மருக்கள்: காரணங்கள், சிகிச்சைகள், தடுப்பதற்கான சில குறிப்புகள்.
Highlights
- ● தோலில் ஏற்படும் ஸ்கின் டேக் எனப்படும் மருக்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக் கூடியவை அல்ல. நமது சருமத்தில் எப்போதாவது சருமத்தின் திசுக்கள் சருமத்திற்கு மேலே வளர்ந்து விடும் போது அவற்றை மருக்கள் என்கிறோம். இவற்றால் வலியோ வேறு பிரச்சனைகளோ இருக்காது.
- ● பொதுவாக 46% மக்களுக்கு இத்தகைய மருக்கள் தோன்றுகின்றன. பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே வரும். சில சமயங்களில் சிறியவர்களுக்கும் வரலாம். ஆண், பெண் இரு பாலருக்கும் வரலாம்.
- ● பொதுவாக சருமம் உராய்வதுதான் மருக்கள் தோன்றக் காரணமாக இருப்பதால், அவ்வாறு சருமம் உராயும் இடங்களில், மடிப்பு மடிப்பாக உள்ள இடங்களில் இவை தோன்றுகின்றன. கழுத்து, மார்பின் மேல் பகுதி, அக்குள் பகுதி, மார்பகங்களுக்குக் கீழே, கண் இமைகள், இடுப்பும் தொடையும் சேருமிடம், தொடையின் உட்பகுதி போன்ற இடங்களில் இவை தோன்றலாம்.
- ● வசதியாக உணர்வதற்காகவும், அழகியல் சார்ந்த காரணங்களுக்காகவும் இத்தகைய மருக்களை நீக்க சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவர்கள் கீழ்க்கண்ட சிகிச்சைகளை வழங்கலாம்: கத்தரிக்கோல் உதவியுடன் கத்தரித்து எடுத்தல் (கத்தரித்தல்) எலெக்ட்ரோ காடரி (எரித்தல்) ரேடியோ ஃப்ரீக்வென்ஸி அப்லேஷன் (எரித்தல்) அல்லது கிரையோ சர்ஜரி (உறைய வைத்தல்) போன்ற பல வழிகளில் அவற்றை நீக்கலாம்.
- ● பொதுவாக தோல் மருத்துவர்கள் இந்த மருக்களை ஒரு அமர்விலேயே (Session) நீக்கி விடுவார்கள். பல நாட்களுக்குப் பிறகு ஒருமுறை அந்த இடத்தை சரிபார்க்க வரச் சொல்லலாம். இவை அதிக எண்ணிக்கையில் இருந்தால், தோல் மருத்துவர் மேலும் சில முறைகள் உங்களை வரச் சொல்லி (Sessions) சிறிது சிறிதாக எடுக்கலாம்.
மருக்கள் என்றால் என்ன?
நமது சருமத்தின் திசுக்கள் எங்காவது தோலுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தால் அதையே நாம் ஸ்கின் டேக்/மரு என்கிறோம். மருத்துவ ரீதியில் இவற்றை “அக்ரோ கோர்டன்” என்று குறிப்பிடுவார்கள். இவை “warts” எனப்படும் மரு வகைகளிலிருந்து மாறுபட்டு இருக்கும். இவை வலியற்றவை; எவ்விதப் பிரச்சனையும் தராதவை; ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாதவை. இவை பொதுவாக கழுத்து, அக்குள் பகுதி, கண் இமைகள், தொடையும் இடுப்பும் சேருமிடம் போன்ற பகுதிகளில் தோன்றும் பல அளவுகளில் பல வடிவங்களில் இவை இருக்கலாம். பொதுவாக டைப்-2 டயபடிஸ் நோய் உள்ளவர்களுக்கும், இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கும், அதிக எடை உள்ளவர்களுக்கும் இவை அதிகமாகத் தோன்றும்.
மருக்கள் ஏற்படக் காரணங்கள் என்ன?
இவை தோன்றப் பொதுவான சில காரணங்கள்:
● மடிப்புகள் மற்றும் வரப்புகள்: நமது உடலில் எங்கெல்லாம் தோல் உராய்வுகள் ஏற்படுகின்றனவோ அந்த இடங்களில் அதிக மடிப்புகளும் வரப்புகளும் (creases) இருந்தால் உராய்வு அதிகமாகி, வீக்கம் ஏற்படுகிறது. அப்போது இந்த மருக்களும் தோன்றுகின்றன.
● கூடுதல் உடல் எடை – இயல்பாக இருக்க வேண்டியதை விட கூடுதல் BMI உடையவர்களுக்கும், மிகுந்த உடல் எடை உடையவர்களுக்கும் இத்தகைய மடிப்புகளும் வரப்புகளும் ஏற்படும் வாய்ப்பு அதிகமாவதால், சருமம் அதிக இடங்களில் உராயும்; அதனால் மருக்கள் அதிகம் ஏற்படும்.
