும், பராமரிப்பிற்கான அறிவுரைகள் வழங்கப்படும். தொடர்ந்து வரவேண்டிய நாட்களும் திட்டமிடப்படும்.
சீக்ரெட் RF மூலம் வழங்கப்படும் இந்த சிகிச்சை சிறிதும் வலியற்றது. சிகிச்சைக்குப் பிறகும் பெரிதாக அறிகுறிகள் எதுவும் இருக்காது. இந்த சிகிச்சையின் போது சருமத்தின் ஆழமான அடுக்குகளிலேயே சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் மேல் பகுதியில் எவ்வித பாதிப்பும் இல்லை. உடனடியாகவே பலன்கள் கிடைக்கும். சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான பெரிய அறிகுறிகளும் இருக்காது.
சிலருக்கு மட்டும் சிகிச்சையை 1 மணி நேரம் எடுத்துக் கொண்ட பிறகு ஒரு கூச்ச உணர்வு ஏற்படலாம். மிகவும் நுட்பமான சருமம் உடையவர்கள் சிலருக்கு சருமத்தில் அந்த இடம் சற்று சிவப்பாகலாம். விரிதடங்களை நீக்குவதற்காக இந்த சீக்ரெட் RF சிகிச்சையை எடுத்துக் கொள்பவர்களில் மிகப் பலர் அடுத்த நாளே வேலைக்குத் திரும்புகின்றனர். எவ்விதமான பாதிப்பும் அவர்களுக்கு இருப்பதில்லை.
ஒலிவாவில் வழங்கப்படும் இந்த சீக்ரெட் RF சிகிச்சையைப் பெறுங்கள். உங்கள் விரிதடங்கள் மாயமாக மறைவதைக் கண்டு மகிழுங்கள். இன்றே எமது தோல் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
விரிதடங்களை நீக்க இந்த சீக்ரெட் RF சிகிச்சை அதி நவீனமானதாகவும், மிக மேம்பட்டதாகவும் கருதப்படுகிறது. மார்பகங்கள், இடுப்பு, தொடை மேலும் உடலின் பல பகுதிகளிலும் உள்ள விரிதடங்களை இச் சிகிச்சையின் மூலம் நீக்க முடியும்.
இந்த சீக்ரெட் RF சிகிச்சையின் சிறப்புப் பலன்கள் –
- அனைத்து விதமான சரும வகைகளுக்கும் அனைத்து நிறமுடையவர்களுக்கும் பொருந்தும்.
- கொலாஜன் மற்றும் எலாஸ்டின் சுரப்பையும் பரவுதலையும் தூண்டுகிறது.
- பழைய மற்றும் புதிய விரிதடங்களை நீக்குகிறது.
- வலியே இல்லாத சிகிச்சை.
- பலன்களைப் பெற காத்திருக்கத் தேவையில்லை.
- சிகிச்சைக்குப் பிறகு வெளியில் எவ்வித அறிகுறியும் தெரியாது.
- நுட்பமான சருமம் உடையவர்களுக்கும் இச் சிகிச்சையை வழங்கலாம். எளிதில் காயங்கள், வடுக்கள், அடர்நிறத் திட்டுக்கள் போன்றவை ஏற்படக் கூடியவர்களுக்கும் இது பொருந்தும்.
ஒலிவாவில் உள்ள தோல் மருத்துவ நிபுணர்கள், விரிதடங்களை அகற்ற அதிநவீன சீக்ரெட் RF சிகிச்சையை வழங்குகின்றனர்.
ஒலிவாவைத் தேர்ந்தெடுக்க 6 முக்கிய காரணங்கள் –
- கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளும், விதிமுறைகளும் ஒவ்வொருவருக்கு சிகிச்சை அளிக்கும் போதும் பின்பற்றப்படுகின்றன.
- ஒலிவாவில் உள்ள தோல் மருத்துவ நிபுணர்கள், இவை போன்று சருமம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சை வழங்குவதில் மிகப் பல ஆண்டுகள் கைதேர்ந்த அனுபவம் பெற்றவர்கள்.
- சீக்ரெட் RF சிகிச்சை என்பது US FDA ஒப்புதல் பெற்ற சாதனத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இது பாதுகாப்பானது. அறுவை சிகிச்சை அற்றது. சருமத்தை ஊடுருவிச் செய்யப்படுவதில்லை.
- ஒவ்வொருவருடைய சருமமும் மாறுபட்டது. ஒவ்வொருவரின் சருமத்தின் தேவைகளும் வெவ்வேறானவை. எனவேதான் ஒவ்வொருவருக்கும் விரிதடங்களை நீக்க, தனித்துவமான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
- சிகிச்சைகள் தனித்துவத்துடன் மிகுந்த கௌரவமான முறையில், பிறருக்குத் தெரியாதவாறு வழங்கப்படுகின்றன. எனவேதான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆலோசனைகள், தனித்தனி அறைகளில் வழங்கப்படுகின்றன.
- ஒவ்வொரு ஒலிவா கிளினிக்கிலும் உள்ள உலகத் தரம்வாய்ந்த வசதிகள் உங்களை மிகவும் வசதியாகவும் அமைதியாகவும் உணரச் செய்வது உறுதி.
Stretch Marks Removal Procedure Explained By Dermatologist
Oliva offers advanced treatments for stretch mark removal. Check out the details on our procedures and gain deeper insights into how the treatment proceeds, under an expert dermatologist.


