ஆர்.எஃப் மைக்ரோநெட்லிங் சிகிச்சை: நன்மை, செயல்முறை மற்றும் செலவு

mnrf treatment

    Speak To Our Expert

    Please enter your contact information.

    ரேடியோஃப்ரீக்வென்ஸி மைக்ரோநீடிலிங் (RF மைக்ரோநீடிலிங்) என்பது புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் உங்கள் சருமத்தின் தன்மையை மேம்படுத்துகிறது. இந்த சிகிச்சை முறை உங்கள் சருமத்தை புதுப்பித்து, மிகச் சிறந்த முறையில் பருக்களினால் ஏற்படும் வடுக்கள், திறந்துள்ள சில சிறு துளைகள், சுருக்கங்கள், விரிவுத் தடங்கள் (stretch marks), தோல் தொங்கிப் போகுதல் மற்றும் பொலிவிழந்த சருமம் போன்ற பலவற்றையும் குறைக்கிறது.

    ரேடியோஃப்ரீக்வென்ஸி (RF) மைக்ரோநீடிலிங் என்றால் என்ன?

    RF மைக்ரோநீடிலிங் (MNRF) என்பது, மிக மிகக் குறைந்த அளவில் சருமத்தை ஊடுருவிச் செய்யப்படும் ஒரு செயல்முறை. பாரம்பரிய மைக்ரோநீடிலிங் செயல்முறைகளுடன் ரேடியோஃப்ரீக்வென்ஸியின் (ரேடியோ அதிர்வலைகள்) சக்தியைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை புதுப்பிக்கும் முறை இது. RF அதிர்வுகள் ஒரு சிறப்பான தொழில்நுட்பத்தின் மூலம் சருமத்திற்குள் செலுத்தப்படும்போது சருமம் இறுகுகிறது. அப்போது பருக்களினால் ஏற்படும் வடுக்கள் குறைந்து, கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இவை இணைவது தூண்டப்படுகிறது. இதனால் சருமத்தின் மேற்புரத்திற்கு பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை. எனவே நல்ல பலன்களைப் பெற வெகு நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

    ரேடியோஃப்ரீக்வென்ஸி மைக்ரோநீடிலிங் சிகிச்சையின் பலன்கள்

    சருமத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இந்த MNRF சிகிச்சை ஒரே சரியான தீர்வு என்றே சொல்லலாம். இந்த சிகிச்சையின் சில பலன்களைப் பார்க்கலாம்.

    • சருமத்தினை மேலும் சீராக்கி, சருமத்தின் இயல்பை நயமாக மாற்றுகிறது
    • சருமத்தில் விழும் சுருக்கங்களையும் கோடுகளையும் குறைக்கிறது
    • சருமத்திற்குப் புத்துணர்ச்சி அளித்து, நன்கு இறுகுமாறு செய்கிறது
    • பருக்களினால் ஏற்படும் வடுக்களைக் குறைத்து, கரும் திட்டுக்கள், திறந்திருக்கும் நுண்ணிய துளைகள் மற்றும் விரிதடங்கள் ஆகியவற்றையும் சரிசெய்கிறது

    RF மைக்ரோநீடிலிங் பொதுவாக யார் யாருக்கு செய்யலாம்

    இந்த சிகிச்சை அனைத்துவிதமான சருமங்களுக்கும் ஏற்றது. சருமத்தின் பல பிரச்சனைகளுக்கு இது தீர்வளிக்கின்றது. MNRF கீழ்க்கண்டவற்றுக்குத் தீர்வளிக்கிறது:

    • பருக்களால் (வீக்கத்துடன் கூடிய) ஏற்படும் வடுக்கள் (Rolling & box type)
    • பருக்கள், தடுப்பூசிகள், தீக்காயங்கள் மற்றும் அம்மை போன்றவற்றால் ஏற்படும் வடுக்கள்
    • பெரிய அளவில் திறந்திருக்கும் துளைகள்
    • சருமம் தளர்ந்து தொங்கிப் போகுதல், சுருக்கங்கள், கோடுகள்
    • விரிதடங்கள்
    • மங்கிய நிறம்

    RF மைக்ரோநீடிலிங் சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது?

    MNRF சிகிச்சை செய்யப்படுவதற்கு 1 மணி நேரம் முன்பாக உங்கள் தோல் மருத்துவர், அந்த இடத்தில், மரத்துப் போவதற்கான கிரீம் ஒன்றைத் தடவுவார் இதனால் உங்களுக்கு வலியோ அசௌகரியமோ இருக்காது. பின்பு அதிநவீன சாதனத்தைப் பயன்படுத்தி உங்கள் தோல் மேல் லேசாக அழுத்துவார். இதன் மூலம் அதன் நுனியில் உள்ள மிக நுண்ணிய ஊசிகள் ரேடியோ அதிர்வலைகளின் சக்தியை தேவைப்பட்ட அளவு ஆழத்திற்கு செலுத்தும். எந்த அளவு ஆழத்திற்கு அவை செல்ல வேண்டும் என்பதை தோல் மருத்துவர் கண்காணித்து மிகத் துல்லியமாகக் கட்டுப்படுத்துவார். எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும் வரை இந்த செயல்முறை தொடரும்.

