34523
page-template/template_concern_page.php
https://www.olivaclinic.com/tamil/?p=34523
34523
page-template/template_concern_page.php

Hypertrichosis

Highlights

  • ● ஹைபர்டிரைகோஸிஸ் (முடி மிக அதிகமாக வளர்தல்) என்பது, நமது உடலில் ஏதாவது ஒரு பகுதியிலோ அல்லது பொதுவாகவோ மிக அதிக அளவில் முடி வளர்வதைக் குறிக்கும்.
  • ● முதன்முதலாக இத்தகைய பிரச்சனை கேனரித் தீவுகளில் (Canary Islands) 17ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
  • ● இந்த பிரச்சனையைத் தீர்க்க லேசர் மூலம் முடி நீக்கும் சிகிச்சை மிகுந்த பலனைத் தரும்.

ஹைபர்டிரைகோஸிஸ் என்பது என்ன?

உடலின் எந்த ஒரு பகுதியிலாவது மிக அதிகமாக முடி வளரும் பிரச்சனை தோல் மருத்துவத்தில் ஹைபர்டிரைகோஸிஸ் என்று குறிப்பிடப்படுகிறது.

தோல் மருத்துவர்கள் இந்தப் பிரச்சனையை கீழ்க்கண்டவாறு பிரிப்பார்கள்:

  • பிறப்பிலேயே ஏற்படுதல் அல்லது சில காரணங்களால் ஏற்படுதல் (Acquired)
  • ஒரே இடத்தில் வளர்தல் அல்லது பொதுவாக உடலில் வளர்தல்
  • வளரும் முடியின் அடிப்படையில் வகைப்படுத்துதல் – மென்மையான முடி (lanugo), பருவமையும்போது வளரும் நுண்மையான முடி (vellus) அல்லது வயதான பிறகு வளரும் முடி.

நமது உடலில் ஏதாவது ஒரு இடத்திலோ பொதுவாகவோ இயல்பை விட அதிகமாக முடி வளர்வதுதான் ஹைபர்டிரைகோஸிஸின் மிக முக்கிய அறிகுறியாகும். அவ்வாறு வளரும் முடி “லேனுகோ”வாக (மென்முடி) இருக்கலாம். (மிகவும் மிருதுவாகவும் எவ்வித நிறமும் இன்றி, குழந்தை பிறந்து சில நாட்கள் வரை தெரியும் முடி போன்று இருக்கலாம்); அல்லது வயதான பிறகு கால் போன்ற இடங்களில் வளரும் அடர்த்தியான முடியாகவும் இருக்கலாம்.

இத்தகைய முடி நமது உடல் முழுவதுமோ அல்லது ஆங்காங்கே திட்டுத்திட்டாக சில இடங்களிலோ தோன்றலாம். இது ஆண்கள் அல்லது பெண்கள் இருவருக்குமே தோன்றலாம். பிறப்பிலேயே சிலருக்குத் தோன்றலாம்; வேறு சிலருக்கு பிறகு ஏற்படலாம்.

பிரிவுகளும் வகைகளும்

இத்தகைய அதிக முடி வளர்ச்சிக்கு (ஹைபர்டிரைகோஸிஸ்) காரணங்கள் எவை என்று அறுதியிட்டுக் கூறப்படவில்லை. தோல் மருத்துவர்கள் பொதுவாக இதை பிறவியிலேயே தோன்றியது மற்றும் பிறகு ஏற்பட்டது என்று இரு வகையாகப் பிரிப்பார்கள். இவை இரண்டுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடுகள் இவை:

பிறவியிலேயே தோன்றும் ஹைபர்டிரைகோஸிஸ்:

இந்தப் பிரிவைச் சேர்ந்த ஹைபர்டிரைகோஸிஸ், பிறவியிலேயே தோன்றுவதாகும். பரம்பரைக் காரணங்களால் வரும் சில நோய்கள் போல, இதனுடனும் வீங்கிய ஈறுப் பகுதிகள், முக அமைப்பில் சீரற்ற தன்மை போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.

குடும்பத்தில் முன்னோர்களுக்கு இவ்வாறு மிக அதிக முடி வளரும் தன்மை இருந்தால், வேறு எந்த அறிகுறியும் இன்றியும் கூட சிலருக்கு இவ்வாறு மிக அதிக முடி வளரலாம்.

இவ்வாறு பிறவிலேயே தோன்றும் போது, அதிக முடி வளர்ச்சி உடலின் ஒரு பகுதியிலோ அல்லது உடல் முழுவதுமோ இருக்கலாம்.