*Images are from real clients, and results can be subjective
Before & After Results Of Stretch Marks Removal Treatment
Check out real images of our clients before and after the sessions of stretch removal treatment at Oliva.


Treatment results may vary from person to person
Client Reviews
Read below what our esteemed clients have to say about us and what makes us the premier provider of skin and hair care services.
Weight Loss Treatment by Dr. Shweta
Reviewed us for : Inch Loss Treatment
hajira tasu
Good Treatment

Reviewed us for : Inch Loss Treatment
Ashvini P
PRP Treatment and Diet counseling
Reviewed us for : Best PRP Hair Treatment in Chennai
Vineeth M
Top notch experience
Reviewed us for : Best PRP Hair Treatment in Chennai
Nithil Mohan
Amazing services
Reviewed us for : Best PRP Hair Treatment in Chennai
Nithil Mohan
Lighting treatment
Reviewed us for : Skin Lightening Treatment
Thiruvottiyur siva
HAIR LOSS TREATMENT
Reviewed us for :
Shazda Ahmed
I can feel the change on my skin and myself.
Reviewed us for : Acne Scar Treatment
Bitupan Dowerah
Very polite and professional at work

Reviewed us for :
Aqra Ahmed�
Why Oliva
Experienced in-house team of
Certified DermatologistsComprehensive one-to-one
consultation with the doctorAdvanced US-FDA approved
equipmentWell trained and certified
therapistsServed 2,50,000 happy customers
and countingStringent guidelines and set
protocols for better service efficacy
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQS)
RF denotes Radio Frequency. The Secret RF machine uses RF to clear stretch marks.
RF என்பது ரேடியோ ஃப்ரீக்வென்ஸியைக் குறிக்கிறது. சீக்ரெட் RF சாதனம், விரிதடங்களை நீக்க, ரேடியோ ஃப்ரீக்வென்ஸியைப் பயன்படுத்துகிறது.
சீக்ரெட் RF சாதனம் மைக்ரோ ஊசிகளைப் பயன்படுத்துகிறது. மிகக் குறைந்த அளவு ஊடுருவி கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெப்பசக்தி செலுத்தப்படுகிறது. இது சருமத்தின் மிக ஆழமான அடுக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அந்த வெப்பம் கொலாஜன் சுரப்பை அதிகரித்து, அது பரவுவதை சீராக்கி, எலாஸ்டின் இழைகளை சீர் செய்து இவற்றின் விளைவாக விரிதடங்களைத் திறம்பட நீக்குகிறது.
ஆம். ஒலிவாவில் வழங்கப்படும் சீக்ரெட் RF ஸ்ட்ரெட்ச் மார்க் சிகிச்சை முற்றிலும் பாதுகாப்பானது. மிகக் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகள், US FDA ஒப்புதல் பெற்ற சாதனங்கள், கைதேர்ந்த தோல் மருத்துவ நிபுணர்கள் ஆகிய காரணங்களால் இச் சிகிச்சைகளில் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன.
முதல் அமர்வுக்குப் பிறகேயே நல்ல பலன்கள் வெளிப்படையாகத் தேரிய ஆரம்பிக்கும்; இருந்தாலும் ஒவ்வொரு மாத இடைவெளியில், 4-8 முறை சிகிச்சை எடுத்துக் கொண்டால் விரிதடங்கள் முற்றிலும் மறைந்துவிடும்.
நிச்சயமாக இல்லை. விரிதடங்களை நீக்குவதற்காக வழங்கப்படும் சீக்ரெட் RF சிகிச்சை முற்றிலும் பாதுகாப்பானது. சிகிச்சை வழங்கப்படும் இடத்தில் மரத்துப்போக கிரீம் தடவப்படுவதால் கட்டாயமாக வலியே தெரியாது.
சிகிச்சைக்குப் பிறகு சில மணி நேரங்களோ அல்லது அதிகபட்சம் 1 நாளோ ஓய்வெடுத்த பிறகு இயல்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். சிகிச்சை எடுத்துக்கொண்டதற்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லாததால் நம்பிக்கையுடன் வாடிக்கையாளர் தன் நடவடிக்கைகளைத் தொடரலாம்.
சிகிச்சைக்குப் பிறகு தனிப்பட்ட வழிமுறைகளை புதிதாக பின்பற்றத் தேவையில்லை. வழக்கமான பராமரிப்பு போதுமானது. சிகிச்சைக்குப் பிறகு சில நாட்களுக்கு மட்டும் வெயில் நேரடியாகப் படாதவாறு இருக்க வேண்டும். ஸ்கிரப் பயன்படுத்தக்கூடாது, சன்ஸ்கிரீன் பயன்படுத்தக்கூடாது.