    இந்த MNRF சிகிச்சை செய்யப்படும் இந்த வீடியோவை பாருங்கள்!

    MNRF சிகிச்சைக்கு இந்தியாவில் எவ்வளவு செலவழியும்?

    இந்தியாவில் உள்ள நல்ல புகழ்பெற்ற கிளினிக்குகளில் இந்த MNRF சிகிச்சை பெற ஒரு அமர்வுக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 ஆகலாம். மொத்தமாக ஆகக்கூடிய செலவு ஒவ்வொருவருக்கும் அவர்களது பிரச்சனைகளின் தீவிரம், சிகிச்சை தேவைப்படும் பரப்பின் அளவு, சருமத்தின் தடிமன், எத்தனை முறை செய்யப்பட வேண்டும் என்பது போன்று பல விஷயங்களைப் பொருத்து மாறுபடலாம்.

    இங்கே குறிப்பிட்டுள்ள கட்டணங்கள் ஒரு குறியீட்டிற்காக தோராயமானவை மட்டுமே. மேலும் கிளினிக் எந்த அளவு பிரபலமானது, கிளினிக் அமைந்துள்ள இடம், பயன்படுத்தப்படும் சாதனங்கள், மருத்துவரின் அனுபவம் போன்றவற்றைப் பொருத்தும் கட்டணங்கள் மாறுபடும். எனவே MNRF சிகிச்சை பெற, அதற்குரிய ஒரு தோல் சிகிச்சை கிளினிக்கிற்கு சென்று விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

    MNRF சிகிச்சையினால் பொதுவாக ஏற்படும் பக்கவிளைவுகள்

    இந்த சிகிச்சைக்குப் பிறகு கீழ்க்கண்ட மிக மிக லேசான பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

    • செயல்முறையின் போது சிலர் அசௌகரியமாக உணரலாம்.
    • MNRF செய்யும்போது சிலருக்கு சிறிய அளவில் வீக்கம், போன்றவை ஏற்படலாம். இவை பொதுவாக நடக்கக் கூடியவை தான். சிகிச்சை முடிந்து 1 மணி நேரத்தில் சரியாகிவிடும்.
    • சிகிச்சை முடிந்த பிறகு சிலருக்கு அந்த இடத்தில் சிறு சிறு பொறிகள் போல ஏற்படலாம். அவற்றை வெறும் கையால் கிள்ளி எறியக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அவை தானாகவே விழுந்துவிடும்.
    • செயல்முறை முடிந்த உடன் அந்த இடத்தில் சிறு சிறு வெடிப்புகள் தோன்றலாம். அவற்றை வெறும் கையால் கிள்ளி எறியக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அவை தானாகவே விழுந்துவிடும்.

    MNRF சிகிச்சைக்கு முன்னும் பின்னும்

    MNRF சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முன்னும் பின்னும் படத்தைப் பார்க்கவும்:

    MNRF சிகிச்சை முடிந்ததும் சில முக்கிய குறிப்புகள்

    இந்த சிகிச்சை பெற்றதும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை.

    • காம்டோஜெனிக் அல்லாத (நுண் துளைகள் அடைக்காத), SPF 30+ உடைய சன்ஸ்கிரீன் லோஷன்களைப் பயன்படுத்தவும்.
    • உங்கள் தோல் மருத்துவர் சொன்ன தோல் பராமரிப்பு வழிமுறைகளை மட்டும் பின் பற்றவும்.
    • அழகு நிலையங்களில் சென்று சேவைகள் பெறுவதை 1 வாரம் தவிர்க்கவும்.

    MNRF உங்கள் பருக்களின் வடுக்களை மட்டும் நீக்குவதில்லை, இது சருமத்தையே மிகவும் அழகாக்குகிறது.

    இப்போது MNRF சிகிச்சை பற்றி அனைத்தும் அறிந்து கொண்டுள்ளதால், அருகில் உள்ள ஒலைவா ஸ்கின் கிளினிக்கிற்கு நேரில் சென்று முன்பதிவு செய்துகொள்ளவும். நம் நாட்டிலேயே மிகச் சிறந்த சருமப் பராமரிப்பு சேவைகளைப் பெறவும்.

    RF மைக்ரோநீடிலிங் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

    வடுக்களை நீக்குவதற்காக செய்யப்படும் ஃப்ராக்ஷனல் ரேடியோஃப்ரீக்வென்ஸி சிகிச்சை லேசர் சிகிச்சையிலிருந்து எப்படி வேறுபட்டது?