  • பொதுவான ஹைபர்டிரைகோஸிஸ் – இது மிகவும் அரிதாகத்தான் ஏற்படும். இதற்கான காரணங்கள் பல இருக்கலாம். இத்தகைய, பிறவியிலேயே வரும் பொதுவான ஹைபர்டிரைகோஸிஸ்ஸை சார்ந்து பல அறிகுறிகள் தோன்றலாம். அம்பராஸ் சிண்ட்ரோம், கான்ட்டு சிண்ட்ரோம், கார்னெல்லா டிலான்ஞ் சிண்ட்ரோம் ஆகிய ஒரு சில சிண்ட்ரோம்கள் இதன் தொடர்பாக இருக்கலாம். ஆனால் இவை மிக அதிகமாக முடி வளர்வது மட்டுமின்றி வேறு சிலவற்றுடன் கூட இணைந்திருக்கலாம்.
    பிறவியிலேயே வரக்கூடிய ஹைபர்டிரைகோஸிஸ் லானுஜினோஸா போன்ற பிரச்சனைகளும் உள்ளன; அதே போல பொதுவான ஹைபர்டிரைகோஸிஸ் பிரச்சனைகள் ஏற்படும் போது மிக அதிக முடி வளருதல் என்பது ஒரு அறிகுறியாக மட்டுமே இருக்கும். சில சமயங்களில் ஹைடான்டோயின் போன்ற மருந்துகளாலும் (intrauterine exposure), மதுவினாலும் கூட இவ்வாறு ஏற்படலாம்.
  • குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஹைபர்டிரைகோஸிஸ் – சில சமயங்களில் நமது முதுகுத்தண்டு மற்றும் தண்டுவடத்தில் இயல்புக்கு மாறான நிலைகளின் காரணமாக, இவ்வாறு ஏற்படலாம். பிறவியிலேயே தோன்றும் அடையாளங்களைப் போலவே (கான்ஜெனிடல் மெலனோசைடிக் நெவஸ் அல்லது பெக்கர்ஸ் நெவஸ்) இத்தகைய கூடுதல் முடி வளர்ச்சியும் தோன்றலாம்.

பிற காரணங்களால் பெறப்படும் ஹைபர்டிரைகோஸிஸ்:

சில சமயம் ஒரு சிலருக்கு இந்தப் பிரச்சனை இருந்தாலும் பிறவியிலேயே மிக அதிக முடி வளர்ச்சி இருக்காது; ஆனால் பெரியவர்களான பிறகு இவ்வாறு அதிக முடி வளர்ச்சி ஏற்படலாம். இது பொதுவாகவோ அல்லது குறிப்பிட்ட இடத்திலோ ஏற்படலாம். புற்றுநோய் அல்லது தைராய்டு பிரச்சினைகள் அல்லது அனோரெக்ஸியா நெர்வோஸா போன்ற நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளினால் கூட இவ்வாறு ஏற்படலாம். சில சமயங்களில் எலும்பு முறிவுக்காக போடப்பட்ட பிளாஸ்டர் கட்டு காரணமாக தொடர்ச்சியாக சருமத்தில் ஏற்படும் அரிப்பின் காரணமாகவும், சருமத்தின் மேல் தடவக் கூடிய சில ஸ்டிராய்டு கிரீம்கள் அல்லது மினாக்ஸிடில் கிரீம்கள் காரணமாகவும் இருக்கலாம். சில சமயங்கள் “டெர்மடோமையோசைடிஸ்” போன்ற நோய்களின் ஒரு பகுதியாகவும் இவ்வாறு ஏற்படலாம் (முழங்காலுக்கு மேல்).

ஹிர்ஸூடிஸம் மற்றும் ஹைபர்டிரைகோஸிஸ் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளதா?

தோல் மருத்துவம் சார்ந்த இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்க்கலாம்.

  • ஹிர்ஸூடிஸம் என்பது பொதுவாக ஹார்மோன்களால் தூண்டப்படுகிறது. (ஆண்ட்ரோஜென்கள்). இவை பொதுவாக பெண்களுக்கே ஏற்படும். ஹைபர்டிரைகோஸிஸ் ஆண், பெண் இருபாலாருக்குமே ஏற்படலாம்.
  • ஹிர்ஸூடிஸம் பிரச்சனையில், உடலில் உள்ள முடி மிகவும் முரட்டுத்தனமாகவும், நிலையாகவும் ஆண்களுக்கு முடி வளரும் அதே முறையில் வளருவதாகவும் இருக்கும். ஹைபர்டிரைகோஸிஸ் பிரச்சனையில் முடி கனமாகவோ மெல்லியதாகவோ இருக்கலாம். உடல் முழுவதும் கூட இருக்கலாம்.

கண்டறிதல்:

தோல் மருத்துவர்கள் ஹைபர்டிரைகோஸிஸ் பிரச்சனை இருப்பதை நேரடியாக நன்கு பரிசோதிப்பதன் மூலம் கண்டறிவார்கள். முடி வளர்ச்சி, அந்த நபரின் வயது, பாலினம், இனம், அவரது ஆண்ட்ரோஜென் சென்ஸிடிவிடி போன்ற பல விவரங்களையும் அறிந்து கொள்வார்கள்.