● மரபுவழிக் காரணங்கள் – உங்கள் குடும்பத்தில் முன்னோர்களுக்கு இவ்வாறு இருந்தால், மருக்கள் தோன்றும் வாய்ப்புகளும் அதிகம்.
● மருத்துவக் காரணங்கள் – சர்க்கரை நோய் உள்ளவர்கள், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள், இன்சுலினுக்கு உடலில் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு இத்தகைய மருக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். உடலில் கொழுப்பு சார்ந்த பிரச்சனைகள் கல்லீரலில் சுரக்கும் நொதிகள் (என்சைம்ஸ்) சார்ந்த பிரச்சனைகளாலும் இத்தகைய அக்ரோ கோர்டன்ஸ் அதிகமாகத் தோன்றலாம்.
● சருமத்தின் வயது அதிகரித்தல் – நமது சருமத்திற்கு வயதாகும் போதும் இத்தகைய மருக்கள் தோன்றலாம்.
● கர்ப்பம் – கர்ப்பமுற்றிருக்கும் போது நமது உடலில் இயக்குநீர்களின் (ஹார்மோன்கள்) அளவில் அதிக மாற்றங்கள் ஏற்படும் (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரஜெஸ்டிரான் அளவுகள் அதிகரித்தல்) மேலும் உடல் எடையும் அப்போது கூடுவதால் இத்தகைய அக்ரோ கோர்டன்ஸ் தோன்றலாம்.
மருக்கள் - கண்டறிதல்:
பாதிக்கப்பட்ட இடத்தைப் பார்க்கும் போதே ஒரு அனுபவம் மிக்க தோல் மருத்துவரால் மருக்களைக் கண்டுபிடித்துவிட முடியும். இவை பெரும்பாலும் தோலின் நிறத்திலேயே இருக்கும். ஆனால் இவற்றுக்கு இரத்தம் சரியாகப் போகாத போது, சில முடிச்சிட்டுக்கொண்டு அடர்ந்த பிரவுன் அல்லது கரு நிறமாக மாறலாம்.
இவற்றைத் தடுப்பது மற்றும் கையாளுதல்
மருக்களை தடுக்கவும் கையாளவும் கீழ்க்கண்ட குறிப்புகளைப் பின்பற்றலாம்:
- ஆரோக்கியமான, சரியான எடையில் இருந்தால் நமக்கு இத்தகைய மருக்கள் தோன்றுவதைக் குறைக்கலாம். அதிக உடல்பருமன் இவை தோன்ற ஒரு முக்கியக் காரணமாகும்.
- இரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவுகளைக் கண்காணித்து வந்தால் மேலும் மேலும் இவை தோன்றாமல் தடுக்கலாம்.
- இத்தகைய மருக்கள் தோன்றும் இடங்களில் படும்படியாக நகைகள் மற்றும் முரட்டுத்தனமான துணியில் உடைகள் அணிவதைத் தவிர்க்கவும்.
எப்போது மருத்துவரைப் பார்க்க வேண்டும்?
பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்தம் கசிந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். இவ்வாறு சரியான நேரத்தில் மருத்துவ உதவி எடுத்துக் கொண்டால் வேறு ஏதாவது பிரச்சனைகள் உள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
தற்போதுள்ள சிகிச்சை முறைகள்
ஒலிவா ஸ்கின் அண்ட் ஹேர் கிளினிக்கில், மருக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் உள்ளன. எமது தகுதி வாய்ந்த தோல் மருத்துவ வல்லுநர்கள், அதி நவீன சாதனங்களைப் பயன்படுத்தி மருக்களை நீக்க, கீழ்க்கண்ட சிகிச்சைகளை வழங்குவார்கள்.
- எலெக்ட்ரோகாடரி (எரித்தல்)/ரேடியோஃப்ரீக்வென்ஸி அப்லேஷன்
வீட்டு வைத்தியம்:
முடிந்தவரை வீட்டிலேயே செய்து கொள்ளும் சிகிச்சைகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவ்வாறு செய்யும்போது தொற்று ஏற்பட்டு அதனால் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மருக்களை நீக்க எந்த விதமான சிகிச்சை எடுத்துக்கொள்ளும் முன்பும் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
மருக்கள் பொதுவாக வலியையோ, பிற பிரச்சனைகளையோ தருவதில்லை. ஆனாலும் அவை வேறு ஏதாவது ஒரு குறைபாடு / பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே தகுந்த அனுபவம் மிக்க தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவது நல்லது.