How To Treat Temple Hair Loss?

    Speak To Our Expert

    Please enter your contact information.

    உங்கள் தலைமுடி தொடங்கும் கோடுதான் உங்கள் முகத்திற்கு எல்லைக்கோடுபோல இருக்கும். எப்போது தலையின் முன் பகுதியில் இரு புறமும், நெற்றிப் பகுதியில் முடி கொட்ட ஆரம்பிக்கிறதோ அப்போது நெற்றி அகலமாகத் தெரிய ஆரம்பிக்கிறது. முதன் முதலாக இப்படி முடி கொட்டத் தொடங்கும் போது பலர் மிகவும் அதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள். அப்போதுதான் அவர்களுக்கு முடி கொட்டுவது மிகவும் தீவிரமாகி விட்டது என்றும், அதை வேறுவிதமாக முடியை சீவிக் கொள்வதன் மூலமும் மறைக்க முடியாது என்றும் உணர ஆரம்பிக்கிறார்கள். அப்போது அதற்கு மருத்துவ முறையில்தான் தீர்வு தேவைப்படுகிறது.

    முன் நெற்றி வழுக்கை (Temple Hair Loss) என்றால் என்ன?

    ஆண்களுக்கு ஏற்படும் ஆண்ட்ரோஜெனடிக் அலோபேசியா எனப்படும் வழுக்கையின் முதல் அறிகுறியாக இது கருதப்படுகிறது. தலையில் முடி மெலியத் தொடங்குகிறது. நெற்றிப் பகுதியில் முடி கொட்டி வழுக்கை விழத் தொடங்குகிறது. இது பொதுவாக இருபுறமும் ஏற்படும். இப்படி முடி கொட்டுவது/widow’s peak என்பதன் தொடக்க நிலையாக இருக்கும். இது பெண்களைவிட ஆண்களிடையே அதிகம் தோன்றுகிறது. வயதாக ஆக இவ்வாறு முடி கொட்டுவது அதிகமாகிறது. சரியான நேரத்தில் சரியான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் இதை சரிசெய்யவே முடியாத நிலைக்குப் போய்விடும்.

    இவ்வாறு நெற்றிப் பகுதியில் முன் தலையில் முடி கொட்டுவதற்கு என்ன காரணம்?

    உங்களுக்கு தலையின் முன் பகுதியில் நெற்றிக்கு 2 பக்கமும் வழுக்கை விழ ஆரம்பித்தால், அது பெரும்பாலும் ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கைதான். இதைத் தவிர வேறு சில காரணங்களும் இருக்கலாம்.

    1. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை (Male Pattern Baldness (MPB)) – இதை மருத்துவ ரீதியாக ஆண்ட்ரோஜெனிடிக் அலோபேசியா என்று குறிப்பிடுவார்கள். இது பொதுவாக ஆண்களுக்கு மரபுரீதியாக முடிகொட்டுவதைக் குறிக்கும். இது ஆண்களின் தலையில் உள்ள மயிர்க் கால்களுக்கும் (hair follicles), டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரான் எனும் இயக்குநீருக்கும் ஏற்படும் விளைவுகளால் ஏற்படுகிறது. ஆய்வுகளின்படி 30-50 வயது வரை உள்ள ஆண்களில் 58% பேருக்கு இத்தகைய வழுக்கை ஏற்படுகிறது. இது முதலில் தலையின் முன்பகுதியில் நெற்றியின் இரு பக்கங்களிலும் ஏற்படுகிறது.
    2. பிற காரணங்கள் – இதற்கு இவைபோன்ற வேறு சில காரணங்களும் இருக்கலாம்:

    (a) அலோபேசியா அரியாடா: இந்த நிலையின்போது தலையில் திடீரென்று ஆங்காங்கே முடி கொட்டி வழுக்கை விழும். இத்தகைய நிலையில் முன் நெற்றியிலும் வழுக்கை விழும் (temple hair loss).

    (b) வடு ஏற்படுத்தும் அலோபேசியா: இதை மருத்துவ ரீதியாக primary cicatricial alopecia என்பார்கள். இந்த நிலையில் முடி கொட்டுகிறது. அதனால் சரிசெய்யவே முடியாத அளவு மயிர்க்கால்கள் பாதிக்கப்படுகின்றன. சில சமயங்களில் ஒரு ஃபைப்ரஸ் டிஷ்யூ மூலம் சரிசெய்யப்படுகிறது.