மேலும் அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் மருத்துவப் பின்னணியையும், பொதுவான வாழ்க்கை முறைப் பழக்க வழக்கங்களையும், சமீபத்தில் எடுத்துக் கொண்ட மருந்துகள் பற்றியும் தோல் மருத்துவர்கள் அறிந்துகொண்டு கவனம் செலுத்துவார்கள்.

இந்தப் பிரச்சனை உங்களுக்கு வருமா?

இந்த பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய கீழ்க்கண்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக நீங்கள் இருந்தால், ஹைபர்டிரைகோஸிஸ் ஏற்படலாம்.

  • மிக அதிக முடி வளர்ச்சி ஏற்பட்டு அதனால் முழு உடலுமே பாதிக்கப்படுதல்.
  • ஹைபர்டிரைகோஸிஸ்ஸைத் தூண்டக் கூடிய மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல்.
  • உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளாகவோ அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் தடவிக் கொள்ளக்கூடிய மருந்தாகவோ ஸ்டிராய்டுகளை, மருத்துவரின் கண்காணிப்பும் இல்லாமல் பயன்படுத்துதல்.
  • அடிக்கடி சருமத்தை சொரிந்து கொள்ளும் பழக்கம் இருத்தல்.
  • “பார்ஃபைரியா க்யூடானியா டர்டா (Porphyria CutaneaTarda)” போன்ற பிரச்சினைகள் இருத்தல்.

தடுத்தல் மற்றும் இந்தப் பிரச்சினையைக் கையாளுதல்:

கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஹைபர்டிரைகோஸிஸ் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

  • இந்தப் பிரச்சனையைத் தூண்டக் கூடிய மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்தல்.
  • உங்கள் மருத்துவர் கொடுத்த மருந்துகளை மட்டுமே தகுந்த கண்காணிப்புடன் எடுத்துக் கொள்ளவும்.

பிறவிலேயே வரக்கூடிய “கான்ஜெனிடல் ஹைபர்டிரைகோஸிஸ்”ஸை தடுக்க முடியாது; ஆனாலும் அந்தப் பிரச்சினையை தற்காலிகமாக இவற்றை செய்து கட்டுப்படுத்தலாம்.

  • டிரிம்மிங் செய்தல்
  • ஷேவ் செய்தல்
  • முடி நீக்கும் கிரீம்கள் தடவுதல்
  • முடிகளை நீக்குதல்
  • எலக்ட்ரோலிஸிஸ்
  • வாக்ஸிங்
  • திரெட்டிங்

தாமாகவே சிகிச்சை அளித்தல்:

மேலே சொன்ன முறைகள் போல பாரம்பரிய முறைகள் மூலம் முடியை நீக்கும் போது சிறிது காலத்திற்கே தீர்வு கிடைக்கும். ஹைபர்டிரைகோஸிஸ் போன்ற ஒரு பிரச்சனை இருக்கும் போது, இத்தகைய முறைகள், முடி திரும்ப வளருவதைத் தடுக்காது. சரியான மருத்துவ ஆலோசனை பெற்று நிரந்தரத் தீர்வு பெறுங்கள்.

ஒலிவா கிளினிக்கில் உள்ள சிகிச்சை முறைகள்

ஹைபர்டிரைகோஸிஸ் பிரச்சனையை சமாளிக்க ஒலிவா கிளினிக்கில் லேசர் சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது. சிறந்த சிகிச்சை தருவதற்காக, நல்ல அனுபவமும் தகுதியும் பெற்ற நமது மருத்துவர்கள் கீழ்க்கண்ட லேசர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர்:

  • டயோட்
  • அலெக்ஸான்டிரைட்
  • Nd: YAG
  • சூபர் ஹேர் ரிடக்ஷன் (AFT)

நோயைப் பற்றிய கணிப்பு

ஹைபர்டிரைகோஸிஸ் பிரச்சனை இருந்தால், அது எந்த வகையைச் சேர்ந்தது என்பதை அறிந்து கொண்டு அதன் பிறகே அதற்கான சரியான சிகிச்சையை அளிக்க வேண்டும். அருகில் உள்ள ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கிற்கு இன்றே வருகை தரவும். அல்லது 18001033893 எண்ணை அழைத்து அல்லது https://www.olivaclinic.com/book-appointment -ல் முன்னதாகவே அபாயிண்ட்மெண்ட் பெறவும். நமது மிகச் சிறந்த தோல் மருத்துவர்களைக் கலந்தாலோசித்து சிறந்த மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும்.

    Talk to Our Experts

      Subscribe to Newsletter

      Expert guide to flawless skin and nourished hair from our dermatologists!