    1. RF சிகிச்சைமுறை சருமத்திற்குக் கீழே உள்ள கொலோஜனை சூடாக்குகிறது. அந்த வெப்ப அலைகள், சருமத்தின் மேல் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரோகளுக்கு இடையே பாய்கிறது. எனவே சருமத்தின் அடுக்குகளில் இவ்வாறு லேசான வெப்பம் பாய்ந்து மெதுவாக புதிய கொலாஜனையும் எலாஸ்டினையும் சுரக்க வைக்கிறது. அதன் மூலம் சருமம் இறுகிக் கொள்கிறது.
    2. லேசர் சிகிச்சையின்போது, மிகவும் கூர்மையான ஒளிக்கற்றை பயன்படுத்தப்படுகிறது. அந்த சக்தி வெப்ப சக்தியாக மாற்றப்படுகிறது. அந்த சக்தி, வடுவை மிகவும் சிறு சிறு துகள்களாக்கி அந்த இடத்தை சிறிது சிறிதாக சரிசெய்கிறது. அந்த வடுவும் சில காலத்தில் ஆறத் தொடங்குகிறது.

    RF மைக்ரோநீடிலிங் செய்யும்போது வலி/காயம் ஏற்படுமா?

    இந்த முறையில் வடுக்களை அழிக்கும் சிகிச்சை செய்யப்படும்போது வலியே இருக்காது என்றே கூறலாம். இதைச் செய்யும்போது மிக லேசான முறையே பயன்படுத்தப்படுவதால், மரத்துப் போவதற்கான கிரீம் தேவைப்படுவதில்லை. ஆனால் அழுத்தத்துடன் ரேடியோ அதிர்வலைகள் பயன்படுத்தப்பட்டு மைக்ரோநீடிலிங் செய்யப்படும்போது, வலி, அசௌகரியம் ஆகியவற்றைத் தவிர்க்க மரத்துப்போகும் கிரீம் பயன்படுத்தலாம்.

    RF மைக்ரோநீடிலிங் சிகிச்சையின் பலன்களைப் பெற எத்தனை நாள் காத்திருக்க வேண்டும்?

    மிகக் குறைந்த நாட்களிலேயே RF மைக்ரோநீடிலிங் சிகிச்சையின் பலன்கள் தெரிய ஆரம்பிக்கும். உங்கள் சருமத்தின் வகையைப் பொருத்து, ஓரிரண்டு நாட்களிலேயே பலன் தெரிய ஆரம்பிக்கலாம்.

    எனக்கு எத்தனை முறை MNRF சிகிச்சை தேவைப்படும்? எவ்வளவு அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்?

    பெரும்பாலானவர்களுக்கு 3-5 முறை தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட 6 மாதங்களில் இதை செய்து கொள்ளலாம். அப்போது நல்ல பலன்கள் தெரிய ஆரம்பிக்கும். சிகிச்சையினால் உங்கள் சருமம் எப்படிப் பலன் பெறுகிறது என்பதையும் பொருத்து எத்தனை முறை தேவை என்பதை நிச்சயிக்கலாம்.

    மேலும் எந்தவிதமான MNRF சிகிச்சை வழங்கப்படுகிறது என்பதைப் பொருத்து, ஒரு முறைக்கும் மற்றொரு முறை செய்வதற்குமான கால இடைவெளியை முடிவு செய்யலாம். பொதுவாக ஒரு முறைக்கும் அடுத்த முறைக்கும் இடையே 4-6 வார இடைவெளி இருக்கலாம் என தோல் மருத்துவர்கள் எண்ணுவார்கள்.

    வீட்டிலேயே செய்யப்படும் MNRF சிகிச்சைகளையும் கிளினிக்குகளில் செய்யப்படும் இந்த சிகிச்சைகளையும் ஒப்பிட முடியுமா?

    MNRF சிகிச்சை வீட்டிலேயே செய்யும்போது சில நல்ல விளைவுகளும் சில தேவையற்ற விளைவுகளும் ஏற்படலாம். நிச்சயமாக செலவு குறைந்தாலும் சில சமயங்களில் ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம். நன்கு ஆராயாமல் சாதனங்களைப் பயன்படுத்தினால் அதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம். எனவே பாதுகாப்பாக MNRF சிகிச்சை செய்து கொள்ள விரும்புபவர்கள் அதற்குரிய சிறப்பு கிளினிக்குகளில் சென்று அதற்கெனப் பயிற்சி பெற்றவர்களிடம் செய்து கொள்வதுதான் சிறந்தது; பாதுகாப்பானது. செலவு சற்று அதிகமானாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    Was this article helpful?

    About The Author

    Dr.Lakshmi Durga

    Dr.Lakshmi Durga

    Dr. Lakshmi Durga M had completed her MBBS from the prestigious Dr. MGR Medical University in 2005 and DDVL from Manipal Academy Of Higher Education, Manipal, India in 2010. She also a member of Medical Council of India (MCI).