    (c) மன அழுத்தம்: நமக்கு மிக அதிக அளவு மன அழுத்தம் ஏற்படும் போது முடி வளர்ச்சி தடைபடுகிறது (telogen தடைப்பட்டு telogen effluvium ஏற்படுகிறது). வளரும் பருவத்தில் உள்ள முடிக் கற்றைகள் வளர முடியாத இடத்திற்குப் போய் விடுகின்றன. அப்போது மயிர்க்கால்கள் வேகமாக முடியை இழுக்கத் தொடங்குவதால், நெற்றியின் இருபுறமும் முடி மிகவும் மெலியத் தொடங்குகிறது.

    இவ்வாறு மன அழுத்தத்தால் முடி கொட்டுவது பெண்களுக்கே பெரும்பாலும் ஏற்படுகிறது. அதற்கான காரணங்கள்:

    1. மகப்பேறுக்குப் பிறகு முடி கொட்டுதல் – பொதுவாகப் பல பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு முடி கொட்டுகிறது. முன் மண்டையில் நெற்றியின் இரு பக்கங்களில் இது ஏற்படுகிறது.
    2. டிராக்ஷன் அலோபேசியா – பெண்களில் பலர் தமது முடியை மிகவும் இறுக்கிப் பின்னல் போட்டாலோ, கட்டிக் கொண்டாலோ (ponytails) அப்போது மயிர்க்கால்களில் அளவுக்கு அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. நெற்றியின் இரு பக்கமும் உள்ள முடிக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு கொட்டத் தொடங்குகிறது.

     

    #இவ்வாறு நெற்றியின் இரு பக்கமும் முடி கொட்டுவதைக் கட்டுப்படுத்த PRP ஒரு அறுவை சிகிச்சையற்ற, பாதுகாப்பான சிகிச்சை முறையாகும். இதைப் பற்றி மேலும் அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்#

    நெற்றியில் இருபுறமும் முடி கொட்ட ஆரம்பிப்பதன் அறிகுறிகள்:

    இவ்வாறு தலையின் முன்பக்கம், நெற்றியின் இருபுறமும் முடி கொட்ட ஆரம்பிக்கும் போது:

    • முடி மெலிந்து போகும்
    • இருபக்கமும் அந்த இடத்தில் முடியின் எல்லைக்கோடு பின்னோக்கி செல்லும்
    • அந்தப் பகுதியில் தலைமண்டைப் பகுதி தெரிய ஆரம்பிக்கும்
    • முடி கொட்டும், முடி உடையும், முடி வலுவிழக்கும்
    • முன் நெற்றியின் நடுப்பகுதியில், முக்கோண வடிவில் முடி இருக்கும் (window’s peak) என்று குறிப்பிடப்படும்

    இவ்வாறு நெற்றியின் இருபுறமும் முடி கொட்டுவதற்கு சிகிச்சை உண்டா?

    நிச்சயமாக உண்டு. ஆனால் அறிகுறிகள் தோன்றும்போதே மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்பது அவசியம். ஆரம்பகாலத்தில், மயிர்க்கால்கள் துடிப்புடன், வளரக்கூடிய சக்தியுடன் இருக்க வாய்ப்பு உண்டு. இந்த மயிர்க்கால்கள் அந்த நிலையிலிருந்து மாறி விட்டால் (fibrosed) அறுவை சிகிச்சை இல்லாமல் அதை சரிசெய்ய முடியாது.

    உங்கள் முடியை நன்கு பரிசோதித்து, முடி கொட்டுவதற்கான காரணத்தையும், பிரச்சனையின் தீவிரத்தையும் புரிந்து கொண்ட பிறகு, தலைமுடி மருத்துவ நிபுணர் உங்களுக்குப் பொருத்தமான சிகிச்சையைப் பரிந்துரைப்பார். சில மருந்துகள், அந்த இடத்தில் தடவும் ஜெல், ஃபோம் போன்றவற்றை மருத்துவர் பரிந்துரைக்கலாம். முடி கொட்டுவதற்கான சரியான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு, எந்த முறையில் முடி கொட்டுகிறது என்பதையும் தெரிந்து கொண்டால் PRP போன்ற சிகிச்சையைக் கூட அவர் பரிந்துரைக்கலாம். ஆண்ட்ரோஜெனிக் அலோபேசியா போன்றவற்றுக்கு இந்த சிகிச்சை நல்ல பலன் தரும்.

    நெற்றிக்கு இருபுறமும் முடி கொட்டுவதற்கு என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?

    இவ்வாறு நெற்றிப் பகுதியில் முடி கொட்டுவதற்கு வீட்டு வைத்தியங்கள் சிறந்த பலனை அளிக்காது என்பதால் மருத்துவரின் ஆலோசனையை விரைவில் பெறுவது நல்லது. ஆரம்ப காலத்திலேயே இதைக் கவனித்து சரியான சிகிச்சை அளித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். கீழ்க்கண்ட சிகிச்சை முறைகளிலிருந்து உங்களுக்குப் பொருத்தமானதை மருத்துவர் கூறுவார் –

    1. பிளேட்லெட்கள் செறிந்துள்ள பிளாஸ்மா (PRP) சிகிச்சை – PRP ஒரு பாதுகாப்பான, அறுவை சிகிச்சை தேவையில்லாத சிகிச்சை முறை. நெற்றியின் இரு பக்கங்களிலும் முடி கொட்டுவதை நிறுத்த இந்த சிகிச்சை நல்ல பலன் அளிக்கும். சிகிச்சை பெறுபவரின் இரத்தத்திலிருந்தே பிளேட்லெட்களை எடுத்து சிகிச்சை அளித்து புது முடி வளர தூண்டப்படுகிறது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருபாலாருக்கும் நல்ல பலன் தரும்.
    2. மினாக்ஸிடில்: ரோகெயின் என்று பொதுவாக அழைக்கப்படும் மினாக்ஸிடில் மருந்து முடிவளர்வதற்கான FDA ஒப்புதல் பெற்ற மருந்தாகும். பாதிக்கப்பட்ட இடத்தில் தடவக் கூடிய ஃபோம் அல்லது திரவ வடிவில் இது கிடைக்கிறது. முன் நெற்றியில் முடி கொட்டுவதை தடுக்க உதவுகிறது. PRP சிகிச்சையின் பலன்கள் மேலும் சிறப்பாகக் கிடைப்பதற்காகவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தோல் மருத்துவர்கள் இதைப் பரிந்துரைக்கலாம்.
    3. ஃபினாஸ்டரைட்: பல்வேறு காரணங்களால் முடி கொட்டுவதற்கு சிகிச்சையாக, அந்த இடத்தில் தடவும் விதத்தில் இந்த மருந்தை மருத்துவர்கள் தருவார்கள். இதுவும் FDA ஒப்புதல் பெற்றது: ஆனாலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் (மாதவிடாய் நிறைவுபெறும் காலத்தில்) மரபுரீதியாக முடி கொட்டுவதை தடுக்கவும் மருத்துவர்கள் இதை பரிந்துரைப்பார்கள்.
    4. முடிமாற்றுப் பொருத்தும் சிகிச்சை (Temple hair transplant): இந்த சிகிச்சை முறையை ஆரம்ப காலத்தில் செய்ய மாட்டார்கள். ஏனெனில் ஆண்களுக்கு வயதாக ஆக இந்த இடத்தில் வழுக்கை விழுவது அதிகமாகும். ஆனால் வேறு எந்த சிகிச்சையும் செய்ய முடியாது என்ற நிலை வரும்போது இதை மேற்கொள்ளலாம்.

    முன் நெற்றியில் முடி கொட்டுதல் – சிகிச்சைக்கு முன்னும் பின்னும்

    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

    தலையின் முன்பகுதியில், நெற்றியின் இருபுறமும் விழும் வழுக்கை பகுதியில் நான் தலைமுடியை மொத்தமாக ஷேவ் செய்தால் மீண்டும் முடி வளருமா?

    தலைமுடியை ஷேவ் செய்தல், மொட்டை அடித்தல் போன்றவை தலைக்கு மேலே உள்ள / மேலே தெரியும் முடியை மட்டுமே நீக்கும். மயிர்க்கால்களை பாதிக்காது. அவ்வாறு செய்தபின் பிற இடங்களைப் போல நெற்றிப் பகுதியிலும் (temple) முடி வளரலாம். ஆனாலும் முடி அதிகம் கொட்டினாலும் ஆங்காங்கு வழுக்கைத் திட்டுக்கள் இருந்தாலும் தோல் மருத்துவரைப் உடனடியாகப் பார்க்க வேண்டும்.

    இப்பகுதியில் முடிகொட்டுவதை சரிசெய்ய முடியும். பெரும்பாலும் அங்கு முடி கொட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கும். தோல் மருத்துவரை ஆரம்பத்திலேயே பார்த்தால் அவர் அதைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சையை வழங்குவார். அதன் மூலம் சிறந்த பலன்களையும் பெற முடியும்.

    Was this article helpful?

    About The Author

    Dr.Lakshmi Durga

    Dr.Lakshmi Durga

    Dr. Lakshmi Durga M had completed her MBBS from the prestigious Dr. MGR Medical University in 2005 and DDVL from Manipal Academy Of Higher Education, Manipal, India in 2010. She also a member of Medical Council of India (MCI).

      Subscribe to Newsletter

      Expert guide to flawless skin and nourished hair from our dermatologists!